Thursday 12 January 2017

துர்கா - 8

துர்கா குற்றம்சாட்டப்பட்டவனைச் சிறையில் சென்று சந்திக்கிறார்.
துர்கா : சொன்னதெல்லாம் நினைவிருக்கு இல்லையா..
குற்றம்சாட்டப்பட்டவர் : ஆமாம் மேடம்.
துர்கா : போலீஸ் மிரட்டினதுனாலதான் கொன்னதா சொன்னேன்னு சொல்லுமத்ததை நாம் பாத்துக்கறேன்அப்பறம் முக்கியமா ஒரு விஷயம்... விடுதலை கிடைச்சதும் நீ என் கண்காணிப்பில் என் மருத்துவமனையில்தான் இருக்கணும்உன்ன்னோட நிலைமையை ஒரு நோய்ன்னுதான் சொல்லியிருக் கேன்செக்ஸ் ஆர்வம் மிகுதியா இருக்கு... சமூகம் இதை பெரிய விஷயமா எடுத்துக்காம இருந்தா கொன்னிருக்கவே மாட்டன்னுதான் சொல்ல்லியிருக்கேன்அதுதான் உண்மையும் கூட.
குற்றம்சாட்டப்பட்டவர் : ஆமாம் மேடம்உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன மேடம்... தினமும் ஒரு பொண்ணு இல்லாம என்னால தூங்க முடியாது மேடம்ஹார்மோன் அதிகம் சுரக்கறதுதான் என் பிரச்னையேஅந்தப் பொண்ணுங்க அதை போலீஸ்ல சொல்லி என்னை கம்பி எண்ண வைப்பேன்னு சொன்னதுனாலதான் கொஞ்சம் கோபப்பட வேண்டி வந்திருச்சு.
துர்கா : சரி... வெளிய வந்ததுக்குப் பிறகு உனக்கு சில தெரபி தர்றேன்பயப்படாத...
குற்றம்சாட்டப்பட்டவர் : என்னை விடுதலை செய்ய முடியுமா மேடம்.
துர்கா : இறந்த உடல்கள் ரொம்ப நாள் கழிச்சு கிடைச்சதுனால பாலியல் பலாத்காரம் பத்தின தடயங்கள் எதுவும் கிடைக்கலைஅவங்களோட உடம்புலயும் உன்னோட கை நக கீறல்களோ வேறு எந்த பாலியல் குற்றத் தடயங்களோ தெரியவில்லைஅதனால் உன்னை விடுவிப்பது எளிதுதான்.
குற்றம்சாட்டப்பட்டவர் : நல்லது மேடம்.
துர்கா விடைபெற்றுச் செல்கிறார்.
*
மறுநாள் வழக்கு தொடர்கிறது.
துர்கா சொன்னதுபோலவே நீதிமன்றம் மாற்றப்பட்டிருக் கிறதுகுற்றம் சாட்டப்பட்டவர் அழைத்து வரப்பட்டு நாற்காலி யில் அமரவைக்கப்படுகிறார்.
துர்கா விசாரணையை ஆரம்பிக்கிறார்.
துர்கா : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு உங்களுக்குத் தெரியுமல்லவா.?
குற்றம் சாட்டப்பட்டவர் : ஆமாம்.
துர்கா : உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனைகளும் தெரியுமல்லவா?
ஆமாம்.
நீங்களே அந்தக் குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறீர்கள் அல்லவா..?
குற்றம் சாட்டப்பட்டவர் சிறிது தயங்குகிறார்.
துர்கா : சொல்லுங்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர் : ஆமாம்ஆனால்...
துர்கா : என்ன ஆனால்..?
குற்றம்சாட்டப்பட்டவர் : அது காவலர்கள் என்னை அடித்து சொல்லவைத்த வாக்குமூலம்.
நீதிமன்றம் சலசலக்கிறதுஅரசு வழக்கறிஞர் குறுக்கிடுகிறார்.
அரசு வழக்கறிஞர் : மன்னிக்கவேண்டும் மை லார்ட்இவர் இப்போது சொல்வதுதான் பொய்.
துர்காகுற்றம் சாட்டப்பட்டவர் தன் தரப்பு வாதத்தை சொல்லி முடிக்க நீதிமன்றம் அனுமதிக்கவேண்டும் மேடம்.
நீதிபதி : அரசு தரப்பு வழக்கறிஞர் பின்னர் கேள்வி கேட்கலாம்தற்போது அமருங்கள்.
துர்கா : நன்றி மேடம். (குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்துநீங்கள் சொல்லுங்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர் : புறநகரில் பத்து ஏக்கர் நிலம் வாங்கியிருந்தேன்பிளாட் போட்டு விற்றுவந்தேன்அந்த மனையில் ஒரே ஒரு வீடு மட்டும் சாம்பிளுக்காகக் கட்டி வைத்திருந்தேன்அந்த வீட்டுக்கு நான் காலையில் மனை அல்லது வீடு வாங்க விரும்புபவர்களை அழைத்துச் செல்வேன்மாலையில் நகரத்தில் இருக்கும் என் வீட்டுக்கு வந்துவிடுவேன்இரவுகளில் அங்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாதுவீட்டைச் சில நாட்களில் பூட்டாமல் மறந்துவிட்டு வந்து விடுவேன்வேறு யாரோதான் கொன்று புதைத்திருக்கிறார்கள்.
துர்கா : இறந்தவர்கள் மூவருமே இறப்பதற்கு முன் மனை பார்க்கப் போவதாகத்தான் உறவினர்கலிடம் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர் : அது எனக்குத் தெரியாதுநான் அவர்களை சில நாட்கள் முன்பாக அழைத்துச் சென்றது உண்மைதான்ஆனால்அவர்கள் இறந்த நாட்களில் நான் அழைத்துச் செல்லவில்லை.
துர்கா : அவர்களாகவே போயிருப்பார்கள் என்கிறீர்களா..?
குற்றம் சாட்டப்பட்டவர் : ஆமாம்ஒரு முறை பார்ப்பவர்கள் அதன் பிறகு அவர்களுடைய நண்பர்கள்உறவினர்களை அழைத்துக்கொண்டு தாமாகவே போய் பார்த்துவிட்டு வருவது வழக்கம்அதுபோல் போனபோது அசம்பாவிதம் நடந்திருக்க லாம்.
துர்கா : அந்த மனைக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சென்று வருவீர்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர் : இது பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாதுவீடு வாங்க வருபவர்கள் தொடர்ந்து வந்தால் ஒரு வாரத்தில் மூன்று நான்கு தடவை கூடப் போவேன்இல்லையென்றால் பத்து நாட்களுக்கு ஒரு தடவைதான் போவேன்.
துர்கா : அங்கு மனை தவிர வேறு ஏதேனும் செய்துவந்தீர்களா?
குற்றம்சாட்டப்பட்டவர் : அங்கு மரக்கன்றுகள் நட்டிருந்தேன்.
துர்கா : அதை யார் பராமரித்தார்கள்?
பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.
துர்கா : அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் சிறூமி வடிவுக்கரசி அல்லவா...
குற்றம்சாட்டப்பட்டவர் : ஆமாம்.
துர்கா : உங்களுக்கு அன்று உணவு கொண்டுவந்து கொடுத்ததாகவும் அதன் பிறகுதான் காணவில்லையென்றும் சொல்லப்பட்டதே.
குற்றம்சாட்டப்பட்டவர் : அன்று நான் காலையில் 9 மணிக்கு மனைக்குப் போயிருந்தேன்நண்பர் ஒருவர் முக்கியமான விஷயமாக அழைத்தார்எனவே பத்து மணிக்கே திரும்பிவிட்டேன்நான் காலையில் அங்கு போனதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்பத்து மணிக்கு நான் என் வீடு திரும்பியது அவர்களுக்குத் தெரியவில்லைஉணவு கொடுத்து அனுப்பியிருக் கிறார்கள்அங்கு அப்போது என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
துர்கா : நீங்கள் அன்று பத்து மணிக்கு வீடுதிரும்பியதற்கு சாட்சி யாரேனும் உண்டா..?
குற்றம்சாட்டப்பட்டவர் : ரொம்ப நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு என்பதால் எதுவும் இல்லை.
துர்கா : ஆனால்சம்பவம் நடந்த அன்று நீங்கள் அங்கு போனது நிஜம்தான் இல்லையா...
குற்றம்சாட்டப்பட்டவர் : அப்படியும் உறுதியாகச் சொல்லமுடியாதுஅன்று போனேனா அதற்கு மறு நாள் போனேனா என்று சரியாகத் தெரியவில்லை.
துர்கா : ஆனால்உங்களுக்கு உணவு கொடுக்கத்தான் அந்தச் சிறுமி வந்ததாகவும் அதன் பின் காணவில்லை என்றும்தான் சொல்லியிருக்கிறார்கள் இல்லையா...
குற்றம்சாட்டப்பட்டவர் : ஆனால் என் காரைப் பார்த்துத்தான் சொன்னார்களா என்னைப் பார்த்துத்தான் சொன்னார்களா என்பது தெரியாது.
துர்கா : உங்களைப் பார்க்கவில்லைஉங்கள் காரைத்தான் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்உங்கள் காரை நீங்கள் மட்டும்தான் ஓட்டிச் செல்வீர்களா..? எனது காரில் நான் செல்லமாட்டேன்கால் டாக்ஸியில்தான் போவேன்.
துர்கா : அப்படியென்றால் வீடு பார்க்க வந்த யாரேனும்மாகவும் இருந்திருக்கலாம் அல்லவா...
குற்றம்சாட்டப்பட்டவர் : ஆமாம்அதற்கும் வாய்ப்பிருக்கிறதுபொதுவாக யாரேனும் கரில் வந்தால் நானும் உடன் வந்திருப்பேனென்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
துர்கா : நல்லதுவேறு கேள்விகள் இல்லை மேடம்.
அரசு வழக்கறிஞர் எழுந்துகொள்கிறார்.
அரசு வழக்கறிஞர் : நான்கு பேரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக நீங்கள்தானே முன்னால் வாக்கு மூலம் கொடுத்திருந்தீர்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர் : அது காவலர்கள் மிரட்டிச் சொல்ல வைத்த வாக்குமூலம்.
அரசு வழக்கறிஞர் : அவர்கள் ஏன் உங்களை மிரட்ட வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர் : அதுதான் எனக்கும் புரியவில்லை.
அரசு வழக்கறிஞர் : உங்களுடைய கூற்றுப்படி அந்த நான்கு பேரும் கொல்லப்பட்டபோது நீங்கள் அங்கு இருந்திருக்கவே இல்லை.
குற்றம்சாட்டப்பட்டவர் : ஆமாம்நன் அங்கு சென்ற நாட்கள்போன கால் டாக்ஸிகள் எல்லாம் என் அலுவலகப் பதிவேட்டில் இருக்கின்றனசம்பவம் நடந்த நாட்களில் நான் ஊரிலேயே இருந்திருக்கவில்லை.
அரசு வழக்கறிஞர் : அப்படியானால் உங்கள் வீட்டு மதில் சுவருக்குள் பிணங்கள் எப்படி வந்தன?
குற்றம்சாட்டப்பட்டவர் : அதுதான் எனக்கும் தெரியவில்லை.
அரசு : இறந்த மற்ற மூன்று பெண்களுமே அந்த மனையைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர் : ஆனால்அந்த தினத்தில் எங்கள் அலுவலகத்துக்கு அவர்கள் பேசியதாக எந்தப் பதிவும் இல்லைநானோ என் அலுவலகத்தினரோ யாரும் அவர்களை அழைத்துச் செல்லவில்லை.
அரசு வழக்கறிஞர்ஆக நீங்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை.  போஸ்ட்மர்டம் அறிக்கையிலும் பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான தடயங்கள் இல்லைஇப்படியிருக்கையில் எதற்காக பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக வாக்குமூலம் தந்தீர்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர் : அதான் சொன்னேனே... காவலர்கள் மிரட்டினார்கள்வழக்கை எளிதாக முடிக்க விரும்பினார்கள்.
அரசு வழக்கறிஞர்அப்படி வாக்குமூலம் கொடுத்தால் தூக்கு தண்டனை கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா..?
குற்றம்சாட்டப்பட்டவர் : ஒப்புக்கொள்ளவில்லையென்றால் நாங்களே அடித்துக் கொன்றுவிட்டு நீ தூக்குப் போட்டு இறந்ததாகச் சொல்லிவிடுவோம்குற்றத்தை ஒப்புக்கொண்டால் ஆயுள் தண்டனையாவது கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னர்கள்வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன்.
அரசு வழக்கறிஞர்வேறு கேள்விகள் இல்லை யுவர் ஆனர்.
நீதிபதி வழக்கை ஒரு வாரம் ஒத்தி வைக்கிறார்.
*
துர்கா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவனை மன்னிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறாள்மகளையும் மனைவியையும் பறிகொடுத்த நபர்கள் முதலில் இவளை அடிக்கவருகிறார்கள்மெள்ள அவர்களுக்கு எடுத்துச் சொல் கிறாள்.
துர்கா : இங்க பாருங்கம்மா... இறந்தவங்க இறந்துட்டாங்கஇவனைக் கொல்றதுனால போன உசிரு திரும்பி வரவா போகுது.
இறந்த பெண்ணின் தாய் : வேற உசிர்களாவது போகாம தடுக்கலாம்ல.
துர்கா : அதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லையேம்மா...
தாய் : தண்டனை கடுமையா இருந்தாத்தான் குற்றம் குறையும் இல்லையாம்மா... முஸ்லிம் நாடுகள்ல பருங்க... திருடினா கையை வெட்டுவாங்ககொலை செஞ்சா கல்லால அடிச்சே கொன்னுருவாங்க.
துர்கா : அங்க வழங்கப்படறது நீதியே இல்லைம்மா... இன்னொன்னு சொல்லட்டுமா... ஒரு பொண்ணை பாலியல் பலாத்காரம் செஞ்ச வழக்குல ஆண் மனசுல பாலியல் எண்ணத்தைத் தூண்டின  குத்தத்துக்கு அந்தப் பொண்ணுக்கு ஐம்பது சாட்டையடி கொடுத்தாங்க...
தாய் : இது என்ன அநியாயமா இருக்கு.
துர்கா : அங்க இருக்கற நீதியே அநியாயம்தான்மா... உலகத் துல பல நாடுகள்ல மரண தண்டனையை தடை செஞ்சிருக் காங்கஅது வந்து சட்டபூர்வமாகச் செய்யப்படற கொலைம்மாஒருதனி நபர் கொல்லலாம்அரசாங்கம் கொல்லலாமாம்மா..?
தாய் : சரி... அப்போ ஆயுள் தண்டனையாவது கொடுக்கலாம்ல.
துர்கா : அது சரிதான்... இதுல நாம பாக்கவேண்டிய விஷயம் என்னன்னா அவன் அந்தக் கொலைகளைச் செய்யவே இல்லைன்னுதான் தெரியுது.
தாய் : நீங்க சொல்றதை ஏத்துக்க முடியாதும்மா... நீங்க நேரடி சாட்சி இல்லைங்கறதுனால இப்படி சொல்றீங்ககொன்னது அவன்தான்எந்த சந்தேகமும் இல்லைசமூகம் எதிர்க்கும்னு தெரிஞ்சா செய்யாம இருக்கணும்செஞ்சிட்டு வெளிய தெரியாம இருக்கறதுக்காக கொன்னுருவானாமாமீறறதே தப்பு... அதை மறைக்க கொலை பண்ணறது அதைவிடப் பெரிய தப்புஇவ்வளவு பேசறீங்களே... உங்க வீட்ல யாருக்காவது இப்படி ஆகியிருந்தா மன்னிப்போம் மறப்போம்னு சொல்லுவீங்களா...
துர்கா : சொல்லுவேம்மா... அப்படித்தான் சொல்றேம்மா...
தாய் (அதிர்ந்துபோய்) : என்ன சொல்றீங்க?
துர்கா : மூணாவதா அடையாளம் தெரியாத பொணமாக் கிடக்கறது வேற யரும் இல்லைம்மா... என் கூடப் பிறந்த தங்கைதாம்மா...
தாய் : என்னம்மா நீ... உன் தங்கையைக் கெடுத்துக் கொன்னவனை விடுதலை பண்ணணும்னு சொல்றியே... உனக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே கிடையாதா..?
துர்கா : அது இருக்கறதுனாலதானம்மா அவனை விடுதலை செய்யணும்னு சொல்றேன்.
தாய் : போதும்மா... இதுக்கு மேலயும் உன் கிட்ட பேசறதுல அர்த்தமே இல்லை (துர்காவுடன் வந்த பெண்மணியைப் பார்த்துஎன்னம்மா... உங்களைப் பார்த்தா கிராமத்துப் பொண்ணாத் தெரியுது... இந்த வக்கீலம்மாதான் பெரிய படிப்பு படிச்சு என்னவெல்லாமோ பேசுதுநீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதாம்மா.
கூடவந்த பெண்மணி : நானும் மன்னிக்கத்தானம்மா சொல்லறேன்.
தாய் (கோபத்தில்) : வீட்டை விட்டு வெளிய போங்க... கொலைகாரன் கிட்ட காசு வாங்கிட்டு எங்க மனசைக் கலைக்க வந்திருக்கீங்களா... உங்களுக்கெல்லாம் நல்ல சாவே கிடைக்காது. 30 வயசுப் பொண்ணைப் பறி கொடுத்துட்டு நிக்கறேம்மா... உங்களுக்கு அந்த சோகம் ஒரு நாளும் புரியது.
உடன் வந்த பெண்மணி : நல்லா புரியும்மா... நானும் என் பொண்ணைப் பறி கொடுத்தவதான்உங்களுக்காவது உங்க பொண்ணு 30 வயசு வரைக்கும் வாழ்ந்திருந்தாஎன் பொண்ணு பத்து வயசு கூட ஆகலைம்மா...
தாய் (ஏதோ புரிந்தவர் போல் அதிர்ந்து) : நீங்க...
உடன் வந்த பெண்மணி : வடிவுக்கரசியோட அம்மா... அந்த வீட்டுல இருந்த கிடைச்ச பொணங்கள்ல என் பத்து வயசுப் பொண்ணும் இருந்தாம்மா...
தாய் (சிறிது நேரம் என்ன பேச என்றே தெரியாமல் திணறுகிறார்); இவ்வளவு பெரிய வேதனையைத் தாங்கிக்கிட்டு எப்படிம்மா அவனுக்குப் பரிஞ்சு பேச முடியுது.
துர்கா : அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தா போன உசிருங்க திரும்பி வந்துரும்னா ஒண்ணு என்ன 100 தடவை கூட அவனைத் தூக்குல போடலாம்ஜெயில்ல போடலாம்ஆனாநடந்தது எதுவும் நல்லதா இல்லைங்கறதுக்காக நடக்கப் போறதையும் நல்லதில்லாததா ஆக்கவேண்டாம்மா... யோசிச்சுச் சொல்லுங்கநீங்கள்லாம் வந்து அவனை மன்னிக்கும்படிச் சொன்னா எப்படியும் விடுதலை கிடைச்சிடும்அதுக்குப் பிறகு அவன் என் ஆஸ்பத்திரிலதான் இருப்பான்அவனை நல்ல மனுஷனா நான் மாத்திக்காட்டறேன்.
அந்தப் பெண்ணின் தாய் மெள்ள சம்மதிக்கிறாள்.
*

No comments:

Post a Comment