Tuesday 24 January 2017

சல்லிகட்டு புரட்சி - 3

சல்லிகட்டு புரட்சி - 3

தமிழ் மக்கள் இனிமேல் செய்யவேண்டியதெல்லாம் சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பிரச்னைகளுக்கு அவை ஆரம்பிக்கும் நிலையிலேயே தீர்வுகளைக் கண்டடைய முற்படுவதும், மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைத்து அல்லது அவர்களை நம்பிக்கொண்டிருப்பதை விடுத்து பஞ்சாயத்து அலகுகளைப் பலப்படுத்துவதும்தான் மிகவும் அவசியம். இந்த சல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு அந்தந்தப் பஞ்சாயத்து அனுமதி கொடுத்தாலே போதும் என்ற அரசியல் சாசன உரிமையை எடுத்துச் சொல்ல ஒருவர்கூட இல்லாமல் போனது வேதனையிலும் வேதனையே.

அரசு இந்தப் பிரச்னையைக் கையாண்ட விதத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் புத்திசாலித்தனமாக எதுவும் இல்லை. மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்கு என்ற பட்டியலில் பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துரையின் பேரில் 2011-ல் சேர்த்தது. அதை பா.ஜ.க. அரசு நீக்கி சட்டம் இயற்றியது. ஆனால், விலங்குகள் நல வாரியத்தைக் கலந்தாலோசிக்காமல் அந்த சட்டத்தை இயற்றியது தவறு என்று நீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது. மத்திய பாஜக அரசால் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெற முடியவில்லை. ஏனென்றால், விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் காங்கிரஸால் நியமிக்கப்பட்டவர். அதோடு பீட்டா அமைப்பின் செல்வாக்கு விலங்குகள் நல வாரியத்திலும் ஆழமாக உண்டு. விலங்குகள் நலவாரியம் அனுமதி கொடுக்காததைப் பாராட்டி மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் 2014-தேர்தல் அறிக்கைகூட சல்லிக்கட்டை நிரந்தரமாகத் தடை செய்வோம் என்றுதான் சொல்கிறது.

அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று போராடிய சுப்பிரமணியம் சுவாமி சல்லிக்கட்டு இந்துக்களின் பாரம்பரியப் பண்டிகை; பலம் மிகுந்த நாட்டுப் பசுக்களை உருவாக்க அந்தப் போட்டிகள் அவசியம். எனவே அதை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று 2016 டிசம்பரில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார். அதுவரையில் சல்லிக்கட்டு இந்துப் பண்டிகை என்ற வாதம் யாராலும் வைக்கப்பட்டிருக்கவில்லை. எந்தவொரு மதத்தினரின் உணர்வையும் புண்படுத்தக்கூடாது என்று அரசியல் சாசனம் சொல்வதால் நீதிமன்றத்துக்கு தடையை நீக்குவதைத் தவிர வேறு வழியெதுவும் இல்லை என்ற நிலைவந்தது. ஆனால், காங்கிரஸின் செல்லப்பிள்ளையான நீதிபதி மிகவும் தந்திரமாக தீர்ப்பெதுவும் வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மாநில அரசு ஒரு அவசரச் சட்டம் கொண்டுவந்து நீக்கிவிடமுடியும் என்று 2015லேயே நிர்மலா சீதாராமன் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அதை யாரும் பொருட்படுத்தவே இல்லை. இப்போது அதுதான் நடக்கவும் செய்திருக்கிறது. எனவே, தமிழக அரசு இதற்கு முன்பே செய்திருக்க வேண்டிய ஒன்றைச் செய்திருக்கிறது. அதுவும் மக்கள் இவ்வளவு பெரிதாகப் போராடிய பிறகுதான் செய்திருக்கிறது என்பதால் அதை அப்படியொன்றும் பாராட்டிவிட முடியாது.

அடுத்ததாக, இந்த மக்கள் எழுச்சியை தமிழக அரசு கையாண்ட விதம் மிகவும் மோசமாகவே இருக்கிறது. ஓரிரு நாட்களிலேயே இந்த மக்கள் எழுச்சியை மே 17, ம.க.இ.க. போன்ற தேச விரோத சக்திகள் கைப்பற்றிவிட்டன என்பது தெரிந்த நிலையிலும் ஊடகங்களில் அவர்கள் அனுமதிக்கும் நபர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்த நிலையிலும் அதை வேடிக்கை பார்த்தது மிகப் பெரிய தவறு. இந்திய அரசு குறித்தும் மோதி குறித்தும் பேசப்பட்ட அவதூறுகளை கை கட்டி வேடிக்கை பார்த்தது அதைவிடப் பெரிய தவறு. போராட்ட இலக்கு எதுவோ அதை மட்டுமே பேசுங்கள் என்றோ ஊடகங்களுக்கு அனைத்து தரப்பு போராட்டக்காரர்களின் குரலையும் வெளிப்படுத்த வாய்ப்பு கொடு என்றோ சொல்லி நிலைமையைச் சீர்படுத்தியிருக்கவேண்டும்.

சாதா நாட்களில் ஊடகங்களில் அறிவுஜீவிகள் கலந்துகொண்டு நடக்கும் Talk Dog show-க்களில் எப்படி வலது சாரி கருத்தாளர்களை ஓரங்கட்டுவார்களோ அதுபோலவே இந்த மக்கள் எழுச்சியிலும் உண்மையான போராளிகளின் குரலை ஓரங்கட்டிவிட்டிருக்கிறார்கள். இந்தத் தவறு போதாதென்று விஷமிகளைச் சரியாக இனங்கண்டு பிடிக்கத் தெரியாத கையாகாததனத்தோடு, தமிழக காவல்துறையினர் தாமே பல தவறுகளை அப்பட்டமாக கேமராக்கள் முன்னால் செய்தும் காட்டியிருக்கிறார்கள். பெண் காவலர் தீவைக்கும் காட்சியெல்லாம் காவலர் பக்கம் இருந்து எடுத்த கேமராவில்தான் பதிவாகியிருக்கின்றன. போராட்டக்காரர்கள் மத்தியில் ஊடுருவிய விஷமிகளைவிட காவல் துறைக்குள் ஊடுருவியிருக்கும் இந்த விஷமிகள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.

உரிய காலத்தில் சட்டம் கொண்டுவரத் தவறியமை, கொண்டுவந்த சட்டத்தையும் குழப்பமாக முன்வைத்தமை, மக்கள் எழுச்சியை ஊடகங்களும் தேச விரோத சக்திகளும் திசை திருப்பியதை வேடிக்கை பார்த்தமை, காவல் துறையின் அத்துமீறல்கள் என எல்லாமே மிக அபாயமான திரைப்படத்தின் அருமையான திரைக்கதைபோல் இருக்கின்றன.

மத்திய அரசின் பிரதிநிதியாக மாறிவிட்டிருக்கும் பன்னீர் செல்வத்தை அப்புறப்படுத்த சசிகலா அன்கோ நடத்தும் திரைமறைவு நடவடிக்கைகள்தான் இவை என்று யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், தேச விரோத முழக்கங்களுடன் வரத் தொடங்கியிருக்கும் புதிய புரட்சியாளர்கள் மீது நல்லெண்ணம் குவியச் செய்ய சசிகலா - பன்னீர் செல்வம் அன்கோ நடத்தும் நாடகத்தின் காட்சிகள்தான் இவை என்று நம்பவும் இடமிருக்கின்றன. பலுசிஸ்தான், ஆஸாத் காஷ்மீர் பகுதிகளில் மோதி அரசு முன்னெடுக்கும் ராஜாங்க நடவடிக்கைகளினால் இந்தியாவுக்கு ஆதரவான குரல்கள் அங்கு எழத் தொடங்கியிருக்கின்றன. இதனால் ஆத்திரமுற்றிருக்கும் இஸ்லாமிய பாகிஸ்தானிய சக்திகள் இந்தியாவில் பிரிவினை வாதங்களை வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதற்கு தமிழகம் போல் தோதான களம் வேறு எது இருக்க முடியும்? 2009-ல் இருந்தே தமிழகத்தில் பிரிவினை வாதச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டும் எந்த எழுச்சியும் இல்லாமல் முடங்கிக் கிடந்த தமிழ் தேசியவாதிகளுக்குக் கிடைத்த வயாகராவாக இந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியிருப்பதுபோல் தெரிகிறது. சமீப இரண்டு ஆண்டுகளில் இந்து இயக்கத் தலைவர்களை கொடூரமாக வெட்டி வெட்டிக் கொன்றவையெல்லாம் பச்சைத் தமிழகத்து வீச்சருவாள்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது சில கோடிட்ட இடங்கள் ரத்தத்தால் நிரம்புகின்றன.


இந்திய தேசியத்தை எதிர்த்து உருவாகியிருக்கும் இந்த தமிழ் தேசியப் புரட்சியில் மெரினா கடற்கரையில் கூடிய இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது; ஆனால், தேசியக் கொடியை ஏந்தி வந்த ஏ.பி.வி.பி.யினர் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். சல்லிக்கட்டுத் தெய்வங்களான மாரியம்மனும் அய்யனாரும் முருகனும் ஓரங்கட்டப்பட்டு இது வெறும் தமிழ் அடையாளமாக அதுவும் இந்து மத நீக்கம் - இஸ்லாமியத் திணிப்பு என முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து தடைகளையும் போட்ட காங்கிரஸ் - திமுகவை விட்டுவிட்டு தடைகளை நீக்கப் பெருமுயற்சி எடுத்துவரும் இந்துத்துவ பி.ஜே.பி.தான் இந்தத் தடைக்குக் காரணமென்று ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன. உருவாகப் போகும் தமிழ் தேசியம் எப்படி இருக்கும் என்பதை இவையெல்லாம் கோடிகாட்டுகின்றன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யோ தமிழகத்து ஃபைல்கள் எல்லாம் தன் மேஜையில்தானே என்று ”புன்னகை மன்ன’னாக அமர்ந்திருப்பதுபோலவும் தமிழ் தேசிய ஆதரவாளரான சசிகலா நடராஜனின் ஆட்சி ஏற்படுவதைத் திறம்படத் தடுத்துவருவதாகப் பெருமைப்பட்டுக்கொண்டிருப்பதுபோலவும் தெரிகிறது. ஆனால், வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லி சந்தன மாலை அணிவிக்க வந்தவரின் இடுப்பில்தான் பெல்ட் பாம் இருந்ததுபோல், மத்திய அரசின் வசம் இருக்கும் தமிழக பைல்களின் ஓரங்களில்தான் சயனைடு தடவப்பட்டிருக்கிறது என்று அவர்களுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

சல்லிகட்டு புரட்சி - 2

சல்லிகட்டு புரட்சி - 2

சல்லிக்கட்டு விஷயத்தை எடுத்துக்கொண்டால் மக்கள் திரள் முதலில் போலிக் கலாசாரப் பெருமிதத்தை முன்வைத்து ஓர் அணியில் திரண்டது. மாற்றுக் கருத்துகள் எல்லாம் படு கொடூரமாக ஒடுக்கப்பட்டன. அல்லது அவற்றுக்கு எந்தவொரு சிறு இடம் கூடத் தரப்படாமல் ஓரங்கட்டப்பட்டன. அந்த மக்கள் திரளின் கோரிக்கையை உலகுக்குத் தெரிவிக்கும் நோக்கில் அங்கு வந்த ஊடகத்தினர் முதல் ஓரிரு நாட்களுக்கு அந்த மக்களின் குரலையே உலகுக்குத் தெரிவித்தனர். அதன் பிறகு அந்தக் கூட்டத்துக்குள் பல்வேறு பொலிட் பீரோக்கள் ஊடுருவின. ஊடகங்களின் முன் யார் பேசவேண்டும்... என்ன பேசவேண்டும் என்பதை அவர்கள் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். தமது அதீத வெறுப்பு மற்றும் மிகைப் பொய் கருத்தாக்கங்களினால் மக்கள் ஆதரவைப் பெற முடியாமல் தவித்து வந்த அவர்கள் மக்கள் ஒரு விஷயத்தின் கீழ் கூடியதும் அதற்குள் ஊடுருவி தமது கோரிக்கைகள்தான் மக்களின் கோரிக்கைகளும் என்ற போலித் தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் ஊடகங்களில் தமது கொள்கைகளைப் பேசுபவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர். மற்றவர்களை ஓரங்கட்டினர். இது பிரிவினைவாத இயக்கங்களும் ஊடகங்களும் இணைந்து செய்த அப்பட்டமான பாசிஸ நடவடிக்கை.

இந்தப் புரட்சியை வழக்கம்போல் அறிவுஜீவிகள் சமூகப் போராளிகள், அரசியல் விமர்சகர்கள் எல்லாரும் அவரவர் வழி நின்று பாராட்டினார்கள். தமிழகம் தொடர்ந்து மத்திய, மாநில ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டதன் வெளிப்பாடே இந்த மக்கள் எழுச்சி என்று கனமான பனங்காயை புரட்சிக் குருவியின் தலையில் ஏற்றிவைக்கிறார்கள். உண்மையில் இந்தப் போராட்டம் இரண்டு காரணங்களினால் தவறு. முதலில் இப்படியான போராட்ட வடிவமும் அதன் தீவிரமும் தவறு. இரண்டாவது போராட்டத்துக்கான காரணங்களும் தவறு.

முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைய திடீர் ஆவேசம் என்பது ஒருவித மன நோயின் வெளிப்பாடு போல் இருக்கிறது. கவுரவமாகச் சொல்வதென்றால், மலை உச்சியில் சிறு ஊற்றாக ஆரம்பித்தபோது தத்தமது வயல்களுக்கு திருப்பிவிடத் தவறியவர்கள் அந்த ஊற்று நீரோடையாகி, ஆறாகி, ஆறு பல சேர்ந்து காட்டாறாகிப் பாய்ந்து பெருக்கெடுக்கும் இடத்தில் மணல் மூட்டைகள் போட்டு எங்கள் நிலங்களுக்குத் திரும்பி வா என்று சொல்வது போன்றது.

மக்களாட்சியில் பஞ்சாயத்து, வட்டம், மாவட்டம், மாநிலம், தேசம் என அதிகார அடுக்குகள் பல்வேறு அதிகாரப் பங்கீடுகளுடன் பல்வேறு செயல்களைச் செய்யும் பொறுப்புகளுடன் இருக்கின்றன. சின்னஞ்சிறு அலகுகளை சரிவரச் செயல்படச் செய்வதன் மூலம் ஒட்டு மொத்த அரசு எந்திரத்தையும் தனது நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. நல்ல ஆளா என்பதைப் பார்க்காமல் நம்ம ஆளா என்று பார்த்தும் பிச்சைக் காசு வாங்கியும் ஊழல்வாதிகளையே தொடர்ந்து தேர்ந்தெடுத்தல், நல்லவர்களை ஜோகக்ர்களாக ஓரங்கட்டுதல், சுய லாபத்துக்கு ஊழல் மூலம் சட்ட திட்டங்களை வளைத்துக்கொள்ளுதல், முறையற்ற சலுகைகளை எதிர்பார்த்தல் என அனைத்து தவறுகளையும் செய்தது இதே மக்கள்தான்.

சுமார் 40-50 ஆண்டுகளாக இப்படியான தவறுகளைத் தொடர்ந்து செய்துவிட்டு ஒரு இனிய அதிகாலையில், ”உலகமே உன்னை வஞ்சிக்குது பார்’ என்று மிகைக் கூக்குரல் எழுப்பியவர்களின் பின்னால் நின்றுகொண்டு உணர்ச்சி மேலிட உரத்த குரலில் கத்தியதென்பது ஒரு தவறை அதைவிடப் பெரிய இன்னொரு தவறால் சரி செய்யப் பார்த்ததுபோல் ஆகிவிட்டது. முட்செடிகளுக்கு நீரூற்றி உரமிட்டு கண் விழித்துப் பாதுகாத்து வளர்த்துவிட்டு அறுவடை நாளில் அது ஏன் மல்லிகை மலர்களைச் சொரியவில்லை என்று தீ வைத்துக் கொளுத்தப் புறப்படுவது போன்ற முட்டாள்த்தனம் இது. அதுமட்டுமல்லாமல் காவல் துறை, நீதித்துறை, நாடாளுமன்றம் என்றெல்லாம் அதிகார அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றின் துணையுடன் அனைத்துச் செயல்பாடுகளும் குறைகளுடனும் நிறைகளுடனும் நடந்துவரும் நிலையில் சட்டென்று ஒருநாள் அவை அனைத்தையும் ஒரேயடியாகத் தூக்கி எறிவது மிகப் பெரிய தவறு. உண்மையில் அப்படியான எந்தவிர அரசியல் புரட்சிக்கும் தயாராகாத மக்களை சில புரட்சியாளர்கள் தமது நோக்கங்களுக்குத் திருப்பிக்கொண்டுவிட முடியும் என்று நினைத்துச் செய்த கூத்துக்களே இவை.   

இரண்டாவதாக நம் போராளிகள் சொல்வதுபோல் உண்மையிலேயே நாம் பள்ளத்தில் வீழ்ந்துகிடக்கிறோமா?

யாரைக் கேட்டாலும் நமது ஆவினங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்... ஈழத்தில் வஞ்சிக்கப்பட்டோம்... அணு உலையால் வஞ்சிக்கப்பட்டோம்... மீத்தேன் வாயுத் திட்டத்தால் அழிய இருந்தோம்... காவிரி விவகாரத்தில் வஞ்சிக்கப்பட்டோம்... விவசாயிகள் கொத்து கொத்தாக இறந்துவருகிறார்கள்... மூன்று அப்பாவிகளை விடுதலை செய்ய முடியவில்லை... என வரிசையாகப் பல வஞ்சிப்புகளைப் பட்டியலிடுகிறார்கள். இவை எல்லாவற்றிலும் போராளிகள் தரப்பு நியாயமும் உண்டு. பொதுவான நியாயமும் உண்டு.

ஆவினங்களின் அழிவென்பது இரண்டு வகைகளில் நடக்கிறது. ஒன்று : டிராக்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் காளைகளின் தேவை குறைந்துவிட்டது. எனவே, பத்திருபது வருடங்களுக்கு முன்புவரை பல லட்சமாக இருந்த காளைகள் இப்போது சில ஆயிரங்களாகக் குறைந்துவிட்டன. இது சல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதற்கு முன்பே நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு. இதற்கும் சர்வதேசச் சதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அடுத்ததாக ஏ-1, ஏ-2 பால் பற்றிய விஞ்ஞான விளக்கங்கள். இது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் நாட்டுமாடுகளை அழியாமல் காப்பதென்றால் சல்லிக்கட்டு நடத்தித்தான் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுகுனா சிக்கன் போன்ற நிறூவனங்களும் ஈமு கோழி வளர்ப்பு நிறூவனங்களும் செய்வதுபோல் கிராமப்புற மக்களுக்கு அரசு கன்றுகளைத் தந்து புல்வெளிகளுக்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டும். அந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணத்தை எரிவாயுவாகவும் நிலங்களுக்கு உரமாகவும் பயன்படுத்திக்கொள்ளுதல் என விவசாயத்தைத் தன்னிறைவுச் செயல்பாடாக வளர்த்தெடுக்கவேண்டும். அவையெல்லாம் உண்மையிலேயே பிரச்னை தீரவேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் செய்யவேண்டிய வேலைகள். சல்லிக்கட்டு நடத்தித்தான் வீரியமான காளைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற பழங்கால வழிமுறை இன்றைய விஞ்ஞான யுகத்தில் தேவையில்லை. எனவே, சல்லிக்கட்டு ஒரு பழம் பெரும் பாரம்பரியம்... அது தொடரவேண்டும் என்று சொல்வது வேறு. நாட்டு மாடுகளைக் காப்பாற்ற அது ஒன்றே வழி என்று சொல்வது வேறு. உண்மையில் நாட்டுமாடுகளை அழிப்பதற்காக சல்லிக்கட்டை சர்வ தேச சமூகம் தடை செய்ய விரும்புவதாகச் சொல்வதில் எந்த தர்க்க நியாயமும் இல்லை.

ஈழத்தை எடுத்துக்கொண்டால், சக போரட்டக்காரர்களைக் கொன்ற, இஸ்லாமியர்களை விரட்டியடித்த, கிழக்குப் பகுதி தமிழர்களால் ஓரங்கட்டப்பட்ட, பேச்சுவார்த்தைகளின் அடிப்படை விதிகளைக்கூடப் புரிந்துகொள்ளாத, மிக மிகத் தவறான வன்முறைப் பாதையை முன்னெடுத்த ஒரு தலைமையின் தவறுகளும்தான் ஈழ வீழ்ச்சிக்குக் காரணம் என்ற உண்மையை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு தமிழர்கள் யாரால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது புரியக்கூடும்.

தனது தேசத்தின் மிகப் பெரும் தலைவனைக் கொன்றதற்குத் துணை நின்ற மூன்று அப்பாவிகளின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தச் சொல்லி போராட முழு சுதந்தரம் தந்திருக்கும் அரசைத்தான், அதனால்தான் நாம் எதிர்க்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளக்கூடும் லட்சியத் தலைவனாக முன்வைக்கப்படும் மாவீரர் பிரபாகரர், எதிர் தரப்புக்கு சாதகமாக நடந்துகொண்டதாலோ அப்படி நடந்துகொண்டதாக சந்தேகம் வந்ததாலோ அல்லது அப்படி நடந்துகொண்டதாகப் பொய்ப்பழி சுமத்தியோ இன்ன பிற குற்றங்களைச் செய்ததாகச் சொல்லியோ மின் கம்பத்தில் அடித்துக் கொன்று தூக்கிலிட்டவர்களின் எண்ணிக்கையை ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டு இந்திய தேசியத்தின் நீதிமன்றத்தை ஒருவர் பழிக்கவேண்டும்.

முந்தைய தலைமுறைப் பாதுகாப்பு வசதிகள்கொண்ட கல்பாக்கம் அணு மின் நிலையம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எந்தவிதப் பெரிய விபத்தும் இன்றி செயல்பட்டு வருகிறது. கூடன் குளம் அணு மின் நிலையம் பல மடங்கு பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஓர் அமைப்பு. அதிகம் செலவானாலும் பரவாயில்லை அணு மின் நிலையத்தைவிட பாதுகாப்பான மின்சார உற்பத்தி வழிமுறைகளை நாம் முன்னெடுக்கவேண்டும் என்று போராடுவதில் நிச்சயம் நியாயம் இருக்கத்தான்செய்கிறது. ஆனால், அது தமிழினத்தை அழிக்க வட இந்தியர்கள் செய்த சதி என்ற பார்வையில் நியாயம் என்ற நான்கெழுத்துச் சொல்லில் ஒரு எழுத்துகூட இல்லை. அதோடு அதே மத்திய அரசுதான் தென்மாவட்டத்தில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி மையத்தை ஆரம்பித்தும் வைத்திருக்கிறது. அணு உலையை எதிர்த்தவர்கள் சூரிய மின்னுலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவே இல்லையே ஏன்..?

காவிரி பிரச்னையை எடுத்துக்கொண்டால், காமராஜர் ஆட்சிக்குப் பிறகு பெரிய நீராதார, நீர்பாசனத் திட்டம் எதையுமே முன்னெடுக்காத திராவிட ஆட்சியாளர்களை அவர்கள் கொடுத்த 500க்கும் ஆயிரத்துக்கும் மயங்கி தேர்ந்தெடுத்துவிட்டு இப்போது வந்து புரட்சி செய்வதில் எந்த நியாயமும் இல்லை..தமிழ் புலவன் சீத்தலைச் சாத்தனார் தான்செய்த ஒவ்வொரு தவறுக்கும் தலையில் எழுத்தாணியால் குத்திக்கொள்வார் என்று சொல்வார்கள். அவருடைய ஊர் பெயரைத் தவறாகப் புரிந்துக்கொண்டு சொல்லப்படும் கட்டுக்கதைதான் என்றாலும் ஒருவேளை தமிழ் மக்கள் அதுபோல் நடந்துகொள்வதென்று முடிவெடுத்தால் ஒவ்வொருவருடைய தலையும் ரத்தக் களறியாகத்தான் இருக்கும். நாம் செய்யாத தவறை விட நம் அரசுகள் பெரிய தவறெதுவும் செய்துவிடவில்லை. தவறையும் பொறுப்பையும் உணர்வதில் இருந்து தொடங்குகிறது சீர்திருத்தத்தின் புரட்சிகள்.

உண்மையில் காவிரியின் நீளத்தை எடுத்துக்கொண்டால் அது கர்நாடகாவில் 320 கி.மீ பாய்கிறது. தமிழகத்தில் 420 கி.மீ. பாய்கிறது. பயன்பாட்டு அளவில் பார்த்தால் தமிழகம் 80% நீரைப் பயன்படுத்திக்கொள்கிறது. கர்நாடகா 20% நீரைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஏக்கர் கணக்கில் சொல்வதென்றால் தமிழகத்தில் பாசன வசதி பெறும் பகுதி 1000 ஏக்கர் என்றால் கர்நாடகாவில் பாசனம் பெறும் பகுதி 300-400 ஏக்கர்தான். காலகாலமாக இப்படியான நிலையே இருந்துவந்திருக்கிறது. கீழ்ப் பகுதி மக்களின் உணர்வுகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் நிச்சயம் மதிப்புக் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், மேல் பகுதி மக்கள் தமது விளை நிலங்களை அதிகரிக்க முடிவெடுத்தால் அதையும் கீழ்ப்பகுதி மக்கள் புரிந்துகொள்ளத்தானே வேண்டும்.

அதோடு ரியல் எஸ்டேட்டில் ஆரம்பித்து தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் வரை ஆரம்பித்து விவசாயத்தை ஓரங்கட்டிவிட்டு பிற தொழில் துறைகளில் நாம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக வளர்ந்து வெற்றியின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறோம். விவசாயம் நிச்சயம் வெற்றிகரமான தொழிலாக ஆக்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கொடுக்கப்படும் 100 நாள் வேலைக்கான சம்பளத்தை வெறுமனே ஒப்புக்கு இரண்டு புல்லைக் கொத்திவிட்டு இத்தனை காலமும் வாங்கிச் சென்றுவிட்டு விவசாயத்தை மத்திய அரசு புறக்கணித்தது என்று சொல்ல மிகுந்த நெஞ்சுரம் வேண்டும். அந்த வேலை நேரத்தில் பத்தில் ஒரு பங்கு நேரம் ஒழுங்காக வேலை செய்திருந்தால்கூட அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்பட்டிருக்கும். சிறு சிறு குட்டைகள் வெட்டப்பட்டிருக்கும். மழை நீர் சேகரிக்கப்பட்டு விவசாயம் செழித்திருக்கும்.

இப்படித் தவறுகள் அனைத்தையும் தன் மீது வைத்துக்கொண்டுவிட்டு இந்தியாவில் இருப்பதால்தான் எல்லாமே போச்சு என்று ஒருவர் தனது சுய நலம் சார்ந்து சொல்கிறர் என்றால் அவரைப் போய் மீட்பனாக நினைப்பது போன்ற அபாயம் வேறு எதுவும் இருக்காது. இலங்கையில் இப்படித்தான் தன் பின்னால் அணி திரண்ட ஆடுகளை விஷப் புல்வெளிக்கு இட்டுச் சென்றான் ஒருவன். அவனை நாயகனாகக் கொண்டுதான் மூவர்ணக் கொடியை மறைத்தபடி புதிய கறுப்புக் கொடிகள் எழுகின்றன. அந்தக் கொடிகளின் அலைவுகளில் புலிகளின் உறுமல் கேட்கின்றன. பச்சை நட்சத்திரங்கள் மின்னி மறைகின்றன.
*

சல்லிகட்டு புரட்சி - 1

சல்லிகட்டு புரட்சி  -1

மன்னராட்சி, பொலிட் பீரோ ஆட்சி மட்டுமல்ல மக்களாட்சியில் எளிய மக்களிடம் அதிகாரம் குவிந்தால் அதுவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதையே சல்லிக்கட்டுப் புரட்சி நிரூபித்துள்ளது.

ஒரு மன்னரிடமோ வேறு ஏதேனும் தனி அமைப்பிடமோ அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் சுய நலத்துடன் அவர்களுக்கு சாதகமான முடிவையே எடுப்பார்கள். எனவே, எந்தவொரு தீர்மானமும் அந்த மக்கள் திரளின் சம்மதத்துடனும் ஒத்துழைப்புடனும் அமலாகவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அதிகாரத்தை மக்களிடம் கொடுப்பதை மக்களாட்சி முன்வைக்கிறது. ஆனால், அந்த மக்கள் கூட்டம் பல விஷயங்களில் போதிய அறிவு முதிர்ச்சி இல்லாமலும் பொறுப்புணர்வு இல்லாமலும்தான் இருக்கும். அதோடு மக்களுக்குத் தமது எழுச்சியை வேறு நபர்கள் எளிதில் திசைதிருப்பிச் சென்றுவிடாமல் தடுத்துக்கொள்ள முடியாது என்பதாலும் மக்கள் கையில் அதிகாரம் குவிவதும் தவறு என்பதையே இந்த நிகழ்வு காட்டியுள்ளது.

முதலில் வாடி வாசல் திறந்தால்தான் வீடு வாசல் செல்வோம் என்றார்கள். அவசரச் சட்டம் கொண்டுவந்து அதற்கு வழி செய்ததும் நிரந்தரச் சட்டம் வேண்டுமென்றார்கள். அதுதான் நிரந்தரச் சட்டமாகப் போகிறது... ஆனால், அதற்கான கால அவகாசங்கள் தேவை... யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்; அனால், அதையும் மீறி சட்டம் அமலாகிவிடும் என்பதையெல்லாம் அவர்கள் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ தயாராக இல்லை. அவர்களுடன் போராடிய முக்கியமானவர்கள் முன்னால் வந்து இது முழு வெற்றிதான் என்று சொன்னபோது அதைச் சொல்ல நீங்கள் யார் என்று விரட்டியடித்திருக்கிறார்கள். அப்படியானால் பீட்டாவைத் தடை செய் என்று சொன்னார்கள். இது சல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமே அல்ல என்றார்கள். இப்படியாக உள்ளுக்குள் புகுந்த விஷமிகள் சொன்னதற்கு ஏற்ப தமது கோரிக்கைகளை மாற்றிக்கொண்டே சென்றார்கள்.

தாங்கள் தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டத்துக்குள் புகுந்த பிற பிரிவினைவாத அரசியல் சக்தியினர் தேசத்தையும் பிரதமரையும் எதிர்த்து ஆபாசமாகப் பேசியபோதும் ஊடகங்களுக்கு யார் பேச வேண்டும் என்பதை அந்த அரசியல் சக்திகளே கட்டுப்படுத்தியப்போதும் அந்த மக்கள் திரளில் ஒருவர் கூட அதை எதிர்க்கவோ உடனே கலைந்து போகவோ செய்யவில்லை. அவர்களுக்கு அந்த முழக்கங்களில் உடன்பாடு இல்லாத நிலையிலும் தம்மைப் பகடைக்காயாக வைத்து இவையெல்லாம் செய்யப்படுகின்றன என்பது தெரிந்த நிலையிலும் அதையெல்லாம் தடுக்க முடியாமல் இருந்தார்கள். அதாவது, பிள்ளை பிடிக்கும் கும்பல் கையில் சிக்கியிருக்ககிறோமென்பது கூடத் தெரியாமல் சிரிக்கும் குழந்தைகளாக இருந்தார்கள்.

அடுத்ததாக, மக்கள் சக்தியும் ஒற்றைப் பேருருவமாக ஒரே உடலாக ஒரே குரலாகத் திரளுமென்றால் அதுவும் மன்னராட்சி மற்றும் பொலிட் பீரோ ஆட்சி போலவே பாசிஸமாகவே மாறிவிடும். மாற்றுக்கருத்துகளுக்கு இடமே தராது என்பதையே இந்த எழுச்சி புரியவைத்திருக்கிறது. இவை எல்லாவற்றிலுமிருந்தும் தெரிவது என்னவென்றால், அதிகாரம் என்பது எங்குமே பெருமளவில் குவிவது எப்போதுமே நல்லதல்ல.
*

Sunday 22 January 2017

நாம் இந்துக்கள்


நாம் தமிழர்கள் இந்துக்கள் 


கேரளாவில் மலையாளப் பெருமிதம் தலைதூக்கினாலோ ஆந்திராவில் தெலுங்கு பெருமிதம் தலைதூக்கினாலோ ஒரிஸாவில் ஒரியப் பெருமிதம் தலைதூக்கினாலோ மஹாராஷ்டிரத்தில் மஹாராஷ்டிரப் பெருமை தலைதூக்கினாலோ சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் அந்த மாநில - மொழிப் பெருமிதம் தலைதூக்கினாலும் அதை நாம் இன்முகத்துடன் வரவேற்கலாம்; தமிழகத்தைத் தவிர.

காரணம் மிகவும் எளிது. மற்ற பிரிவினருக்கு மொழிப் பற்று வேறு; மொழி வெறி வேறு என்ற புரிதல் உண்டு. நமக்கு அது கிடையாது. கடந்த கால சரித்திரம் அப்படியான எச்சரிக்கை உணர்வையே நமக்குத் தந்திருக்கிறது.

சுதந்தர தினத்தைக் கறுப்பு நாளாகக் கொண்டாடிய ஒரே கட்சி...

அடைந்தால் திராவிட நாடு... இல்லையேல் சுடுகாடு என்று பேசிய ஒரே இயக்கம்...

ஒரு தீவு இரு நாடுகள் என்று பேசி அழிந்து நிற்கும் ஒரே இனம்...

புரட்சிகர நாடான க்யூபா உட்பட உலகம் முழுவதிலுமான அனைத்து நாடுகளும் பயங்கரவாத இயக்கமாக அடையாளம் கண்ட ஒரே இயக்கம்...

எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு அடிப்படையான அம்சம்தான் இருக்கிறது : தமிழ்.

தமிழர்களைவிட வாழுமிடமெல்லாம் பிரிவினைவாதம் பேசி வன்முறையைக் கையில் எடுக்கும் இன்னொரு பிரிவு இருக்கிறது. அதுதான் இஸ்லாம். சில இடங்களில், நீ கிறிஸ்தவன் அதனால் உன்னை எதிர்க்கிறேன் என்பார்கள். சில இடங்களில், நீ இந்து அதனால் எதிர்க்கிறேன் என்பார்கள். சில இடங்களில், நீ பவுத்தன் அதனால் எதிர்க்கிறேன் என்பார்கள். சரி... வேறு ஆட்களுடன் இருக்கும் இடங்களில்தான் அவர்களுக்கு சிக்கல் போலிருக்கிறது என்று நினைத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் நீ ஷியா... நான் சன்னி என்று வன்முறையில் இறங்குவார்கள். நாளை சன்னி மட்டுமே இருக்கும் இடத்தில், நீ குல்லாவை கழட்டிவைத்து தொழுகை செய்கிறாய்... நான் கழட்டாமலேயே தொழுகை செய்வேன் என்ற ”நியாயமான’ காரணத்தை அடிப்படையாக வைத்து ஒருவர் வழிபாட்டிடத்தில் இன்னொருவர் வெடி குண்டு வைப்பார். அவர்களில் சிலரைப் பொறுத்தவரையில் மதத்தில் வன்முறையல்ல... வன்முறைதான் மதமே.

எல்லா குழுக்களிலுமே இப்படியான சில அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், இஸ்லாத்தில் அந்த அடிப்படைவாதிகளின் செயல் ஊக்கம் மிகுதியாக இருக்கும். பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நல்லிணக்கம் விரும்புபவர்களாக இருந்த நிலையிலும் அந்தச் சிறுபான்மையினரின் வன்முறையே அவர்களின் ஒட்டு மொத்த அடையாளமாக, ஒட்டு மொத்த வெளிப்பாடாக இருக்கும். ஓர் இஸ்லாமிய அடிப்படைவாதி என்பவன் இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவலல்ல... அதைச் சரியாகப் புரிந்துகொண்டவனே. ஒரு இஸ்லாமியர் இஸ்லாத்தில் இருந்து எவ்வளவு நகர்கிறாரோ அதன் மூலமே அவர் பிற குழுக்களுடன் இணக்கம் கொள்ளமுடியும்.

இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு செயல்படும் சமூகமே இஸ்லாமிய அபாயங்களில் இருந்து தப்பிக்க முடியும். வேறென்ன... சில உயிரினங்களை அவற்றின் முழு உடம்பை வைத்து எடைபோடுவதைவிட அவற்றின் பல்லையும் கொடுக்கையும் வைத்துத்தானே எடைபோட்டாக வேண்டியிருக்கும்.

தமிழர் - இஸ்லாமியர் என்ற இரு பிரிவினரும் இப்படிச் சென்ற இடமெல்லாம் ”சிறப்புக் கவனத்தை’ ஈர்ப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? இவ்விருவரின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் சில உண்மைகள் நமக்குப் புலப்படும்.

அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொண்டாகவேண்டும். பொதுவாக மக்களை இப்படிப் பொதுமைப்படுத்திப் பார்ப்பது மிகவும் தவறுதான். அதிலும் இன்றைய நவீன உலகில் மக்கள் தனி நபர்களாக மாறத் தொடங்கியிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு குழுவில் இருக்கும் அனைவரையும் ஒரே குணம் கொண்டவர்களாகச் சொல்வது தவறுதான். ஆனால், இந்தக் குழுவினர் அப்படியான தனி நபர்வாதம் நோக்கி நகர்வதில்லை. பழங்குடி மனோபாவமே இவர்களிடம் மிகுதியாக இருக்கிறது. பழங்குடிகளுக்கு கூட்டு வாழ்க்கை மனோபாவமும் உண்டு. கூட்டு எதிர்ப்பு மனோபாவமும் உண்டு. பழங்குடிகளின் முக்கிய பிழைகளில் ஒன்று தமது தவறுகளுக்குப் பிறரைப் பழிக்கும் குணம். இந்த இரு பிரிவினரின் சரித்திரம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பவற்றில் சில முக்கிய கண்ணிகளை எடுத்துக்கொண்டு பார்த்தால் இப்படியான ஒரு சித்திரமே உருவாகிறது.

இவற்றில் சிற்சில இடைவெளிகள், மாறுபட்ட தன்மைகள், விலகல்கள் இருக்கக்கூடும். தனி நபர் ஆளுமைகள், தனிப்பட்ட காலகட்டம், தனியான பகுதிகள் என சில மாறுபட்ட போக்குகள் இருக்கக்கூடும். ஆனால், ஆதார விஷயம் இதுவாகவே இருக்கிறது. எனவே இந்த இடத்தில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்று சொல்வதெல்லாம் உண்மையில் அவற்றின் அடிப்படைவாதிகளையே குறிக்கிறது. என்றாலும் அதுவே அந்த இரு பிரிவினரின் பெரும்பான்மையை ஓரங்கட்டும் தன்மை கொண்டதாக இருப்பதால் அந்தப் பெயரிலேயே முன்வைக்கவும்படுகிறது. சந்தேகம் இருப்பவர்கள் சமீப சில நாட்களாக சல்லிக்கட்டு தொடர்பாக ஊடகங்களில் பேசுபவர்களை எளிய தமிழ் மக்கள் என்று சொல்லவேண்டுமா... தமிழ் அடிப்படைவாதிகள் என்று சொல்லவேண்டுமா என்றொரு கேள்வியைக் கேட்டுப் புரிந்துகொள்ளலாம்.

இப்போது இதற்கான காரணத்தைப் பார்ப்போம்.

சிந்து சரஸ்வதி என்பதுதான் நம் அனைவருக்குமான வேர் பூமி. அங்குதான் வேத கலாசாரத்தை முன்னெடுத்து ஓர் உயர்ந்த நாகரிகம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உலகில் உருவாகியிருந்தது. அந்தக் கலாசாரம் திராவிடமா ஆரியமா என்று நடந்துவந்த சண்டைகள் இன்று ஓய்ந்து உண்மையில் அங்கு நிலவியது இரண்டும் கலந்த பண்பாடே என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

மிக விரிவான வர்த்தகம், அருமையான நகரமைப்பு, உயரிய இலக்கியங்கள், சமத்துவ சமூகம் என வாழ்ந்து வந்த அந்த மக்கள் சரஸ்வதி நதி வற்றியதைத் தொடர்ந்து இடம்பெயரத் தொடங்கினார்கள். கிழக்குப் பக்கம் கங்கைச் சமவெளி நோக்கி நகர்ந்த ஒரு பிரிவினர், வட மேற்குப் பாலை நிலம் நோக்கி நகர்ந்த ஒரு பிரிவினர், தென் மத்திய திசை நோக்கி நகர்ந்த ஒரு பிரிவினர் என மூன்று இடப் பெயர்ச்சிகள் நடந்தன. அவர்களின் படிப்படியான நகர்வுகளின் முடிவில் வட மேற்குப் பக்கம் சென்றவர்கள் இஸ்லாமியர்களானார்கள். கங்கைச் சமவெளிப் பக்கம் நகர்ந்தவர்கள் இந்துக்களானார்கள். தென் திசை நோக்கி நகர்ந்தவர்கள் தமிழர்களானார்கள்.

வட மேற்குப் பகுதி பாலைவனம்... கிழக்குப் பகுதி வளமான விளைநிலம்... தென் திசை இரண்டும் கலந்த பூமி. இந்த மாறுபட்ட நிலப்பரப்புகளே இந்த மூன்று பிரிவினரின் ஆளுமையில் சில தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன. இந்த நிலம் சார்ந்த ஆளுமை உருவாக்கம் என்பதை ஒரு அடையாளப்படுத்தலாகத்தான் சொல்லமுடியும். மற்றபடி அப்படி ஆனதற்கான பழியை நிலத்தின் மீது போட்டுத் தப்பவெல்லாம் முடியாது. பின் என்ன... சைபீரிய ஓநாய்களின் கூர் நகங்களுக்குப் பனிதான் காரணம் என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

இந்த மூன்று பிரிவினரையும் அவர்களுடைய வன்முறை அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமியர்கள் முதலிடத்தில் இருப்பார்கள். இந்துக்கள் வன்முறைப் படிக்கட்டுகளில் கடைசி இடத்தில் இருப்பார்கள். தமிழர்கள் அவர்களுக்குள் இருக்கும் இஸ்லாமிய அம்சம் தலைதூக்கும்போது ஆயுதங்களைக் கையில் எடுப்பார்கள். இந்து அம்சங்களின் செல்வாக்குள் இருக்கும்வரையில் கூடி வாழும் பண்பை வெளிப்படுத்தி அரவணைத்தும் அரவணைக்கப்பட்டும் வாழ்வார்கள்.

இஸ்லாமியத் தாக்கம் மிகுந்த பாகிஸ்தான் பகுதி தனி நாடு கேட்டு ரத்த வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்து வெற்றியும் பெற்றுவிட்டிருக்கிறது. கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையும் கூட வன்முறை மூலமே சாத்தியமானது. அது பாகிஸ்தானிய இஸ்லாமிய அரசுக்கும் வங்காள தேச இஸ்லாமியப் பெரும்பான்மைக்கும் இடையிலான போராகவே வெளிப்பட்டிருந்தது. தனி நாடு கிடைத்தவர்கள் கூடிய சீக்கிரமே விடுதலைக்காகப் போராடிய வங்காளிகளை ஓரங்கட்டிவிட்டு இஸ்லாமிய தேசமாக மாறியும்விட்டார்கள்.

தமிழர் பகுதியில் உருவான பிரிவினை எண்ணங்கள் அவர்கள் இந்துக்கள் மத்தியில் இருந்ததனால் முனை மழுங்கிப் போனது. கங்கைச் சமவெளி எந்தவித வன்முறை எண்ணமும் இல்லாமல் இருந்து வருகிறது. கங்கைச் சமவெளியின் தாக்கம் ஓரளவுக்கு இருக்கும் மத்திய பகுதிகளும் வன்முறையில் இருந்து விலகியே நிற்கின்றன. இஸ்லாமியர்களுடன் நில ரீதியாக நெருங்கியிருக்கும் சீக்கியர்கள் இதற்கான சிறந்த உதாரணம். அவர்கள் இந்து அம்சம் நிறைந்த கங்கைச் சமவெளியை நோக்கித் திரும்பி நிற்பதால் ஓரளவுக்கு வன்முறையில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாமிய நெருக்கம் அவர்களை வாளுடன் வலம் வரவும் வைக்கிறது.

இப்போது பங்களாதேஷில் இருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களினால் மேற்கு வங்காள இந்து பூமியும் மெள்ள நிறம் மாறத் தொடங்கியிருக்கிறது. தமிழகமும் மெள்ள மெள்ள இந்துக்களின் பிடியில் இருந்து பிரிக்கப்படத் தொடங்கியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் இத்தனை காலம் வேரூன்றியிருந்த கம்யூனிஸமும் தமிழகத்தில் இத்தனை காலம் வேரூன்றியிருந்த திராவிட - நாத்திகமும் ஒருவகையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மட்டுப்படுத்தியிருந்ததன் மூலம் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் மறைமுக நன்மையையே செய்து வந்திருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வேரூன்றத் தொடங்கியதைத் தொடர்ந்து கம்யூனிஸம் ஓரங்கட்டப்பட்டுவருகிறது. அதுபோலவே எப்போது தமிழகத்தில் தமிழ் தேசியமும் இஸ்லாமிய செல்வாக்கும் பெருகத் தொடங்கியதோ அவர்கள் முதல் வேலையாக திராவிட இயக்கத்தைக் குறிவைத்துத் தாக்கி அகற்றியிருக்கிறார்கள். அதைவிட வேகமாக இந்து இயக்கத் தலைவர்கள் தொடர்ச்சியாகப் படு கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுவதும் ஆரம்பித்திருக்கிறது. அதுபோலவே மேற்கு வங்கத்தில் இந்துக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இரு தரப்பு அடிப்படைவாதிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

பிரிவினை மற்றும் வன்முறைக் குணங்கள் மிகுந்த இஸ்லாமியர்களும் தமிழர்களும் கொள்ளும் இந்தப் புதிய நட்புறவு மிகவும் காரியார்த்தமானது. ஈழத்தில் தமிழர்களின் கை ஓங்கியிருந்தபோது இஸ்லாமியர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றார்கள். அது இயல்புதானே. இஸ்லாமியர்கள் மிகுதியாக இருந்திருந்தால் தமிழர்களை ஓட விரட்டிக் கொன்றிருப்பார்கள். அதையும் முடிந்தவரை அங்கு செய்யவும் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒன்று சேரவேண்டுமென்று தமிழகத்தில் முதன் முதலில் சொன்னவர் ஈ.வெ.ரா.

இவர்களுடைய பெருமித உணர்வு பெருகுவதென்பது பிறருக்கு மட்டுமல்ல இவர்களுக்குமே கெடுதல் என்பதாகவே உலக சரித்திரம் இதுவரை காட்டியிருக்கிறது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் அந்தப் பெருமித உணர்வென்பது ரத்தத்திலேயே ஊறியது. சுவாசம் போல் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருப்பது. தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரையில் அந்த வன்முறையும் பிரிவினை எண்ணமும் உறங்கியே கிடக்கும். இலங்கையில் இப்படித்தான் இந்துக்களாக இருந்தவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கியதைத் தொடர்ந்தே ரத்த மழை சிறு சிறு தூறல்களாக ஆரம்பித்துப் பெரு வெள்ளமாகப் பெருக்கெடுத்து முழு நிலத்தையும் மூழ்கடித்து முடித்திருக்கிறது. தமிழகத்திலும் கருமேகங்கள் சூல் கொள்ளத் தொடங்கியுள்ளன.

சரித்திரம் நமக்குப் பல பாடங்களைத் தொடர்ந்து கற்பித்து வந்திருக்கிறது. நாம் அவற்றைக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். புதிதாக எதையும் பெறுவதோ சேர்ப்பதோ ஆக்கிரமிப்பதோ நம் எண்ணத்தில் ஒருநாளும் இருந்ததில்லை. ஆனால், இருப்பதை இழக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது. நாம் தமிழர்களிடமிருந்து நம் தமிழர்களை நாம் இந்துக்களாவதன் இந்துக்களாக்குவதன் மூலமே காப்பாற்றமுடியும். அந்தவகையில் இந்தப் போர் நம்மிடம் இப்போது வன்முறையை அல்ல... நேசக்கரம் நீட்டுவதையே தீர்வாகச் சொல்கிறது. 

இந்தப் போர் நமக்கும் நம் எதிரிக்குமானதல்ல... எதிரியாகிக்கொண்டிருக்கும் நம் உறவுக்கும் நமக்குமானது. குஜராத்தை இந்துத்துவத்தின் விளைநிலமாக ஆக்கியதாகச் சொல்வார்கள். தமிழகம் இந்து விரோதத்தின் உறைவிடமாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிந்து சரஸ்வதி நதிக்கரையில் இருந்து பிரிந்து சென்ற குழுவினரின் பூமி மருதமாகவும் முல்லையாகவும் குறிஞ்சியாகவும் நெய்தலாகவும் செவ்வேளையும் திருமாலையும் கொற்றவையையும் வணங்கி வாழும் வரையில் மட்டுமே நல்லது. அது அரபுப் பாலை நோக்கித் திரியத் தொடங்கினால் கொல்லனின் உலைக்கல்லில் சூடேறிய இரும்பு போல் கொதிக்கத் தொடங்கி தன் உதிரத்தையே சுவைத்துப் பசியாற வேண்டிய கொடூரம் நேர்ந்துவிடும்.

Friday 20 January 2017

போற்றிப் பாடடி பெண்ணே - 5

போற்றிப் பாடடி பெண்ணே
(தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

இந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெளிப்படும் பிற அரசியல் அம்சங்கள் என்னென்ன என்று பார்த்தால் தமிழகத்தில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் இந்தப் புதிய இயக்கம் ஓரங்கட்டியிருக்கிறது. இந்துக்களின் விழாவான சல்லிக்கட்டை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இயக்கத்தில் இந்து அரசியல் சக்திகளுக்கு இடமே இல்லை என்பது மிகப் பெரிய வருந்தத்தக்க நகைமுரணே. இதுகூடப் பரவாயில்லை... தமிழகம் என்பது திராவிட இயக்கத்தின் ஒரே கோட்டை என்று இறுமாந்திருந்த திராவிட முற்போக்கு கழகத்தினருக்கு இந்த சல்லிக்கட்டு இயக்கம் மிகப் பெரிய நடுவிரலை (அதுவும் காளைச் சாணியில் முக்கி) காட்டியிருக்கிறது. 

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என ஊடகங்களில் செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளைக்கூட இந்த இயக்கம் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. அல்லது குறைந்தபட்சம் இந்த போராட்ட காலகட்டத்தில் ஓரங்கட்டிவிட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி, மதிமுக போன்றவற்றின் கொள்கையையே இந்த இயக்கம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருப்பதால் அந்தக் கட்சிகளை ஓரங்கட்டியிருப்பதாகச் சொல்லமுடியாது. மற்றபடி இனிமேல் தமிழகத்தில் எந்தவொரு கட்சி இயங்குவதாக இருந்தாலும் அது தமிழர் நலனை அதிலும் இந்த இயக்கத்தினர் முன்வைத்திருக்கும் விதமான கோணத்தில் முன்னெடுத்தாகவேண்டும் என்ற மிரட்டலை இந்த இயக்கம் விடுத்திருக்கிறது. பழைய கட்சிகளை ஓரங்கட்டியது தொடர்பாக நிச்சயம் பெருமிதமே கொள்ளவேண்டும். ஆனால், புதிதாக முன்வைக்கும் கோஷங்கள் கவலையைத் தருகின்றன.

ராமர் கோவில் கட்டும் இயக்கம் இதுபோலவே தேசம் முழுவதையும் கரசேவையில் ஈடுபடுத்தி ரத யாத்திரைகள் நடத்தி பெரும் இயக்கமாக வளர்ந்து இன்று மத்தியில் ஆட்சியையும் பிடித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு மிகுந்த பொறுப்புடனே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே அந்த இயக்கத்தினால் பலம் பெற்ற பா.ஜ.க. முன்னெடுத்துவருகிறது. அந்தவகையில் இன்று தமிழ் உணர்வை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்த இயக்கம் நாளை ஆட்சிக்கு வந்து அனைவரையும் உள்ளடக்கிய  வளர்ச்சியையே முன்னெடுக்குமென்றால் இந்த ஆரம்பகட்டச் செயல்பாடுகளை ஒருவகையில் ஏற்றுக்கொண்டுவிடமுடியும். ஆனால், ராமர் கோவிலைக் கட்டும் இயக்கத்தின் நோக்கம் ஆக்கபூர்வமானதாக இருந்தது. இன்றைய இயக்கத்தின் நோக்கம் காலிஸ்தான் இயக்கம் போல் அழிவின் விதைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 

மேலும் தொட்டடுத்த இலங்கையில் இதே போல் இன ஒடுக்கல் சார்ந்த மிகை முழக்கங்கள் எழுப்பப்பட்டு முன்னெடுக்கப்பட்ட விஷயங்களால் சிந்தப்பட்ட ரத்தமும் கண்ணீரும் இன்னும் காயவில்லை. இந்த சல்லிக்கட்டு இயக்கத்தின் பின்னால் ஈழத்தமிழ் மனம் ஏதேனும் இருக்குமென்றால் அதனிடம் மன்றாடிக் கேட்பதெல்லாம் இது ஒன்றே: ஈழ அழிவுகளுக்கு இந்தியாவே காரணம் என்று உங்கள் மனம் நம்புவது உண்மையென்றே வைத்துக்கொள்வோம்... வேதனையில் அழும் உங்களிடம் முழு உண்மையைப் பேச இப்போது விரும்பவில்லை. ஆனால், இந்தியாவை அதற்காகப் பழி தீர்க்கப் புறப்பட்டுவிடாதீர்கள். இன்னா செய்தாரை ஒறுத்தல் என்றெல்லாம் நீதி போதனை சொல்லவில்லை. வேண்டுமானால் இந்த எழுச்சியைக் காட்டி மிரட்டி இந்திய அரசை ஈழ விஷயத்தில் இனிமேல் செய்ய வேண்டியவற்றைச் செய்யவைக்கப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருமே இளமையில் வறுமையில் வாடியவர்களாம். நான் பசியால் துடித்தபோது இந்த சமூகம் எனக்கு உதவவில்லை... நான் வெற்றிகள் பெற்ற பிறகு இந்த சமூகத்துக்கு எதற்கு நான் உதவவேண்டும் என்று சிவாஜி கேட்டாராம். எம்.ஜி.ஆரோ பசிக் கொடுமை மிக மிக மோசமானது என்பதை எனக்குப் புரியவைக்கவே இந்த சமூகம் என்னை பசியால் வாட்டியிருக்கிறது. சமூகம் எனக்குக் கற்றுக் கொடுத்த அந்தப் பாடத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் பட்ட அந்த துன்பத்தை இந்த சமூகத்தில் இனி யாரும் படக்கூடாது என்று வெற்றி பெற்ற பின் எம்.ஜிஆர். நடந்துகொண்டாராம். தமிழர் என்பதால் உங்களுக்கு இது நன்கு புரியும்: நீங்கள் எம்.ஜி.ஆராக இருங்கள்.
*
இந்தப் போராட்ட வடிவம் எந்த அளவுக்கு சரி..? இது முழுக்க முழுக்க மிரட்டல் தொனியையும் பிடிவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட போராட்ட வடிவம். உணர்ச்சிமயமான பிளாக் மெயில் என்றுதான் இதைச் சொல்லவேண்டும். மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் இதுவரையும் எந்தவித அப்பீஸ்மெண்டுக்கும் இடம் கொடுக்காமல் எந்தவித ஈகோ மோதலாகவும் எடுத்துக்கொள்ளாமல் நிதானமாகவே நடந்துகொள்கின்றன. அதிகபட்சமாக வேகமாகச் சில விஷயங்களை முன்னெடுக்கிறார்கள் என்பதைத்தவிர இதில் வேறு எந்தக் குறையும் அவர்கள் பக்கம் இல்லை.


போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் எளிய மக்களைப் பொறுத்தவரையில் குழந்தைகள் தரையில் விழுந்து புரண்டு அழுவதுபோல் நடந்துகொள்கிறார்கள். அவர்களைப் பின்னின்று இயக்கும் போராட்டக்காரர்களோ ஆளைக் கடத்திச் சென்று காட்டில் ஒளித்துவைத்துக்கொண்டு இரண்டு கோடி, ஒரு கோடி என்று பேரம்பேசும் கடத்தல்காரனைப்போல் நடந்துகொள்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமுமே அவர்களிடம் பிணைக்கைதியாக மாட்டிக்கொண்டிருக்கிறது. பிணைக் கைதி அவர்கள் வசம் இருக்கும்வரையில்தானே பேரம் பேசமுடியும் அவர்களால். அதை அவர்கள் திறம்படச் செய்யவும் செய்கிறார்கள். 

இதற்கு முன் தமிழகத்தில் இதுபோல் ஒருவன் இருந்திருக்கிறான். அவனும் இதேபோல் தமிழ் தேசியவாதியே என்பதை வைத்துப் பார்க்கும்போது ஒருவரைச் சிறைப்பிடித்த வீரப்பனைக் கொன்றீர்கள்... ஊரைச் சிறைப்பிடித்த வீரப்பர்களை எப்படிக் கொல்வீர்கள் என்று கானகமே அதிரும் வண்ணம் அசுரச் சிரிப்பொலி கேட்பதுபோல் ஒரு பிரமை. அதிலும் தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்னவரின் வழித்தோன்றல்களுடைய உணர்ச்சிகளை முன்வைத்து அதைச் செய்வதைப் பார்க்கும்போது மனம் லேசாக வலிக்கிறது. ராவணனைத் திருத்தாமல் அவன் தேசத்தை அதன் காவல் தெய்வங்கள் கைவிட்டதுபோல் செய்துவிடாமல் ராம நாடின் காவல் தெய்வங்கள் ராமனுக்கு இறுதிவரை நின்று வழிகாட்டிடவேண்டும்.

போற்றிப் பாடடி பெண்ணே - 4

போற்றிப் பாடடி பெண்ணே
(தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

சல்லிக்கட்டுக்கான தடையென்பது தமிழ் கலாசாரத்தை அழிப்பதற்கான முயற்சியா..? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் மேலே சொன்னதுபோல் சல்லிக்கட்டு தமிழ்க் கலாசாரத்தின் மிக முக்கியமான அம்சமும் அல்ல; மேலும் பிற அனைத்து சீரழிவுகளும் நமக்கு நாமே என தமிழர்களால் தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவருபவையே.
இந்திய அரசு தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் அதன் வெளிப்பாடாகவே களமிறங்கியிருப்பதாகவும் புதிய ஏற்பாட்டு வசனம் ஒன்றை இடைச்செருகலாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
1.மும்பைக்கு அடுத்ததாக இந்தியாவின் இரண்டாவது பெரியப் பொருளாதாரத்தைக் கொண்டது தமிழகமே.
2. தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product - GSDP) $210 பில்லியன்.
3. மரபு சாரா மின் உற்பத்தியில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது.
4. கடந்த பத்து வருடங்களில் 9% CAGR (Compounded Annual Growth Rate) சாதித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
5. தமிழ்நாட்டின் per capita income $3,000 இந்திய யூனியனில் மூன்றாவது பெரிய தனிநபர் வருமானம்.
6. 2012-இன் Economically Free State அறிக்கையின் ஆதாரமான Economic Freedom Rankings for the States of India வில் தமிழ்நாடு தான் நம்பர் 1.
7. கல்விமருத்துவம்பொது சுகாதாரம்அடிப்படை கட்டமைப்பில் தமிழ்நாடு ஸ்காண்டிநேவிய நாடுகளோடு போட்டியிடும் அளவிற்கு வலிமையோடிருக்கிறது.
8. சேவைகள் 52% ; தொழில் உற்பத்தி 34%; விவசாயம் 21% இதை விட பரவலான நகரமயமாக்கமும்வளர்ச்சியும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை.

இவையெல்லாம் எங்கிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் தெரியுமா..? தனித் தமிழ் நாடு கோருபவர் ஒருவருடைய நிலைத்தகவலில் இருந்து பெறப்பட்டவை. தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாக இருப்பதுதான் தனியாகப் பிரிந்து செல்ல அவர் சொல்லும் முக்கிய காரணம்!
கூடன்குளம் அணு மின் நிலையத்தைக் கட்டி தமிழர்களை அழிக்க முன்னெடுக்கப்பட்ட சதி என்று கூவினார்கள். இத்தனைக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையம் அதைவிடக் கூடுதல் ஆண்டுகளாக ஏன் சுனாமி வந்தபோதும்கூட எந்தவித ஆபத்தும் இல்லாமல்தான் இருந்துவருகிறது. விஷயம் என்னவென்றால் இந்திய அணு உலைகளில் சர்வதேச கண்காணிப்பு அனுமதி தொடர்பான சிக்கலினால் அந்த பிரச்னை அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனரிகளின் தமிழகக் கிளைகள் மூலம் தூண்டப்பட்டது. உரிய தகவல்களும் உரிய பேரங்களும் திரைமறைவில் முடிந்ததைத் தொடர்ந்து அந்தப் பிரச்னை ஊற்றி மூடப்பட்டது. ஆனால் அதில் பங்குபெற்ற அப்பாவி கூடன் குளம் மக்களுக்கு நெல்லைப் புகழ் இருட்டுக்கடை அல்வா தேவாலய வளாகத்திலேயே பரிமாறப்பட்டது. அலங்காநல்லூர்-மெரினா தமிழர்களுக்கு என்ன தயாராகிக் கொண்டிருக்கிறதோ?

அதோடு கமுதியில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அணு மின் நிலையத்துக்கு எதிராக நடந்த போராட்டம் உலகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓங்கி ஒலித்தது. ஆனால், இந்த சூரிய மின்சார உலக சாதனை நீரில் பிரிக்கப்படும் காற்று எழுப்பும் அளவுக்கான குமிழிகளைக்கூட எழுப்பவில்லை. இது வஞ்சிப்பின் வெளிப்பாடா...? நன்றி மறந்த செயலின் வெளிப்பாடா?

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசு அதை அமைக்காமல் இந்திய நதிகள் அனைத்துக்குமான வாரியம் ஒன்றைக் கூடுதல் பலத்துடன் அமைக்க விரும்புகிறது. அது அமைக்கப்பட்டால் இந்த நதிப் பிரச்னைகள் இன்னும் எளிதில் தீர்க்கப்பட வழிபிறக்கும். ஆனால், அப்படியான முயற்சியை தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமாகச் சொல்கிறார்கள்.

அதோடு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை மீறியபோது வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக நடந்துகொண்டது. இப்போது உச்ச நீதிமன்றம் தமிழர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருக்கும்போதும் அதே காரணத்தைச் சொல்லி கை கழுவப் பார்க்கிறது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதபோது தமிழகம் மட்டும் எதற்காக மதிக்கவேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது என்னவோ நியாயமான ஆவேசம் போலவே தோன்றும். ஆனால், கர்நாடகாவுக்கு காவிரி நீர் எந்த அளவுக்கு முக்கியமோ தமிழகத்துக்கு சல்லிக்கட்டு அந்த அளவுக்கு முக்கியமானதல்ல. 

கர்நாடகாவில் விவசாயப் பரப்பு சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. எனவே அதனால் அங்கு பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அவர்கள் ஒன்று கூடி தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு விஷயமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுகிறார்கள். இங்கு சல்லிக்கட்டு என்பது வெட்டிப் பெருமிதமாக முன்வைக்கப்படுகிறது. இதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழர்களின் எந்தவொரு வாழ்வாதாரத்தையும், கலாசார பெருமையையும் பெரிதாக இழிவுபடுத்திவிடவில்லை. பலகாலங்களாகச் செய்து வந்த ஒரு விஷயத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாததால் வரும் சங்கடமே இது. அதுவும் போக எத்தனையோ விஷயங்களை தூக்கி எறிந்த இதே தமிழ் சமூகம் சல்லிக்கட்டை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது மடத்தனமே. விபூதி என்பது முருக வழிபாட்டின் மிக முக்கியமான அம்சம். தேவர் சமூகத்தின் முக்கியமான கடவுள் பழனி முருகன். ஆனால், இன்று சல்லிக்கட்டைக் காப்பாற்றப் போராடுவதாகச் சொல்லும் ஒருவர் நெற்றியில் கூட விபூதிக் கீற்று துளிகூடக் கிடையாது. அந்த விபூதி இட்டுக்கொண்டிருக்கும் ஒரே நபர் சல்லிக்கட்டை மத்திய அரசின் அனுமதியுடன் நடத்தப் போராடும் பன்னீர் செல்வம் மட்டுமே. அவர்தான் கலாசாரத்தைப் பற்றிப் பேச தகுதி உள்ளவர்.

தமிழ் கலாசாரத்தைக் கட்டிக்காப்பதற்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்றாகக் கூடிப் போராட்டம் நடத்துகிறார்களாம். கிறிஸ்தவ, இஸ்லாத்துக்கு எந்தக் கலாசாரத்தைக் கட்டிக் காக்கும் நோக்கில் மாறினார்களாம்? ஒரு கலாசாரத்தை அதைக் குழி தோண்டிப் புதைத்தவர்களுடன் கை கோத்துக்கொண்டு மீட்டெடுக்க முடியுமா? தமிழ் சமூகத்தில் இருந்த சாதிச் சச்சரவுகள்தான் மதம் மாறியதற்குக்  காரணமென்றால் பின் எதற்காக மதம் மாறிய பிறகு தமிழ் கலாசாரத்தைக் காக்க அவர்களும் போராடுகிறார்களாம். அதிலும் சல்லிக்கட்டென்பது தமிழ் சாதியக் கலாசாரத்தின் தெளிவான வலுவான ஓர் எச்சம் அல்லவா?
*   

போற்றிப் பாடடி பெண்ணே - 3

போற்றிப் பாடடி பெண்ணே
(தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

இரண்டாவதாக, தமிழர்கள் பிற கலாசார அம்சங்களில் இந்த அளவுக்குப் புரிதலுடன் இருக்கிறார்களா..? நிச்சயமாக இல்லை. தமிழர்களின் முக்கியமான அடையாளமாகச் சொல்லப்படுவவது சங்க கால வாழ்க்கை முறை. அதாவது வேத காலம் போலவே சாதிப் பிரிவுகள் அற்ற வாழ்க்கை முறை. ஆனால், இன்றும் சாதிக் கொடுமைகள் மிக அதிகமாகத் தலைவிரித்து ஆடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உண்மையில் சாதிச் சண்டை என்பதுதான் தமிழனின் கலாசாரமாக ஆகிவிட்டிருக்கிறது. இந்தக் களேபரத்திலும் இந்த உண்மையை உரத்துப் பேசிய ஒரே தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி மட்டுமே.
இன்று தமிழ் கலாசாரத்தைக் கட்டிக் காக்கப் புறப்பட்டிருக்கும் இளைஞர்களின் முதுகில்தான் அந்த அருவாள் இன்றும் ஒளிந்து கிடக்கிறது. இன்று கூடி நின்று கோஷம் போடும் இளைஞரின் சகோதரியும் சகோதரனும்தான் அந்த அருவாளினால் வெட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த சல்லிக்கட்டு இயக்கம் அந்த சாதிய மோதலை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமானால் இந்த இயக்கம் வரவேற்கப்படவேண்டியதுதான். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் துளியும் தென்படவில்லை. அருவாள்கள் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்துத் திருப்பப்பட்டிருக்கின்றன. இந்திய தேசியர்கள் நோக்கியும் அது வீசப்படும் காலம் வந்துவிடும். என்றாலும் அது தமிழ் சாதிகளுக்குள் வீசப்படாமல் போகும் என்று நம்ப எந்த முகாந்திரமும் இல்லை. வேண்டுமென்றால் தமிழ் ஒற்றுமைக்காக தாழ்ந்த சாதி தலைவர்கள் களமாடி, கலப்புக் காதல் அரும்பாமல் அடங்கி ஒடுங்கிப் பார்த்துக்கொள்ளக்கூடும்.

அடுத்ததாகத் தமிழர்களின் மிக முக்கியமான அடையாளம் அவர்களுடைய தனிச் சிறப்பு வாய்ந்த மொழி. அந்த மொழியைப் பாதுகாக்கும் அடிப்படை அக்கறை இந்த இளைஞர்களிடம் இருக்கிறதா..? நிச்சயம் இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது சகோதர சகோதரிகளை ஆங்கில வழிப் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறார்கள். தாய் மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கச் சொல்லி இவர்கள் போராடுவார்களா..? அல்லது தாய் மொழிக் கல்வி கற்றுத் தரப்படும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே தமது சகோதர சகோதரிகளை அனுப்புவேன் என்று சொல்வார்களா..? நிச்சயமாக மாட்டார்கள். தாய் மொழிக் கல்வியை முன்வைக்க விரும்பாதவர்கள் என்ன கலாசாரத்தை மீட்டெடுக்கப் போகிறார்கள்?

இவர்களில் தாய்மொழிக் கல்வி மட்டுமே கிடைக்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் நபர்களும் உண்டு. அவர்களைப் பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பு மாணவனுக்குக் கூட தமிழில் ஒரு பக்கம் பிழையில்லாமல் எழுதவோ எழுதியதைப் படிக்கவோ தெரியாத நிலையே இருக்கிறது. உண்மையில் போராட வேண்டியது இதை எதிர்த்துத்தான்.
தமிழர்களின் இன்றைய கலை வடிவமாக திரைப்படங்கள் இருக்கின்றன. அந்தத் திரைப்படப் படைப்பாளிகள் கேமராவுக்குப் பின்னால் ஆடைகளின்றிச் செய்யும் அதே வேலையையே கேமராவுக்கு முன்பாக சொற்ப ஆடைகளுடன் செய்துவருகிறார்கள் ஃபோர்னோ திரைப்படங்களின் மலினமான நகல் என்றும் நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கூட்டிக்கொடுத்து இயக்குநராக இருக்க நான் தயாரில்லை என்றும் வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் உண்மை சொல்பவர்களால் நிறைந்ததுதான் இன்றைய திரையுலகம். அதில் இடம்பெறும் தமிழ் கதாநாயகிகள் அனைவருமே செக்கச் செவேலென்ற நிறத்தில்தான் இருப்பார்கள். முழுத்திறமையைக் காட்ட இடம் கொடுக்காத சென்சார் போர்டைப் பழித்தபடியேதான் தொடை, இடை, தொப்புள், மார்புப் பிளவு என காட்டிக் கலைச்சேவை செய்தும்வருகிறார்கள். இவர்கள்தான் தமிழ் கலாசாரத்தைக் காப்பாற்றக் களம் இறங்குகிறார்கள்.

தமிழ் திரைப்படங்களின் நகைச்சுவை என்பது அதைவிடக் கேவலமானது. அடிப்பதும் அடி வாங்குவதும்தான் தமிழர்களின் நகைச்சுவையாக இடம்பெற்றுவருகிறது. கறுப்பு நிறத்தில் இருக்கும் பெண்களை இந்த அளவுக்கு அமெரிக்க ஐரோப்பாவில் கூட நிஜத்தில் அவமானப்படுத்தியிருக்கமாட்டார்கள். தாழ்ந்த சாதிக்காரர்களை தெருத்தெருவா பிச்சை எடுக்கற நாயி என்பதில் ஆரம்பித்து விதவிதமான வசைகளை உருவாக்கித் திட்டுவதுதான் தமிழர்களின் நகைச்சுவையாக இருந்திருக்கிறது. கவுண்டமணி செந்தில் கூட்டணியில் செந்தில் அடிவாங்குவார். கவுண்டமணி அடிப்பார். அதன் அடுத்த வெர்ஷனான வடிவேலு காமடியில் வடிவேலு செந்தில் இடத்தில் இருப்பார். கவுண்டமணியின் இடத்தை கை கால் உள்ள அனைவருக்கும் கொடுத்திருப்பார்கள். அப்படி அரைபாடி வண்டியில் ஏற்றிச் சென்று மூத்திரச் சந்தில்போட்டு அடிப்பதும் அடிவாங்குவதுதான் தமிழர்களின் நகைச்சுவைக் கலாசாரம். ஈழத் தமிழர்களின் உயிர் வலியைக் கூட எல்லாம் பய மயம் என்று இழிவுபடுத்துவதே தமிழச்சி பால் குடித்தவர்களின் கலை வெளிப்பாடு. ஒருவகையில் பார்த்தால் சீரழிந்து கிடக்கும் இன்றைய தமிழ் கலாசாரத்தின் மிகச் சிறந்த தூதுவர்கள் திரையுலகத்தினர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது (மெரினா இளைஞர்களை இயக்குபவர்கள் இந்தத் திரைப்படத்தினரை ஓரங்கட்டுவது வரவேற்கத் தகுந்ததுதான். ஆனால், அது வகாபிஸ, விடுதலைப் புலித்தன்மை மிகுந்த பாசிசத்தின் முக்கிய கொள்கையும் கூட என்பதால் மனம் நடுங்கவே செய்கிறது).     

தமிழர்களின் இன்னொரு முக்கிய கலாசாரச் சீரழிவாக இருப்பது குடி. உலகம் முழுவதுமே குடிக்கத்தான் செய்கிறது. ஆனால், குடித்துவிட்டு நடு ரோட்டில் விழுந்து கிடப்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமே உரிய அவலம். இந்தக் கலாசார மீட்டெடுப்புப் போராளிகளின் அப்பாக்கள்தான் அப்படிக் குடித்துவிட்டு நடுரோடுகளில் படுத்துக் கிடக்கிறார்கள். இதை விடப் பெரிய அவமானம் கோபுரத்தை குலச் சின்னமாகக் கொண்ட தமிழக அரசு தனது முக்கிய தொழிலாக சாராய விற்பனையை வைத்திருக்கிறது. கலாசாரம் பற்றிய குறைந்தபட்ச சொரணை இருந்தாலும் ஒருவர் முதன் முதலில் எதிர்க்க வேண்டியது இதைத்தான். ஆனால், அந்த சாராய மாஃபியாவின் காலில்தான் ஆட்சியை ஏற்கும்படி தமிழகம் மன்றாடிக் கொண்டிருக்கிறது.
*

போற்றிப் பாடடி பெண்ணே - 2

போற்றிப் பாடடி பெண்ணே
(தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

இந்தப் போராட்டத்தில் கல்லூரி இளைஞர்கள், ஆண் பொதுஜனம், தாய்க்குலங்கள் என முப்பெரும் பிரிவுகள் களமிறங்கியிருக்கின்றன.
தமிழகம் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடும் கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரையில் இதுவரை திரைப்படங்களுக்கு கட் அவுட் வைத்தும் பீர் அபிஷேகம் செய்தும் ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாடியும் தமிழ் கலாசாரத்தைக் காப்பாற்றி வந்ததில் இருந்து மாறுபட்டு ஒரு புதிய கொண்டாட்டத்துக்கான வழியாக சல்லிக்கட்டு கிடைத்திருக்கிறது.
தாங்கள் படிக்கும் கல்லூரியில் ஊழல் மலிந்திருப்பது குறித்தோ, ஆசிரியர்களின் தரம் மோசமாக இருப்பது குறித்தோ, தரமான கல்விக்கான கட்டமைப்புகள் இல்லாதது குறித்தோ, நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறினாலும் வேலை கிடைக்காமல் போவது குறித்தோ (போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்களில் 90%க்கு மேற்பட்டவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்களாகவும் வேலைகொடுக்க முடியாதவர்களாகவும்தான் ஆகப்போகிறவர்கள்தான்), தனியார் கல்லூரிகளாக இருந்தால் லட்சங்களைக் கொட்டி சீட் வாங்க வேண்டியிருப்பது குறித்தோ ஒரு முனகல் கூட வெளிப்படுத்தாத ஒரு மாணவர் சமுதாயம் கேண்டீனில் சாம்பாரில் உப்பு குறைவாக இருப்பதாகச் சொல்லிப் போராடுவதைவிடக் கொஞ்சம் மேலான இலக்கு கிடைத்த சந்தோஷத்தில் ஆனால், அதே ஆர்வத்துடன் களமிறங்கியிருக்கிறார்கள்.
நடிகைகள் நகைக்கடையைத் திறக்கப்போகிறார்கள் என்ற விளம்பர வாசகங்களை வேகமாகப் படித்துப் புரிந்துகொண்டு ஆர்வத்துடன் வந்து நிற்கும் ஆண் பொதுஜனங்கள் இந்தமுறை கொள்கைக்காகப் போராடக் குவிந்திருப்பதும் ஒரு நல்ல மாற்று அனுபவத்துக்கான தேடலே. தாய்க்குலங்களைப் பொறுத்தவரையில் இதைவிடப் பெரிய லோடுகளை அரசியல்வாதிகள் குவித்துக்காட்டியிருக்கிறார்கள். இதுமாதிரியான கூட்டங்களில் இதுவரை கலந்துகொண்ட அதே இந்தத் துணை நடிகர்கள்தான் இங்கும் கூடியிருக்கிறார்கள். இதில் கூடுதலாக வசனம் பேசும் வாய்ப்பும் உண்டு. பின்ன என்ன... எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புரட்சித் தலைவராகவும் புரட்சித் தலைவியாகவும் தூக்கிக் கொண்டாடிய கூட்டத்தின் புரட்சி என்பது இப்படியாகத்தானே இருக்கவும்முடியும்.
பன்னீர் செல்வமே தில்லியில் இருந்து தமிழனா திரும்பி வா... தமிழச்சி பெத்த புள்ளையா திரும்பி வா. இல்லைன்னா வந்துடாத என்பது போன்ற முழக்கங்கள் எல்லாம் சசிகலா - பன்னீர் செல்வத்துக்கிடையிலான பனிப்போரின் தடயங்களை லேசாகக் கோடிகாட்டுவதுபோல் தெரிகிறது. சசிகலா அப்ரூவராகியிருந்தால் ஜெயலலிதா எப்போதோ ஜெயிலுக்குள் போயிருப்பார் என்று எகத்தாளம் பேசியவர்களுக்கு பன்னீர் செல்வம் அப்ரூவரானால் என்ன ஆகும் என்ற பயமும் இருக்கும் அல்லவா? அப்படிப் பார்க்கும்போது இந்த எழுச்சி கேவலம் சசிகலாவை முதல்வராக நடந்த கூத்தாகவும் இருக்கலாம். ஆனால், சசிகலா முதல்வராவது என்பது தனிப்பட்ட நிகழ்வா என்ன... அது தமிழ்த் தீவிரவாதத்தின் முதல் வெற்றியாக அல்லவா இருக்கும்.

அந்தக் கோணத்திலேயே மெள்ள மெள்ள இந்தப் போராட்டம் தமிழினம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுவருவதை எதிர்க்கும் போராட்டமாக நிறம் மாறத் தொடங்கியிருக்கிறது. மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து சல்லிக்கட்டை நடத்தினால் போதாது என்று திமிறுகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் பெரும்பாலானோருக்கு இது அதிர்ச்சியையே தரும். தொலைக்காட்சிப் பேட்டிக்கு முன்னால் வந்து நிற்கும் ஓரிரு நபர்கள் சொல்வதே ஒட்டுமொத்த கூட்டத்தின் குரலாக திரிக்கப்படுகிறது. ஏன் அங்கிள் என்னை இங்க நிக்கச் சொல்லியிருக்கீங்க என்ற அப்பாவி கேள்வியைக் கண்களில் தேக்கியபடி தொலைக்காட்சி கேமரா முன் நிறுத்தப்பட்ட இஸ்லாமியச் சிறுவனைப் பார்க்கும்போது வேதனையும் அச்சமும் ஏற்படுகிறது. திருமாவளவனின் கள்ள மவுனம் சில விஷயங்களை யூகிக்க இடம் தந்திருந்தாலும் இருளில் மறைந்திருக்கும் மிருகங்கள் மெள்ளத் தென்பட ஆரம்பிக்கின்றன. வேறென்ன... என்னதான் மறைந்திருந்தாலும் ஊரில் உலவும் மிருகங்கள்தானே மறைந்திருந்தும் தாக்கும். வேற்றுக்கிரகத்தில் இருந்தும் வேற்று யுகத்தில் இருந்துமா வரப்போகின்றன?

மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சி மீதான அதிருப்தியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களில் ஆரம்பித்து சிறுபான்மை மதத்தினர் வரை அனைவரும் இந்த சல்லிக்கட்டை ஆதரிப்பதை தமது அரசியல் சார்ந்து முன்னெடுக்கிறார்கள். விவசாயிகள், வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள், மீனவர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என சமூகத்தின் பல அடுக்கினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியாகவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திரை உலகத்தினரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களுக்குப் படியளக்கும் தெய்வங்களான ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெறக்  கிடைத்த நல்ல வாய்ப்பு என்பதாலும் இந்த அரசியல் சக்தியைப் பகைத்துக்கொண்டால் தமிழகத்தில் கலைச் சேவையாற்ற முடியாது என்ற அச்சத்தினாலும் (இதுவே முக்கிய காரணம்) ஓடோடி வந்து உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியாக சல்லிக்கட்டு ஒட்டு மொத்தத் தமிழர்களின் கலாசார அடையாளமாக வலிந்து முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

போராட்டக்காரர்கள் மீது எந்த அளவுக்குத் தவறு இருக்கிறதோ அதே அளவுக்கு மத்திய அரசின் மீதும் இருக்கிறது. ஷாபானு வழக்குபோன்ற தவறான முன்னுதாரணங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு மத்திய அரசு எதுவும் செய்ய முடியாதென்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கிராம பஞ்சாயத்துகளுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சல்லிக்கட்டை நடத்த முடியும் என்பதை மத்திய அரசும் சரி... மாநில அரசும் சரி... இரண்டுமே பொருட்படுத்துவதேயில்லை. இரண்டு அதிகார அமைப்புமே தம்மிடம் அதிகாரம் குவியவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி சல்லிக்கட்டை நடத்துவதே சரியான, எளிய தீர்வாக இருக்கும்.

ஒட்டுமொத்தத் தமிழகமுமே போராட்டத்தில் குதித்திருந்தாலும் சொற்ப கிராமங்களில் மட்டுமே சல்லிக்கட்டு நடக்கப்போகிறது... ஏனென்றால், திமில்கள் உள்ள சல்லிக்கட்டுக்காளை என்பது சொற்ப கிராமங்களில் மட்டுமே இருந்துவருகின்றன. ஒருவேளை திமில்கள் இல்லாத வண்டிமாடுகளை அடித்து மிரட்டி, ”உன் வீரத்தைக் காட்டு அப்போதுதான் உன்னை அடக்க முடியும்’ என்று  மெரினா தமிழர்கள் கொந்தளித்தாலும் மூக்கணாங்கயிறு குத்தப்பட்டு, காயடிக்கப்பட்டு லாடம் கட்டப்பட்ட அந்தக் காளைகளுக்கு வீரம் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாதே. ஆனால், உயிர் பயம் என்ற ஒன்று இருக்கும். எனவே பயந்து அலறி அடித்து ஓடும். அதைப் பாய்ந்து அடக்கி வீரத்தைக் காட்ட தமிழகத்தில் புதிய தலைமுறை உருவாகிவிட்டதால் எல்லா கிராமங்களிலும் சல்லிக்கட்டு நடந்துவிடக்கூடிய வாய்ப்பு மலர்ந்திருக்கிறது. 

இது ஒருவகையில் தவிர்க்க முடியாத கால, கலாசார பரிணாம வளர்ச்சியே. மாடு பிடி வீரனுக்குத்தான் சல்லிக்கட்டுக் காளையை அடக்க முடியும். மத்தவங்களுக்கு காளைய அடக்கணும்னு ஆசை இருக்கும். ஆனா அதோட லாங் சைஸ் கொம்பைப் பார்த்ததும் நெக்ஸ்ட் ஜென்மத்துல பாத்துக்கலாம் என்று நிச்சயம்  திரும்பிவிடுவார்கள். அவர்களுக்கு வண்டிக்காளையே உகந்தது. அப்படியாக தமிழகம் முழுவதிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு களைகட்ட அனைத்து வாசல்களும் திறந்துவிட்டன. ஆனால், ரத்தம் பாக்காம போகமாட்டோம் என்று சூளுரைத்துக் காத்திருக்கும் கூட்டம் தமது இலக்கை நோக்கி அடிமேல் அடி எடுத்து நடக்கத்தான் செய்வார்கள். நரேந்திர மோதி இதை நாசூக்காகக் கையாள வேண்டும். ஏனென்றால் ரத்த ஊற்றை அடைத்துக்கொண்டிருக்கும் சிறு கல்லை நீக்கிவிட்டால் அதன் பிறகு அது கசிந்து கசிந்து பேராறாக ஓடத் தொடங்கிவிடும்.
*


போற்றிப் பாடடி பெண்ணே - 1


போற்றிப் பாடடி பெண்ணே...
(தேசமும் தெய்விகமும் இருகண்கள் என்று சொன்ன தேவரை மட்டும்)

சல்லிக்கட்டு உண்மையிலேயே ஒட்டுமொத்தத் தமிழர்களின் மிக முக்கியமான கலாசார அடையாளமா?
தமிழர்கள் பிற கலாசார அம்சங்களில் எந்த அளவுக்குப் புரிதலுடன் இருக்கிறார்கள்?
சல்லிக்கட்டுக்கான தடையென்பது தமிழ் கலாசாரத்தை அழிப்பதற்கான முயற்சியா?
இந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெளிப்படும் பிற அரசியல் அம்சங்கள் என்னென்ன?
இந்தப் போராட்ட வடிவம் எந்த அளவுக்கு சரி?
இந்த விஷயங்களின் அடிப்படையில்தான் இன்றைய இளைஞர்களின் போராட்டத்தைப் பார்க்கவேண்டும்.
முதலாவதாக சல்லிக்கட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களின் அடையாளமா? நிச்சயமாக இல்லை. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் தமிழகத்தில் பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது. அது எந்த அளவுக்குத் மொத்தத் தமிழர்களின் விழாவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு சல்லிக்கட்டு அனைவருக்குமான விழா அல்ல. தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் தேவர் சமூகத்தின் விழா. சில இடங்களில் பள்ளர்களும் இந்த விழாவை நடத்துவதுண்டு. என்றாலும் பெரிதும் இது தேவர்களின் விழாவே. தேவர்களின் விழா மட்டுமல்ல... பள்ளர்களைக் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கும் விழாவும் கூட. திராவிடர் கழகத்தில் ஆரம்பித்து இடதுசாரிகள் வரை அனைவரும் இதை சாதிக்கட்டு என்றுதான் விமர்சிக்கவும் செய்கிறார்கள். அப்படியான ஒரு விழா ஒட்டு மொத்தத் தமிழர்களின் விழாவாக முன்வைக்கப்படுவது வரலாற்றுரீதியாக புதுமையான முயற்சியே.
ஆனால், ஒரு சமூகத்தில் (உலகத்தில்) செல்வாக்கு பெற்றிருக்கும் பிரிவு தனது அடையாளத்தை ஒட்டு மொத்த சமூகத்தின் (உலகின்) மீதும் திணிப்பதென்பது பொதுவாக நடக்கும் விஷயம்தான். அந்த சமூகம் அதை ஏற்குமென்றால் அது அந்த சமூகத்தின் விழாவாக நிச்சயம் மாறத்தான் செய்யும். 

கிறிஸ்தவ, முதலாளித்துவ சக்திகள் தமது மேலாதிக்கத்தைத் தந்திரமாகத் திணிப்பார்கள். உலகம் முழுவதும் தயாரித்து அனுப்பப்படும் கார்ட்டுன் தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே ஆண்டு இறுதியில் கிறிஸ்மஸ் கொண்டாடியே தீரும் என்பதில் ஆரம்பித்து பிற நாட்டு பிராந்திய கலாசார விழாக்களை சூழலியல், விலங்கியல் காரணங்களைச் சொல்லி முடக்குவதுவரை அவர்கள் மிகவும் தந்திரமாக தமது மேலாதிக்கத்தைத் திணிப்பார்கள். ஜல்லிக்கட்டைத் தடுப்பதை எதிர்க்கும் நபர்களில் யாரேனும் ஒருவர் டோரா என்ற குழந்தைக் கதாபாத்திரம் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறது? அது இந்திய விழாவையோ தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு போன்ற பிராந்திய விழாவையோ ஏன் கொண்டாடுவதில்லை என்று கேட்கவே போவதில்லை. இதுவே கிறிஸ்தவ, முதலாளித்துவ வழிமுறை.

இதற்கு நேர் மாறாக, இஸ்லாமிய கம்யூனிஸ சக்திகள் தமது மேலாதிக்கத்தை அராஜகமாகத் திணிப்பார்கள். இதற்கான உதாரணங்கள் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளின் வரலாற்றையும் செய்திகளையும் லேசாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
இன்று தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த சல்லிக்கட்டுத் திணிப்பானது கிறிஸ்தவ/முதலாளித்துவ சக்திகளின் தந்திர அணுகுமுறையையும் இஸ்லாமிய/கம்யூனிஸ சக்திகளின் அராஜக வழிமுறையையும் ஒருங்கே தன்னில் கொண்டிருக்கிறது.

தமிழ் தெய்வங்களைக் கைவிட்டுச்சென்றிருக்கும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இதைக் கொண்டாடுவதில்லை. வன்னியர்கள், படையாச்சிகள், கவுண்டர்கள் இதைக் கொண்டாடுவதில்லை. தலித் மக்களில் பெரும்பான்மையினர் இதைக் கொண்டாடுவதில்லை. மேல் சாதிகளில் பிராமணர், வேளாளர், முதலியார், செட்டியார் என யாரும் இதைக் கொண்டாடுவதில்லை. இருந்தும் இன்று ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விழாவைக் கொண்டாடியே ஆகவேண்டும் அல்லது இதற்கு ஆதரவு தந்தே ஆகவேண்டும் என்று ஒரு நிர்பந்தம் உருவாக்கப்பட்டுவிட்டிருக்கிறது. இதற்கு பால சந்திரன் மரணம், எழுவர் விடுதலை, கூடன் குளம் என லயோலா கல்லூரி போன்ற அமைப்புகள் பலகாலமாகப் பயின்றுவந்த பாடங்கள் கைகொடுத்திருக்கின்றன (அலங்கா நல்லூரில் முதலில் சென்று அமர்ந்தவர்களில் அந்தக் கல்லூரிகளின் மாணவர்கள், ஈழத் தமிழர்கள் எனப் பலர் உண்டு என்ற உண்மைகள் வெளியே தெரியாமல் இருக்கும்வரையில் இது சதிக்கோட்பாட்டின் அங்கமாகவே இருக்கும்).
*

Monday 16 January 2017

தமிழகம் : நேற்று இன்று நாளை - 3

சல்லிக்கட்டு விஷயத்தில் மூன்று அடுக்குகள் இருக்கின்றன. ஒன்று விலங்குகள் நலன். இன்னொன்று கலாசார, சமூக நோக்கு. மூன்றாவதாக சமகால அரசியல்.

விலங்குகளின் கோணத்தில் இருந்து பார்த்தால், விலங்குகளைக் கொன்று தின்பது மிகப் பெரிய தவறு. விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைத்து வைப்பதும் சர்கஸில் பயன்படுத்துவதும் தவறு. சல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி, காளைச் சண்டை என நடத்துவதும் தவறு. இந்த மூன்றில் கடைசி வகையே மிக மிக மிதமான தீமை. என்றாலும் விலங்கின் கோணத்தில் இருந்து பார்த்தால் அதுவும் தவறுதான். விலங்குகளைத் தின்னாமல் இருக்கும் நாகரிக நிலையை நோக்கிய லட்சியப் பயணத்தின் முதல் காலடி, விலங்குகளை வைத்து விளையாடுவதை நிறுத்துவதில் இருந்தே தொடங்கவேண்டியிருக்கும்.

விலங்குகளை வைத்து விளையாடுவது தவறென்றால் தின்பது மட்டும் சரியா என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ஏனென்றால், விளையாட்டு எதிராக இருப்பவர்கள் கூட மாமிச உணவுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். எனவே, வெட்டித் தின்கிறாய்... விளையாடினால் தவறா என்று அவர்களை மடக்குவது எளிது. ஆனால், தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியவாதியான திருவள்ளுவர் கொல்லாமையை அழுத்தமாக வலியுறுத்துகிறார். இந்து வைதிக மதத்தை எதிர்த்த புத்தர் கொல்லாமையை முன்வைத்திருக்கிறார். இந்தியப் பெருங்கருணை மதமான சமணம் கொல்லாமையை அடிப்படை நற்பண்பாக முன்வைக்கிறது. அதோடு இந்திய அறிவு வர்க்கமான பிராமண வர்க்கமும் புலால் மறுப்பையே தனது வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டிருக்கிறது. எனவே, வெட்டித் தின்பதும் தவறு விளையடுவதும் தவறு என்று ஒரு குரல் முன்வைக்கப்பட்டால் இவர்களில் யாருக்கும் பதில் சொல்லவே முடியாது. பிரிவினைவாதம் பேசும் திராவிட, தமிழ் தேசியத் தலைவர்களோ பிராமணர்கள் சொல்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணத்துக்காக கொல்லாமையை முன்வைத்த புத்தரையும் வள்ளுவரையும் ஓரங்கட்டுகிறார்கள். இங்கும் கொள்கைக்கு ஏற்ப அரசியல் அல்ல. அரசியலுக்கு ஏற்ப கொள்கையைத் திரித்துக்கொள்வதே நடக்கிறது. வள்ளுவரை மறுக்கச் சொல்லும் கலாசாரம் தமிழனுக்குத் தேவையா..?

ஜல்லிக்கட்டு தொடர்பாகச் சொல்லப்படும் வாதங்களில் முக்கியமானது காளைகளை மிகவும் நேசிக்கிறோம்; காளைகள் மீதான மரியாதை மற்றும் நன்றிக்கடனின் அடையாளமாகத்தான் சல்லிக்கட்டே நடத்துகிறோம் என்பதுதான். இது பீட்டா அமைப்பு காளைகளைத் துன்புறுத்துவதாகச் சொல்லி தடை கோரியிருப்பதால் அதை மறுக்கச் சொல்லப்படும் எதிர்வாதமே. ஊர் கூடிச் சுற்றி நின்று விரட்டுவதும் மிரட்டுவதும் பாய்ந்து அடக்க முற்படுவதும் அன்பின் வெளிப்பாடாக இருக்கமுடியாது. அன்பென்றால் கோ மாதா பூஜையின்போது மாலை அணிவித்து உணவுகொடுத்து வணங்குவதுதான். காளைகளின் கொம்புகளுக்கு வண்ணம் அடித்து சந்தனம் குங்குமம் இட்டு பொங்கல், கரும்பு கொடுத்து கும்பிடுவதுதான். அதை மக்கள் செய்யத்தான் செய்கிறார்கள். அதுவே அன்பின் நன்றிக்கடனின் வெளிப்பாடு.. அதிலும் கூட காளைகளைக் காயடித்து, மூக்கணாங்கயிறு மாட்டி 364நாட்களும் வண்டியிழுக்க வைத்துவிட்டு ஒரே ஒருநாள் இப்படி நன்றிக்கடன் செலுத்துவதை பெரிய பண்பாடு என்றெல்லாம் சொல்ல முடியாது.

சல்லிக்கட்டுக்காளைகள் மீது வண்டிக் காளைகளைவிட கூடுதல் பாசம் உண்டு என்பது உண்மையே. ஆனால், காளையின் பார்வையில் அதுவும் சுமையே. சுருக்கமாகச் சொல்வதென்றால் விலங்குகளை வைத்து நடத்தும் எந்தவொன்றையும் கலாசாரம் என்று நியாயப்படுத்தவே முடியாது. அதுபோல் கடவுளுக்கு ஆடு, கோழி, பன்றி, ஒட்டகம் வெட்டி வணங்குவதும் விலங்குகளின் பார்வையில் மிக மிகத் தவறுதான். அவற்றை நிறுத்துவதற்கான முதல் காலடி என்பது அவற்றை இறை விழாக்களில் இருந்து நீக்குவதுதான். கலாசாரம் என்பது நாகரிகத்துடன் முரண்படும்போது நாகரிகத்துக்கே முன்னுரிமை தரவேண்டும்.

அந்தவகையில் விலங்குகளின் கோணத்தில் சல்லிக்கட்டு மட்டுமல்ல இந்துச் சிறு தெய்வ பலி, இஸ்லாமிய ஈத் என அனைத்துமே தடுக்கப்படவேண்டியவையே. இந்த இடத்தில் பீட்டா போன்ற அமைப்புகளிடம் நாம் கேட்கவேண்டியதெல்லாம் விலங்குகள் மீதான அன்பினால் மட்டுமே இதைச் செய்கிறோம்; எந்த தனிப்பட்ட இனத்தையோ மதத்தையோ எதிர்க்கும் நோக்கில் செய்யவில்லை என்று தெளிவாகச் சொல்லுங்கள் என்பதுதான். தமிழர்களின் சல்லிக்கட்டை மட்டுமல்ல அமெரிக்க (கிறிஸ்தவ) சர்கஸ்களையும் இஸ்லாமிய ஒட்டக, ஆடு பலிகளையும் எதிர்க்கத்தான் செய்கிறோம் என்று ஒவ்வொரு முறையும் தெளிவாகச் சொல்லவேண்டும்.

மாமிச உணவு உலக மக்களில் பெரும்பான்மையினரால் உண்ணப்படுவதால் அதை எதிர்க்க முடியாது. இதுபோன்ற கலாசார, விளையாட்டு விஷயங்களில்மட்டும்தான் எதிர்க்கிறோம் என்று அவர்கள் சொல்லவே முடியாது. அவர்களுடைய இந்தக் கோரிக்கையும் காட்டுமிராண்டித்தனமானதே. வள்ளுவரும் புத்தரும் சமணரும் பிராமணர்களும் சொல்லும் கொல்லாமையே உயரிய நாகரிகம். எனவே பீட்டாவும் தனது காட்டுமிராண்டி நிலையில் இருந்து மேலெழ வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது. பின் என்ன... ஃபோர்க்கால் போர்க்கைச் சாப்பிட்டபடியே யூ பிளடி டமிள்ஸ்... யூ பார்பாரிக் இண்டியன்ஸ் என்று பேச எந்த அருகதையும் அவர்களுக்குக் கிடையாது.

விலங்குக் கோணம் நீங்கலாக கலாசார, சமூக அரசியல் சார்ந்து பார்த்தால் சல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று என்பதாலும் இந்துக் கோவில் விழாக்களின் ஓர் அங்கம் என்பதாலும் அதை ஆதரிக்க வேண்டும். அதேநேரம் ஆதிக்க சாதியான தேவர்களின் அடையாளமாகவே அது இருப்பதால் அந்த கலாசார அம்சத்துக்குத் தரும் ஆதரவானது தேவர்களின் ஆதிக்க மனோபாவத்துக்கு தரும் ஆதரவுபோல் ஆகிவிடுவதால் அந்த சாதி மேலாதிக்க அம்சத்தை அதில் இருந்து நீக்கி முன்னெடுக்கவேண்டும். உதாரணமாக, சல்லிக்கட்டுப் போட்டிகளில் பள்ளர்களுக்கும் பரிவட்டம் கட்டி மரியாதை செய்துவிட்டுத்தான் தொடங்கவேண்டும் என்று சொல்லலாம். பள்ளர்கள் வளர்க்கும் காளைகளையும் போட்டில் பங்கெடுக்க வைக்கவேண்டும். அதை வெறுமனே சாமி காளை என்று தீண்டாமலேயே விட்டுவிடக்கூடாது.

அலங்கா நல்லூரில் இப்போது பெரும்பான்மையாக இருப்பது தேவர்கள் அல்ல என்று சொல்லப்படுகிறது. எது எப்படியானாலும் சல்லிக்கட்டு தேவர்களின் விளையாட்டாகவே இருந்து வந்திருக்கிறது. டாக்டர் கிருஷ்ணசாமியில் ஆரம்பித்து திருமாவளவன் வரை இந்த விஷயத்தில் எதிர்ப்பும் விலகலும் காட்டுவதில் இருந்து அந்த விஷயம் உறுதிப்படவே செய்கிறது. எனவே அதில் பள்ளர்களின் பங்களிப்பு நிச்சயம் அதிகரிக்கவேண்டும்.

மேலும் நவீனத் தமிழர்களின் பாரம்பரிய விழாவாகவும் அதை முன்னெடுக்க விரும்புவதால், சர்ச்கள், மசூதிகளுக்குள் சந்தனம் குங்குமம் இட்ட காளைகளைக் கொண்டு சென்று ஆரத்தி சூடம் காட்டி அழைத்துவந்து சல்லிக்கட்டு நடத்தவேண்டும். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் தானே மாறியிருக்கிறார்கள். தமிழ் கலாசரம் அவர்களுக்கும் உண்டு அல்லவா. எனவே அவர்களும் இந்து - தமிழ் கலாசார அம்சத்தோடு சல்லிக்கட்டை நடத்தவேண்டும். ஆட்டுக்குட்டியை அணைக்கும் ஏசுபிரான் காளையின் திமிலையும் வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கவேண்டும். மாட்டு ரத்ததால் நனையும் பள்ளி வாசல்கள் இனி கோமியத்தால் புனிதம் பெறவேண்டும். வேறென்ன தமிழ் காளைகள் இந்துக் கோவில்களில் மட்டும் வணங்கப்பட்டால் போதுமா என்ன?

இன்றைய சம கால அரசியல் களத்தில் அது இந்திய மத்திய அரசை எதிர்க்கும் கருவியாக்கப்பட்டிருப்பதால் அதைக் கூடுதல் கவனமாகக் கையாளவேண்டியிருக்கிறது. சல்லிக்கட்டுக்கு ஆதரவு தருவது இன்றைய பி.ஜே.பி.க்கு சாதகமாக அமைந்து இந்திய தேசியத்துக்கு வலுச் சேர்க்கும் என்றால் அதைச் செய்யலாம். தமிழ் தேசியம் என்ற போர்வையில் இந்திய தேசிய சக்திகளை எதிர்க்கும் குழுக்களை அடக்க சல்லிக்கட்டை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்றால் அதையே செய்யவேண்டியிருக்கும்.

இன்றைய போராட்டமானது சல்லிக்கட்டு விழாவின் இந்து அம்சங்களை பின்னுக்குத் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறது. தடையை மீறி சல்லிக்கட்டு நடத்துபவர்கள் எல்லாரும் கோவிலில் இருந்து வெகு தொலைவில் பொட்டல்காட்டில் வேடிக்கை விளையாட்டாகவே அதை நடத்திக்காட்டியிருக்கிறார்கள். அந்த எளிய மக்களுக்கு எந்தவித அரசியல் உள் நோக்கங்களும் கிடையாதென்றாலும் அது இந்து அம்சத்தை நீக்கி தமிழ் அம்சம் மட்டுமே கொண்டதாக ஆக்கவிரும்புபவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் செயலாகவே இருந்திருக்கிறது.

இந்திய தேசியத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியுமே அதன் பிரதிநிதிகளாக இருந்து வந்திருக்கிறார்கள். சல்லிக்கட்டு விஷயத்தில் இரண்டுமே பரஸ்பரம் அடுத்தவர் மேல் பழிபோடுவதால் இந்திய தேசியத்தின் வலுவையே குறைக்கிறார்கள். பி.ஜே.பி. இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும். அவர்கள் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தல், திருக்குறளை முன்னெடுத்தல் போன்ற செயல்களால் தமிழ் மக்களுக்கு நெருக்கமாகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதோடு ஜெயலலிதா, சசிகலா போன்றோரின் ஊழல் ஃபைல்கள் கைவசம் இருப்பதால் அவர்கள் மூலம் தமிழக அரசியலைத் தமது கைக்குள் வைத்திருப்பதாக போலிப் பெருமிதத்துடன் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் தமிழ் தேசியப் போர்வையில் இந்திய தேசிய எதிர்ப்புச் செயல்பாடுகள் தமிழகத்தில் திரை மறைவில் வெகு தீவிரமாக நடந்துவருவதை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. கரையான்கள் அரிக்கும் மரங்கள் விழுவதற்கு முந்தின நாள்வரையிலும் வலுவுடன் இருப்பது போலத்தான் தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மத்திய அரசுக்கு எதிரான செயல்பாடுகள் எல்லாமே பி.ஜே.பி.க்கு எதிரானவையோ காங்கிரஸுக்கு எதிரானவையோ அல்ல... இந்திய தேசியத்துக்கு எதிரானவை. இந்தப் புரிதல் பா.ஜ.க.வுக்கு இருந்தாகவேண்டும்.

பொதுவாகவே மோதி தலைமையில் மத்திய அரசு அமைந்ததைத் தொடர்ந்து அவர் மீது திணிக்கப்பட்ட இந்து அடிப்படைவாத முத்திரையை எதிர்க்கும் நோக்கில் இந்திய தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் இந்திய இந்து தேசியத்துக்கு எதிராகவே சமீபலாகமாகத் திரும்பிவருகின்றன. கர்நாடக காங்கிரஸ் அரசு மத்திய பி.ஜே.பி.யை எதிர்க்கும் நோக்கில் காவிரி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்ததோடு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகவும் அதை தீவிரப்படுத்தியது. மாட்டுக்கறி விவகாரம், விருது திருப்பிக் கொடுத்தல், சகிப்புத் தன்மையற்ற நாடு, இழிவான நாடு, மாட்டுத்தோல் உரிப்பு, வெமுலா தற்கொலை என பி.ஜே.பி.க்கு எதிரான போர்வையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எல்லாமே இந்திய தேசியத்தையும் இந்து சக்திகளையும் அழிக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகச் செயல்திட்டத்தின் அங்கமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.


மோதி குஜராத்தில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து சமூக விரோதிகளால் நடத்தப்பட்ட கோத்ரா படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களை ஊடகங்கள் இந்து அடிப்படைவாத அபாயமாகத் தொடர்ந்து பத்து வருடங்கள் பொதுவெளிகளில் அவதூறுப் பிரசாரமாக முன்னெடுத்தன. மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நீதித்துறையும் ஊடகங்களோடு கைகோத்திருக்கின்றன. போதாதகுறையாக என்.ஜி.ஓக்கள் மீதான கெடுபிடிகள் அவர்களையும் இந்தக் கூட்டணியில் சேர வைத்திருக்கிறது. இந்த மூன்றின் ஒருங்கிணைப்பு எப்படி ஒரு பெரும்பான்மை அரசைக்கூட நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதற்கு சல்லிக்கட்டு நல்ல உதாரணம். எனவே, சட்டரீதியான வெற்றியைப் பெறுவதில் காட்டும் அக்கறை மட்டுமே போதாது. சில அரசியல் செயல்கள் மூலமும் நமது நல்லெண்ணத்தை பி.ஜே.பி. வெளிப்படுத்த வேண்டும். ஹெச்.ராஜா தான் வளர்க்கும் காளையுடன் சல்லிக்கட்டில் குதித்தது நல்லதொரு செயல். 

இனி வரும் நாட்களில் பி.ஜே.பி. தலைவர்கள் கண்டதேவித் தேரோட்டம், இரட்டை குவளை எதிர்ப்பு, கருவறைகளுக்குள் தமிழ் மந்திரங்கள் முழங்குதல், மாட்டுகறி எதிர்ப்பு, கோசாலை இயக்கம், துப்புரவுப் பணியாள புரோகிதர்கள் போன்ற சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும். கலாசாரம் என்ற பெயரில் எந்தவொரு பிற்போக்கு அம்சமும் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. நீளவிருக்கும் அலங்கா நல்லூர் இரவுகளின் முடிவில் பொன்னிறக் கதிர்களால் மெழுகுவர்த்திகளை ஒளியிழக்கச் செய்தபடி ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அனைவருக்குமான நம் சூரியன் உதிக்கவேண்டும்.

தமிழகம் : நேற்று இன்று நாளை - 2

கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரால் ஆளப்பட்ட தமிழகம் இந்த மூவரின் ஆளுமை மற்றும் அரசாட்சி பண்புகளையும் மீறி இந்திய அளவில் முன்னணியில் இருந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.

பழங்கால இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்துக்கு தென்னிந்தியாவில் இருந்த கடற்கரை மிகப் பெரிய சாதகமாக அமைந்தது. அதனால் தென்னிந்திய நகரங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியிருந்தன. மேலும் குல வழித் தொழில் தென்னிந்தியாவிலும் அழுத்தமாக நிலைபெற்றிருந்ததால் சிறு சிறு தேசங்களாக ஆட்சியாளர்கள் சண்டையிட்டு வந்த நிலையிலும் வியாபாரம் அந்த சாதி மக்களால் எந்தவித பாதிப்பும் இன்றித் தொடர்ந்து நடந்தது. அது தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களின் செல்வச் செழிப்புக்கு உறுதுணையாக இருந்தன. அதோடு, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தென்னிந்தியாவுக்குப் படையெடுத்து வந்த நிலையிலும் ஆட்சி அதிகாரத்தைப் பெரிதும் வடக்கோடு நிறுத்திக்கொண்டதால் தென்னிந்தியா பெரிய பாதிப்பில்லாமல் செழித்து வளர்ந்தது.

துறைமுக நகராக இருந்ததால் பிரிட்டிஷ் ஆட்சியிலும் செல்வாக்கு பெற்ற நகரங்களில் ஒன்றாக மதராஸ் சோழர்களின் தலைநகரான தஞ்சையும் பாண்டியர்களின் தலைநகரமான மதுரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்தது. தமிழகத்தின் இன்றைய நவீன வளர்ச்சிக்கான அடிக்கல் பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்டது. சுதந்தரத்துக்குப் பின் தேசிய அரசியல் சக்தியான காங்கிரஸ் தமிழகத்தை ஆண்ட காலகட்டத்தில் இங்கு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், கட்டப்பட்ட அணைகள், கல்லூரிகள் போன்ற உள்கட்டுமானத்தின் பலனை திராவிட ஆட்சிகள் அறுவடை செய்தன. இந்துக் கடவுள் மறுப்பு, (போலி) பகுத்தறிவு, (போலி) சாதி ஒழிப்பு என திராவிட இயக்கம் கட்டி எழுப்பிய முழக்கக் கோட்டைகள் எல்லாம் அவர்கள் கண் முன்னே நீர்க்குமிழிகளாக உடைந்து நொறுங்கிப் போனவையே.

தேசியக் கட்சியான காங்கிரஸ் 67க்குப் பின் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையிலும் தேசிய செயல்திட்டமே தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. திமுகவும் அதிமுகவும் மத்திய அரசுகளுடன் (அதன் மூலம் இந்திய தேசியத்துடன்) தங்களை இணைத்துக்கொண்டே செயல்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் தமிழகம் இந்திய மத்திய அரசுடன் கொண்டிருந்த நல்லுறவினால், தமிழக அரசியல்வாதிகளின் பிரிவினைக் கொள்கைகளையும் மீறி தமிழ்நாடு இந்திய அளவில் முன்னணி மாநிலமாக இருந்துவருகிறது. எனினும் இந்திய தேசியம் தமிழகத்தில் தேவையான அளவுக்கு வேரூன்றியிருக்கவில்லை. இதை திராவிட,தமிழ் தேசியவாதிகள் தமது பெருமையாகவும் தனித்தன்மையாகவும் சொல்லிக் கொள்வார்கள். உண்மை என்னவென்றால், சுதந்தரத்துக்குப் பின் மிகுதியான காலம் ஆட்சியில் இருந்த தேசிய கட்சியான காங்கிரஸ் பிராந்திய தலைவர்களை வளரவிடாமல் தடுத்து முழு அதிகாரத்தையும் தன்னிடம் குவித்ததுக்கொண்டதன் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலுமே இந்திய தேசிய உணர்வு தேவையான அளவுக்கு வேரூன்ற முடிந்திருக்கவில்லை. இந்துத்துவ கோட்டையான மும்பையில் கூட மராட்டிய உணர்வு வேரூன்றிய அளவுக்கு இந்திய உணர்வு வேரூன்றியிருக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தியா என்பது பல்வேறு பிராந்திய மொழிக் குழுமங்களின் கூட்டமைப்பாக உருவான தேசம். கலாசார, மத (இந்து) ஒற்றுமை இருக்கும் அளவுக்கு அரசியல் ஒற்றுமை உணர்வு கிடையாது.

உருவ வழிபாடு, சாதி உணர்வு, ஆங்கில மொழிப்பற்று, விஞ்ஞானப் பார்வைக் குறைவு, பக்தி, குடிமைப் பண்பு குறைவு, எந்தவொன்றுக்கும் உள்ளீடற்ற சடங்குசார் முக்கியத்துவம் எனப் பல வகைகளில் இந்தியா முழுவதுமே ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனியான கலைகள், ஆடைகள், உணவுகள், விழாக்கள், இலக்கியங்கள், பொருளாதர அமைப்புகள் கொண்டவை. எனவே, இந்த பிராந்திய மொழித்தேசிய உணர்வு எப்போதும் இந்தியப் பெருந்தேசிய உணர்வைவிட அதிகமாகவே இருக்கும். இதை இந்திய தேசியத்தின் குறையாகப் பார்க்கத் தேவையில்லை. அது உண்மையில் ஒவ்வொரு மொழித் தேசியத்தின் தனித்தன்மையையும் மதித்து நடந்ததன் வெளிப்பாடே அது. எப்படி இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிகளின் வாழ்க்கைப் பார்வை, சடங்கு ஆசாரங்களில் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் இருக்கிறதோ அது போலவே இந்திய தேசியமும் ஒவ்வொரு மொழித் தேசியத்தை அதன் போக்கில் வளர உதவுவதாகவே இருக்கிறது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் இப்படியான வேற்றுமையில் ஒற்றுமை என்ற பார்வை இல்லாதவை என்பதால் அங்கு அனைத்து பழங்குடி மரபுகளும் அழிக்கப்பட்டு ஒற்றைப் பெருமதம் உருவானதுபோலவே ஒற்றைப் பெருந் தேசியமும் உருவாகியிருக்கின்றன. இன்று இந்து இந்தியப் பெருந்தேசியம் சில பொதுத்தன்மைகளின் அடிப்படையில் அரசியல் ஒற்றுமையை மட்டுமே வலியுறுத்துகிறதே தவிர அது என்றும் பிராந்திய சாராம்சத்தை அழிக்கவே செய்யாது. அப்படியாக, இவை இரண்டுமே ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தக்கூடியவை என்ற புரிதல் இல்லாமல் ஆட்சியாளர்களின் தவறுகளினாலும் அந்நிய பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதல்களினாலும் இந்த தனித்தன்மைகள் எதிர் நிலையானவையாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்தப் பிரிவினைவாத கோஷங்களுக்கும் மிக நீண்ட வரலாறு உண்டு. பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, தில்லி, மதராஸ் போன்றவற்றில் வங்காளத்திலும் பஞ்சாபிலும் பிரிவினைவாதம் மிக அதிகமாக இருந்தது. இஸ்லாமியப் பெரும்பான்மை இருந்த காரணத்தால் வங்காளம் கிழக்கு பாகிஸ்தான் எனப் பிரிந்து சென்று பங்களாதேஷ் என்று தனி நாடாகவே ஆகிவிட்டிருக்கிறது. பஞ்சாப் மாகாணமும் இரண்டாகப் பிரிந்துவிட்டிருக்கிறது. மதராஸ் பிரஸிடன்ஸியில் இருந்த பிரிவினை உணர்வுகள் அதன் பூகோள அமைப்பினாலும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அதிகம் இல்லாத காரணத்தினாலும் முனை மழுங்கிப் போயின. பிரிட்டிஷார் வெகு தொலைநோக்குப் பார்வையுடன் திராவிட ஆரிய பிரச்னையைக் கிளப்பிவிட்ட நிலையிலும் மதராஸ் பிரஸிடன்ஸியில் பிரிவினைவாதம் எதிர்பார்த்த அளவுக்கு வேரூன்றவில்லை. அதே நேரம் சுதந்தரத்துக்குப் பிந்தைய மத்திய, மாநிலத் தலைவர்களால் இந்திய தேசிய உணர்வும் வேரூன்ற முடிந்திருக்கவில்லை.

ஜெயலலிதாவின் துரதிஷ்டவசமான மறைவைத் தொடர்ந்து ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கருணாநிதியும் அரசியல் ஓய்வு பெற்றுவிட்டிருக்கிறார் என்பதால் தேசிய - -மாநில இணக்கத்தின் உருவமாக இருந்த எம்.ஜி.ஆர் (ஜெயலலிதா)-கருணாநிதி சகாப்தம் இப்போது பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. தமிழகம் இனி எந்தப் பாதையில் செல்லும்?காமராஜர் கால காங்கிரஸ் போல் நரேந்திர மோதி தலைமையிலான தேசியக் கட்சி செல்வாக்கு பெறுமா..? அல்லது சசிகலா-பன்னீர் செல்வங்கள் மூலமாக திராவிட அரசியலின் மேம்படுத்தப்பட்ட தீமையான தமிழ் தேசியவாதம் வலுப்பெறுமா என்ற கேள்வி நம்முன் எழுந்திருக்கிறது.

முதலாவது நடக்கவேண்டும் என்று ஆசையையும் இரண்டாவது நடந்துவிடும் என்று அச்சத்தையும் சமகால நிகழ்வுகள் ஏற்படுத்திவருகின்றன.

ஜெயலலிதாவே ஏற்கத் தயங்கிய சில மத்திய அரசின் திட்டங்கள் அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றன. இறுதிச் சடங்கின்போது சசிகலா, பன்னீர் செல்வம் ஆகியோர் மோதியிடம் காட்டிய பணிவு கலந்த பாசம், இருவர் மீதும் பாய முடிந்த வழக்குகள், மத்தியில் பி.ஜே.பி.க்கு இருக்கும் பெரும்பான்மை பலம் ஆகியவையெல்லாம் பி.ஜே.பி.க்கு சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

ஆனால், இலங்கைப் பிரச்னை, அணு மின் நிலையங்கள், காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை என பல விஷயங்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவருவதாகப் பெருங் கதையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இன்னொரு தேசிய கட்சியான சோனியா காங்கிரஸ் அரசியல் எதிரியை எதிர்க்கும் நோக்கில் மாநில பிரிவினைவாத சக்திகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் பெட்ரோலை ஊற்றி வருகிறது.

இந்நிலையில் இன்றைய தமிழகத்தின் வெற்றிடம் எதன் மூலம் நிரப்பப்படப்போகிறது? வட திசைத் தாமரைத் தடாகத்திலிருந்து கிளம்பி வரப்போகும் தேசியத் தென்றலா... தென் திசை உவர் கடலில் இருந்து கிளம்பி வரப்போகும் பிரிவினைப் புயலா..? தலைமைச் செயலர் கைது, விவசாயிகள் ’மரணம்’, சல்லிக்கட்டு தொடர்பான நடந்துவரும் போராட்டங்கள் என கொதிக்கத் தொடங்கியிருக்கும் தமிழக அரசியல்களம் தனது செல் திசையை அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டிவிட்டிருக்கிறது. குறிப்பாக சல்லிக்கட்டு விவகாரம் தமிழக அரசியலில் திருப்புமுனை நிகழ்வாக பேருருவம் பெற்றிருக்கிறது.

1965-ல் இதற்கு முன் நடந்த ஹிந்தி மொழி எதிர்ப்புப் போர் தமிழக அரசியலின் தலையெழுத்தைத் தீர்மானித்த முக்கிய நிகழ்வாக இருந்தது. 2017 போராட்டமும் அப்படியானதாக ஆக அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்டிருக்கிறது. அலங்கா நல்லூர் இரவுகள் மெழுகுவர்த்திகளால் ”ஒளி’ பெறத் தொடங்கியிருக்கின்றன.

1965 போராட்டமானது தமிழை அழிக்க வந்த ஹிந்தி மொழியை எதிர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டாலும் உண்மையில் அது ஆங்கில ஆதரவுப் போராகவே நடந்து முடிந்திருக்கிறது. 1965 எழுச்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட இயக்கம் ஹிந்தியை தமிழகத்தில் வேரூன்ற விடாமல் தடுத்த கையோடு ஆங்கிலத்தை பயிற்று மொழியாக ஆக்கி தமிழை முற்றாக ஓரங்கட்டியது. தமிழகத்தில் உருவான திராவிட இயக்கம் வட இந்தியாவையும் ஹிந்தியையும் பிராமணர்களையும் தனது எதிரியாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது. அதனால், அது பிராமணர்களின் மொழியாக சித்திரிக்கப்பட்ட சம்ஸ்கிருதத்தின் நெருங்கிய வாரிசான ஹிந்தியை எதிர்த்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிராமணர்கள் ஏற்கெனவே ஆட்சி மொழியும் உலக மொழியுமான ஆங்கிலத்துக்கு நகர்ந்துவிட்டிருந்தார்கள். பிராமணர்களுடைய மொழியாகிவிட்டிருந்த ஆங்கிலத்தை அவர்கள் பெருமளவில் கற்க ஹிந்தி எதிர்ப்புப் போர் மூலம் திராவிட இயக்கம் வழி செய்தும் கொடுத்தது. இது எப்படியென்றால் ஒரு நபரை எதிரியாகக் கற்பிதம் செய்துகொண்டு அவரைக் கைது செய்யப் புறப்பட்ட படைவீரர்கள் அவன் தப்பிச் சென்ற சுரங்கத்தின் மறு எல்லையில் அதி வேகக் குதிரை ஒன்றை நிறுத்தி வைத்ததுபோல் ஆகிவிட்டது.

காஷ்மீர பிராமணரான நேரு ஏற்கெனவே இந்தியாவை நவீனமயமாக்கும் பெயரில் பிராமண சமூகத்தின் புதிய மறுமலர்ச்சிக்கு மத்திய அரசில் வழியமைத்துத் தந்திருந்தார். நேருவியமும் திராவிடமும் பிராமண மேலாதிக்கத்துக்கு விரும்பி வழியமைத்துத் தந்திருக்கவில்லை என்பதும் சூழல் எப்படியாக மாறியிருந்தாலும் பிராமணர்கள் தமது மேலாதிக்கத்தைக் தக்கவைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதும் உண்மைதான் என்றாலும் இந்த இரண்டும் பிராமண வெற்றிகளுக்கு வழியமைத்துத் தந்திருக்கின்றன என்பதே வரலாறு. இதன் விளைவாக பிராமணியம் மேற்கத்தியமயமாக்கத்தை நோக்கி நகர்வதும் இடை, கடைநிலை சாதிகள் கூடுதல் இந்து இந்தியமயமாவதும் நடந்திருக்கின்றன. கல்விப் புலம், அதிகார மையங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் இடதுசாரி சாய்வு அதிகமாக இருந்த நிலையிலும் மக்கள் திரள் அவர்களால் பெரிய பாதிப்புக்கு ஆளாகமலே இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மும்பை, கர்நாடகா, தமிழகம் போன்ற மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அதுவே காரணமாகவும் இருந்திருக்கிறது.

இப்போது இரண்டாம் எழுச்சியாக இந்திய எதிர்ப்பு 2017-ல் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை இலக்கு இந்து - இந்திய அரசியல் ஆதிக்கத்தை ஓரங்கட்டுவதுதான். அந்த நோக்கில்தான் மாட்டுக்கறியை ருசித்துத் தின்னும் இஸ்லாமியக் கூட்டமும் நாட்டுக் காளைகள் மீது பெருங்கருணையுடன் களத்தில் குதித்திருக்கின்றன. மாட்டுக்கறியைத் தின்னும் இன்னொரு பிரிவான தலித் (ஒரு சில தலித் சாதிகள் நீங்கலாக) சாதிகளும் காளையைப் போற்றிப் பாடத் தொடங்கியிருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்து எதிர்ப்பு என்றால் அதற்காக அவர்கள் ஸ்டாலினைக்கூட தூக்கில் ஏற்றுவார்கள். எனவே, அவர்களும் இந்த புரட்சியில் விரைவில் ஐக்கியமாவார்கள்.

அயல்நாட்டு கிறிஸ்தவ நிறுவனங்களால் நிதியூட்டம் பெறும் பீட்டா அமைப்பு, 2011-ல் விலங்குகளை வைத்து விளையாட்டுகள், கண்காட்சிகள் நடத்தத் தடை விதித்த சோனியா அரசு, அதற்கு உறுதுணையாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், 2014-ல் அந்த சட்டத்தை மேலும் உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், தடையை நீக்கப் போராடும் பரதிய ஜனதா அரசு என இந்த விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க தமிழ் தேசியவாதிகள் தமிழ் கலாசாரத்துக்கு இழைக்கப்பட்ட அச்சுறுத்தலாக இதைச் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போதைய போராட்டங்களில் பீட்டா அமைப்பு குறித்த எதிர்ப்புகளே மிகுதியாகக் காணப்படும் நிலையிலும் இது பி.ஜே.பி. அரசுக்கும் இந்திய தேசியத்துக்கும் எதிரான முழக்கமாக விரைவில் மடைமாற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.

*

தமிழகம் : நேற்று, இன்று, நாளை - 1

தமிழகத்தில் ஓர் அசாதாரண சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட இயக்கங்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் துரதிஷ்டவசமான மரணம், கருணாநிதிக்கு செயலற்ற தலைவராக காலம் தந்திருக்கும் கட்டாய ஓய்வு என தமிழகம் ராகு கேதுகளிடமிருந்து விடுதலை பெற்ற சூரியனாக ஆகியிருக்கிறது. இந்தப் புதிய சூரியன் வெளிச்சத்தைத் தருமா... வெப்பத்தைக் கக்குமா?

தமிழகத்தின் கடந்த கால வரலாற்றினூடாகவும் சமகால நிகழ்வுகளினூடாகவும் பயணித்து அதன் எதிர்காலத்தைச் சிறிது அலசிப் பார்ப்போம்.

இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் போலவே தமிழகமும் தனக்கென தனியான பல குணங்களைக் கொண்டதே. எனினும் அந்த ’தனித்தன்மை’மிகவும் தூக்கலாகவும் இழிவாகவும் வெளிப்பட்ட இடங்கள் என்று பார்த்தால் திரையுலகமும் அரசியல் துறையும்தான்.

கலைக்கும் அரசியலுக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. உலகில் பல படைப்பாளிகள் தமது திரைப்படங்களில் சமூகம் சார்ந்தும் சமகால அரசியல் சார்ந்தும் நுட்பமாகவும் வெளிப்படையாகவும் அரசியல் பேசி வந்ததுண்டு. ஆனால், உலகில் எந்த நாட்டிலுமே கலைஞர்கள் இத்தனை ஆரவாரத்தோடு அழுத்தமாக அரசியலுக்குள் நுழையமுடிந்திருக்கவில்லை. இதற்கு திரைப்படைப்பாளிகளின் திறமை மற்றும் சமூக அக்கறையைவிட தமிழ் மக்களின் வெகுளித்தனமே முக்கிய காரணம் என்பது வேறு விஷயம்.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த அண்ணாத்துரை திரை ஊடகத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் மத்தியில் தனது இயக்கத்துக்கு ஆதரவைப் பெற்றுத் தந்தார். அவருடைய படையில் இரண்டு தளபதிகள் இருந்தார்கள். ஒருவர் வசனகர்த்தா கருணாநிதி; இன்னொருவர் கதாநாயகர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

திரையுலகச் செல்வாக்கு, பிராமண எதிர்ப்பு, இந்துக் கடவுள் மறுப்பு, ’பகுத்தறிவு, தமிழ் மொழிப் பற்று, மாநில சுய ஆட்சி என பல கொள்கைகளைக் கொண்ட திராவிட முன்னேற இயக்கம் திரையுலகை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் ஏறியது. துரதிஷ்டவசமாக ஆட்சியில் ஏறிய சில வருடங்களிலேயே அண்ணாத்துரை இறந்துவிட, இரண்டு தளபதிகளுக்கிடையில் மோதல் தொடங்கியது.

கட்சியும் மக்களும் தன் பக்கமே என்ற நம்பிக்கையில் கருணாநிதி, எம்.ஜி.ஆரைப் பகைத்துக்கொண்டார். அதோடு, திராவிட முன்னேறக் கழகத்தின் வெற்றிக்கு தனது மேடைப் பேச்சும் அனல் பறக்கும் வசனங்களுமே காரணம் என்று அவர் நம்பினார். மக்களோ வேறுவிதமாக நினைத்தனர்.

ஆனால், எம்.ஜி.ஆர். - கருணாநிதி என்ற இரு நபர்களுக்கிடையே கொள்கைகள், கருத்துகள் ரீதியாக மேலோட்டமான வேறுபாடு உண்டென்றாலும் இடைநிலை சாதி ஆதிக்கத்தைப் பேணிக் காத்தது, மத்திய அரசுடன் நல்லுறவு, தொழில் வளர்ச்சி, கவர்ச்சி அரசியல் போன்றவற்றில் பெரிதும் ஒற்றுமையே இருந்தது. திராவிட இயக்கமே தனி நாடுக் கொள்கையைக் கைவிட்டு, நாத்திக அணுகுமுறையை ஒதுக்கிவைத்துத்தான் ஆட்சிக்கே வந்திருந்தது. அதிகாரம் கைக்குக் கிடைத்ததும் தமது கல(ழ)க-வெறுப்பு அரசியலை மேலும் நீர்த்துக்கொண்டனர். எனவே, எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையிலான மோதல் என்பது இரண்டு தனி நபர்களின் ஈகோ சார்ந்ததாக மட்டுமே இருந்தது. அரச நிர்வாகத்தில், சமூகச் செயல்பாடுகளில் எந்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கத்தையும் உருவாக்கியிருக்கவில்லை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எந்த மாற்றமும் இல்லை என்ற நிலையே இருந்தது. ஆனால் இருவரிடமும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது: பிராமண, இந்து மத வெறுப்பு. கருணாநிதியிடம் நடைமுறையில் அவ்வளவு இல்லையென்ற போதிலும் பேச்சளவில் இவை மிக அதிகமாக இருந்தது. எம்.ஜி.ஆரிடம் இரண்டு நிலையிலும் துளியும் இல்லை. அதுவே எம்.ஜி.ஆருக்கான வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

எந்த மதிப்பீடுகளுக்காக எம்.ஜி.ஆர். ஏற்கப்பட்டாரோ அதே மதிப்பீடுகளையே கொண்ட ஜெயலலிதாவுக்கும் மக்கள் அதே காரணத்தினால் ஆதரவுகொடுத்தனர். எம்.ஜி.ஆர். மறைந்து ஜெயலலிதாவின் கைகளில் அதிகாரம் வந்தபோது சமூகம் வேறு தளங்களுக்கு நகர்ந்திருந்தது. ஜெயலலிதா அதைப் புரிந்துகொண்டு செயல்பட்டார் என்று சொல்லமுடியாது. ஆனால், 1980கள்வரையில் தமிழகத்தில் நடந்த அடிக்கட்டுமானப் பணிகள் அடுத்த 30-----& 40 ஆண்டுகளுக்கான உந்துவிசையைத் தந்திருந்தன. சமூகம் தன்னளவில் அந்த திசையில் நடக்க ஆரம்பித்தது. பொருளாதாரம், மருத்துவம், கல்வி, பொறியியல், ஊடகம், கணினி என ஒவ்வொரு துறையிலும் தண்டவாளத்தில் ஏற்றிவைக்கப்பட்ட ரயில் பெட்டி இதமாக நகர்வதுபோல் செல்லத் தொடங்கியது.

தமிழ்நாடு என்பது ஈ.வெ.ரா.வின் மண், இந்திய தேசியத்துக்கு எதிரானது, இந்துத்துவத்துக்கு இடமில்லை என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு என்றாலும் அடிப்படையில் இடைநிலை சாதி ஆதிக்கத்தை மையமாகக்கொண்டதுதான் என்ற புரிதல் ஜெயலலிதாவுக்கு இருந்தது. எனவேதான், இடைநிலை சாதிகளுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய 69% இட ஒதுக்கீட்டை அவர் எந்தவிதத் தயக்கமும் இன்றிக் கொண்டுவந்தார். உண்மையில் இந்தியா முழுவதுமே இடைநிலைசாதிகளே ஆதிக்க சக்திகளாக இருக்கின்றன. பிற மாநிலங்களில் ஏன் இன்னும் அந்த 69% இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை என்பது புரியவே இல்லை. இந்த ஒன்றுதான் ஜெயலலிதாவின் ஒரே ஒரு சாதனை.

ஆனால், ஜெயலலிதாவின் ஆளுமை என்பது அவருடைய ஆட்சி காலத்தில் வேறு பல வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அதுவே அவரை கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவராக ஆக்கியிருக்கிறது.

ஜெயலலிதா ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர். இன்னொருவகையில் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவர். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அவருக்கு நேர்ந்தவை அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன. அவராகச் செய்தவை (அல்லது அப்படி நம்ப முடிந்தவை) அவரை விமர்சிக்க வைக்கின்றன.

பாலியல் ஒடுக்குமுறைகள் நிறைந்த திரையுலகில் இருந்துவந்தவர் என்றவகையில் அவர் மிகவும் பரிதாபத்துக்குரியவர். ஆனால், அந்தப் புகழின் மூலம் கிடைத்த அரசியல் அதிகாரத்தை முழுவதுமாக வீணடித்தவர் என்றவகையில் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவர்.

திரையுலகில் அவர் பட்ட வேதனைகள் ஆண் வர்க்கத்தின் மீது அவருக்கு தீரா வன்மத்தை ஏற்படுத்தியது நியாயமான விஷயமே. ஆனால், அவர் அதற்கு ஆற்றிய எதிர்வினைதான் மிகவும் மலினமானதாக, சொந்தப் பழிவாங்கலாகக் குறுகிவிட்டது.

உண்மையில் அரசியல் அதிகாரம் கிடைத்ததும் அவர் திரையுலகில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்திருக்கவேண்டும். திரையுலகம் மட்டுமல்ல பெண்கள் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுடைய உரிமையை நிலைநாட்ட அவர் முயற்சி எடுத்திருக்கவேண்டும். ஆனால், அவரோ தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் என மேலோட்டமான திட்டங்களோடு முடங்கிவிட்டார். இவையெல்லாம் எந்தவொரு அரசும் செய்திருக்க முடிந்த எளிய செயல்மட்டுமே. ஜெயலலிதா போன்று வாழ்க்கை அனுபவங்கள் பெற்றவர் செய்திருக்கவேண்டியவை ஏராளம்.

தனது அமைச்சரவையில் இடம்பெற்ற ஆண்களை அவமானப்படுத்துவதில் காட்டிய அக்கறையில் நூறில் ஒரு பங்கையாவது திறமை வாய்ந்த பெண்ணையவாதிகளை, பெண் நிர்வாகிகளை தனது அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதில் காட்டியிருக்கவில்லை. ஆணாதிக்கத்துக்கு மாற்று பெண்ணாதிக்கமல்ல... ஆண் பெண் சமத்துவம்தான். அந்தப் புரிதல் ஜெயலலிதாவுக்கு இருந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் பெண்களுக்கு முன்னுரிமை, பெண்களுக்கான பிரச்னைகளில் போராடுதல் என்பதையாவது அவர் செய்திருக்கலாம். ஆண் எம்.எல்.ஏ., எம்பிக்களை அவமானப்படுத்துவது, எம்.ஜி.ஆர்.விசுவாசிகளை ஓரங்கட்டுவது, ஊடகங்களை துச்சமாக மதிப்பது என அவர் நடந்துகொண்டார். பெண் வாக்காளர்களோ ஒரு பெண் எவ்வளவு கம்பீரமாக ஆண்களைப் பந்தாடுகிறாள் என்று தொடர்ந்து போலிப் பெருமிதத்தில் ஆழ்ந்து தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுகொண்டனர். தெருவுக்குத் தெரு திறக்கப்பட்ட சாராயக்கடைகளில் குடித்து அழிந்த தனது மகன்களையும் கணவன்களையும் தந்தைகளையும் பற்றி எந்தவொரு நினைப்பும் இன்றி அதற்குக் காரணமான ஜெயலலிதாவை பெண்கள் ஆதரித்தது படு கேவலமான செயலே. வெகுளித்தனம் என்பது முட்டாள்த்தனமாகவும் கேவலமானதாகவும் மாறிய தருணம்.

மகாமகப் படுகொலை, ஜெயேந்திரர் மீதான பொய் வழக்கு, சந்திரலேகா மீதான திராவகத் தாக்குதல், பாலு ஜுவல்லர்ஸ் அதிபர் போன்றவர்களின் கொலைகள், ஆடம்பரத் திருமணம், பூடகமான வாழ்க்கை, தாங்கமுடியாத அளவுகுத் தலைவிரித்தாடிய லஞ்ச ஊழல், கொடியங்குளம், பரமக்குடி போன்ற போலீஸ் அராஜகம், கடைசி சில வருடங்களில் முடங்கிய அரச நிர்வாகம், புயல் நேர நிர்வாகச் சீர்கேடுகள், ஈழத் தமிழர் விவகாரத்தில் ஆடிய அரசியல், கடந்த ஓராண்டாக இந்து இயக்கங்களுக்கு எதிராக நடந்து வந்த வன்முறை வெறிச்செயலை முழுமையாக ஆதரித்து நின்றமை என அராஜகங்களாலும் நிர்வாகச் சீர்கேடுகளாலும் துரோகங்களாலும் நிறைந்ததுதான் ஜெயலதாவின் ஆட்சிகாலம்.

தமிழக நீர்நிலைகளைத் தூர்வாரி, மழைநீரைச் சேகரித்து, சொட்டு நீர்ப்பாசனம் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, தடுப்பணைகள் கட்டி, விளைநிலங்களைப் பாதுகாத்து, விளைபொருட்களுக்கு நல்ல விலையைத் தந்து விவசாயத்தைப் பாதுகாத்திருக்கவேண்டிய தமிழக அரசுகள் அதைச் செய்யாமல் இருப்பதன் பழியில் பாதிக்கு மேல் ஜெயலலிதாவுக்கும் சேரத்தான் வேண்டும்.

எம்.ஜி.ஆர்., கருணாநிதியால் முன்னெடுக்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வியை மாற்றியமைக்க எதுவும் செய்திருக்கவில்லை. மற நிலையத்துறை செய்யும் முறைகேடுகளைத் தட்டிக்கேட்கவில்லை. இலவசங்கள் மூலம் எளிய மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வாக்குகளைப்பெற்ற கயமை, உழவர் சந்தை, சமத்துவபுரம் போன்ற முயற்சிகளை முடக்கியது ஆகியவற்றில் பெரும்பங்கு தி.முகவுக்குத்தான் உண்டு என்றாலும் ஜெயலலிதாவுக்கும் கணிசமான பங்கு அதில் உண்டு.

*