Thursday 12 January 2017

துர்கா - 7

கலாசாரம் பற்றிச் சொன்னீர்கள்நமது நாட்டில் கணவனை இழந்த பெண்களுக்கு வைதவ்யம்தானே விதிக்கப்பட்டதுபாலியல் சுதந்தரத்தை அனுமதித்த சமூகமென்றால் மறுமணத்தை அல்லவா பரிந்துரைத்திருக்கவேண்டும்அல்லது அப்படியான பெண்களை தேவதாசிகளாக ஆக்கியிருக்கலாமே.
வைதவ்யம் பற்றிய உங்கள் பார்வை தவறானதுநான் அதுபற்றிச் சொல்லும்முன் சில தன்னிலை விளக்கங்களைத் தந்துவிடுகிறேன்நான் ஒருவேளை திருமணம் செய்துகொண்டு என் கணவர் இறந்தால் நிச்சயம் மறு மணம் புரிந்துகொள்வேன்வைதவ்யத்தை இன்று யாருக்கும் பரிந்துரைக்கவும்மாட்டேன்ஆனால்வைதவ்யம் மிக மிக மோசமானது என்று ஒருபோதும் சொல்லவும்மாட்டேன்.
நேற்றைய பெண்கள் அதை எப்படியெல்லாம் பார்த்திருக்கக் கூடும் என்று யூகமாக சில விஷயங்கள் சொல்ல மட்டுமே விரும்புகிறேன்இன்றைய பெண்ணியவாதிகளும் அதையே தானே செய்கிறார்கள்நேற்றைய பெண்ணின் மனதில் என்ன இருந்தது என்று அவர்களுக்கும் தெரியாதுதானேஎனவேவைதவ்யம் பற்றி நான் சொல்லும் வார்த்தைகளை இப்படியும் இருந்திருக்கக்கூடும் என்று பரிசீலித்துப் பாருங்கள் என்றுதான் உங்களிடம் கேட்கிறேன்பெண்ணியவாதிகளின் வார்த்தை களில் இருக்கும் அரசியலைவிட என் கூற்றில் நிச்சயம் அரசியல் அம்சம் குறைவாகவே இருக்கும்.
சரி... வைதவ்ய விஷயத்துக்கு வருகிறேன்முதலில் அது இந்தியாவில் அனைத்து சாதியினரும் பின்பற்றிய வழிமுறை அல்லஉயர் சாதியில் அதுவும் பிராமணர்களில் மட்டுமே மிகுதியாக இருந்திருக்கிறதுபிற சாதிகளில் மறு மணம் சகஜமாக இருந்திருக்கிறதுஎனவேஇந்தியா வைதவ்ய தேசமல்லஅதோடு வைதவ்யத்தின் அடிப்படை வெறும் பாலியல் மறுப்பு அல்லஇந்து சமூகத்தில் ஒரு தத்துவப் பிரிவு துறவை லட்சிய வாழ்க்கையாக முன்வைக்கிறதுபவுத்தம்சமணம் போன்றவை உலக இன்பங்களை மறுதலிக்கும் பார்வையைக் கொண்டவை.
ஆண்களுக்குக் கல்வி கற்கும் காலத்தில் பிரம்மச்சரியம் கட்டாயம்அதோடு ஆண்கள் துறவை நேரடியாகவே ஏற்றுக் கொள்ளலாம்பெண்களுக்கு அவர்களுடைய இனப்பெருக்க சக்தியின் காரணமாக துறவு விதிக்கப்படவில்லைஅதேநேரம் கணவன் இறந்துவிட்டால் அதன் பிறகு துறவுக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
அது ஒடுக்குமுறை அல்லவா... வாய்ப்பு என்கிறீர்கள்.
மனித இனத்தில் துறவு என்பது ஒரு உயரிய வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதுநவீன மனங் களுக்குப் புரியும்வகையில் சொல்வதென்றால்கிறிஸ்தவத்தில் கன்யாஸ்திரீகள் இருக்கிறார்கள்பருவ வயதிலேயே துறவை மேற்கொண்டுவிடுகிறார்கள்.
(இடைமறித்துஅது அவர்களுடைய தேர்வுஆனால்விதவைக் கோலம் திணிக்கப்படுவதல்லவா?
உண்மைதான்ஆனால்விரும்பி ஏற்றுக்கொண்டால் ஒரு வலியைத் தாங்கிக்கொண்டுவிடமுடியும்திணித்தால் மட்டுமே கஷ்டமாக இருக்கும் என்பதை இந்த விஷயத்தில் ஏற்க முடியாதுகிணற்றில் அடுத்தவர் தள்ளிவிட்டால்தான் வலிக்கும்நானாக விழுந்தால் வலிக்காது என்று சொல்ல முடியுமா என்ன?
அடுத்ததாகவைதவ்யம் பெண்களின் விருப்பத்தை மீறித் திணிக்கப்பட்டதா விரும்பிச் செய்யப்பட்டதா என்பதை இன்று நீங்களும் நானும் உட்கார்ந்து தீர்மானிக்கமுடியாதுஅந்தப் பெண்கள் அதை விரும்பித்தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நான் சொல்கிறேன்நீங்கள் அதை ஆணாதிக்கத் திணிப்பாகச் சொல்கிறீர்கள்நான் அதை குடும்பப் பெண்கள் தேவதாசிகளை எதிர்க்கும் நோக்கில் அப்படிச் செய்திருப்பார்கள் என்று சொல்கிறேன்தேவதாசிகளுக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதையைப் பார்த்ததால் வந்த பொறாமையினாலும் தன் கணவன் தன்னைவிட வேறோருவரை விரும்புவதை ஏற்க முடியாததால் வந்த ஆத்திரத்தினாலும் தேவ தாசிகள் முன்வைக்கும் மதிப்பீடுகளுக்கு எதிர்நிலையில் பத்தினிகள் ஓடத் தொடங்கியிருக்கலாம்.
பெண்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளைப் பட்டியல் இட்டுப் பாருங்கள்... சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடாதுஉடல் தெரியும்படி ஆடை அணியக்கூடாதுகாலுக்கு மேல் கால் போடக்கூடாதுராத்திரிகளில் குளிக்கக்கூடாதுவெளியிடங் களுக்குத் தனியாகப் போகக்கூடாதுஅப்பாகணவன்மகன் மூவரை மட்டுமே சார்ந்து இருக்கவேண்டும்கல்வி கூடாதுநான்கு பேருக்கு முன்பாக ஆடக்கூடாதுபாடக்கூடாது... இந்தக் ‘கூடாதுகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் இவை அனைத்துமே தேவதாசிகளுக்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்அப்படியாக குடும்பப் பெண்களுக்கு உரிய குணங்களாகச் சொல்லப்பட்டவை எல்லாமே தேவதாசிகளுடனான ஈகோ மோதலில் குடும்பப் பெண்கள் தாங்களாகவே முன்னெடுத்தவையேவைதவ்யம் அதன் உச்சம்.
பத்தினிக்கும் தேவதாசிக்கும் இடையிலான இந்த உரையாடலை நினைத்துப் பாருங்கள்... பத்தினி தனது பெருமையாக என்ன சொல்லியிருப்பாள்... நான் உன்னை மாதிரி கண்டவன்கூடப் படுக்கமாட்டேண்டி... ஒருத்தனுக்கு வாக்கபட்டு அவனுக்கு மட்டுமே முந்தி விரிப்பேன் என்று சொல்லியிருப்பாள்.
தேவதாசி என்ன பதிலடி கொடுத்திருப்பாள்... ஒருத்தன்கூட மட்டும்தான் படுப்பேன்னு சொல்றியே... அவன் செத்தா நீ வேற ஒருத்தனைக் கட்டிக்கறதில்லையா... அது மட்டும் என்ன நியாயம்அவனா செத்தானா நீயா கொன்னியான்னுகூட தெரியாதே... இன்னொருத்தனைக் கட்டறதுக்காக நீயே கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்னிருக்கலாம் என்று சொல்லியிருப்பாள்ஏனெனில்ஆரம்பகட்டங்களில் எல்லா சாதிகளிலுமே மறுமணம் இருக்கத்தான் செய்தது.
இப்போது தேவதாசியின் குற்றச்சாட்டுக்கு ஒரு பத்தினி என்ன பதில் சொல்லியிருக்கக்கூடும்என் புருஷன் செத்தா அவன் நினைப்பிலேயே பூவையும் பொட்டையும் அழிச்சிட்டு நான் முண்டச்சியா இருப்பேனே தவிர இன்னொருத்தனைக் கட்டிக்க மாட்டேண்டி.
வைதவ்யம் என்பது அப்படியான ஒரு எதிர்நிலையாகக்கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம்குடும்பப் பெண்களே கூட கணவன் இறந்ததும் மறுமணம் செய்யும் பெண்ணை இழித்துப் பேசியிருக்கக்கூடும்அதனால் அந்தச் சுடுசொல்லைத் தாங்க முடியாமல் தன்னை விதவையாக கூடுதல் ஒடுக்குதல்களுடன் கூட்டுக்குள் ஒடுங்கியிருக்கலாம்எனவேவைதவ்யம் என்பது துறவுக்குக் கிடைத்த வாய்ப்பாக இருக்கலாம்அல்லது தேவதாசிகளுடனான போரில் பத்தினிகள் பெற்ற ‘வெற்றியாக இருக்கலாம்.
நிச்சயமாக இது அந்தப் பெண்ணுக்கு மிகப் பெரிய சுமை தான்ஆனால்இன்றும் நம் கண் முன்னே கன்னியா ஸ்திரீகள் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்யாரும் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதில்லைஅது தவறு என்று தடுப்ப தில்லைவைதவ்யத்தை இந்து பிராமண ஒடுக்குமுறையாகப் பார்த்து ஆவேசப்படும் நபர்கள்கிறிஸ்தவ கன்யாஸ்த்ரீகளைப் பார்த்தால் நமக்கு ஏன் எதுவுமே தோன்றுவதில்லை என்று யோசித்துப் பார்க்கவேண்டும்சேம் சைடு கோல் போடுவதில் இருக்கும் சுகம் எதிரியைப் போராடி வென்று கோல் போடுவதில் இருப்பதில்லை என்று நினைக்கிறோமா... வைதவ்யத்தை விமர்சிப்பதால் கிடைக்கும் முற்போக்குப் புகழ்வட்டமும் இன்ன பிற ஆதாயங்களும் கிறிஸ்தவ ஒடுக்குமுறையை எதிர்த்தால் கிடைக்காமல் போய்விடும் என்ற பாதுகாப்பான புரிதலால் சமத்காரமாக நடந்துகொள்கிறோமா என்று கண்ணாடி முன் நின்று கேட்டுக் கொள்ளலாம்எனவேவைதவ்யத்தை வைத்து நம் சமூகம் பாலியல் ஒடுக்குமுறைச் சமூகம் என்று சொல்லிவிடமுடியாது.     
சரி.... சாதாரணர்களுக்கு பாலியல் சுதந்தரம்அத்துமீறுபவர் களுக்கு செக்ஸ் தெரபி என நீங்கள் சொல்லும் இரண்டு நிலை களோடு இது முடிந்துவிடும் என்று தோன்றவில்லையேபெரும் பாலான ஆண்களுக்கு தங்கள் கண்ணில் படும் பேரழகிகள் எல்லாருடனும் படுக்கவேண்டும் என்று ஆசை இருக்கும்அதை எப்படி நெறிப்படுத்துவது?
அந்த விஷயத்தில் நான் இன்னொன்று சொல்ல விரும்பு கிறேன்ஒரு பெண் ‘நோ’ என்று சொன்னால் அது ‘நோ’ தான்விட்டுவிடவேண்டும்அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. 100 சதவிகித பாலியல் சுதந்தரம் இருக்கும் இடங்களில்கூட ஒரு பெண் வேண்டாமென்று சொன்னால் அதை மதிக்கத்தான் வேண்டும்செக்ஸ் சரி... செக்ஸ் வெறி சரியல்லஇன்று ஒரு ஆண்தான் பேரழகியாக நினைக்கும் ஒருத்தி தனியாகக் கைக்குக் கிடக்கும்போது இந்த வாய்ப்பை நழுவவிட்டால் பின்பு கிடைக்கவே செய்யாது என்று நினைத்துத் தான் அந்த நேரத்தில் கூடுதல் அடிகளை எடுத்துவைக்கிறான்பாலியல் சுதந்தரத்தை துய்க்கும் நபர்கள் அல்லது அப்படி ஒரு சுதந்தரம் சமூகத்தில் அனைவருக்கும் தரப்பட்டிருந்தால், “ஒன்று போனால் இன்னொன்று’ என்று தாண்டிச் சென்றுவிடுவார்கள்.
பாலியல் இறுக்கங்கள்கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் தான் நம் சமூகத்தில் இன்று பாலியல் குற்றங்கள்வன்முறைகள் நடக்கின்றனபாலியல் சுதந்தரம் தந்தாலும் நடக்கும்தான்ஆனால்வெகு குறைவாக இருக்கும்அதோடு சுதந்தரமே தராமல் குற்றங்கள் நடந்தால் மட்டும் தண்டிப்பேன் என்று சொல்வது சரியில்லைஅது எப்படியென்றால் மனம் முழுவதும் வானம் நிறைந்திருக்கும் ஒரு பறவையை கூண்டுக்குள் அடைத்துவிட்டு கம்பிகளில் மின்சாரத்தையும் பாய்ச்சி வைத்திருப்பதைப் போன்றதுநீ அடங்கி ஒடுங்கிக் கிடக்க வேண்டும்லேசாகச் சிறகடித்தாலே ஷாக் அடித்துச் சாகத்தான் வேண்டும் என்று சொல்வதைப் போன்றது.
அதோடு தண்டிக்கும் அதிகாரம் இன்று யார் கையில் இருக்கிறது என்று பாருங்கள்எவரெல்லாம் அந்தத் தவறுகளை வெளியில் தெரியாமல் செய்யும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்களோ அவர்கள் கையில் தண்டிக்கும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறதுஅரசியல் வாதிகள்காவல்துறைநீதித்துறை போன்ற அதிகாரவர்க்கங்கள்செல்வந்தர்கள்பெரு வணிகர்கள்ஊடகங்கள் குறிப்பாகத் திரையுலகம் என எல்லாருமே பாலியல் சுதந்தரத்தை வெகு வாகத் துய்க்கக்கூடியவர்கள்.
அதிலும் திரையுலகம்தான் ஓத்துப் பெறும் இன்பத்தை சமூகம் பாத்துப் பெற்றுக்கொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில் அல்லது வெறுப்பேத்தவேண்டும் என்று திரைப்படங்களை போக வெளியாக பெண் உடல்களால் நிரப்பி வருகிறார்கள்இந்த சமூகம் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறதுநாங்களெல்லாம் மூடிக்கொண்டு வாழ்வதுபோல் குற்றவாளிகளும் வாழ்ந்துவிடவேண்டியது தானே என்று சொல்லும் தார்மிக உரிமை அந்தப் பொது சமூகத்துக்கும் கிடையாதுஅப்படியாகஅவர்களைத் தண்டிக்கும் உரிமை திருட்டுத்தனமாகத் துய்க்கும் நபர்களுக்கும் சரி... கோழையாக அடக்கிக்கொண்டு கிடப்பவர்களுக்கும் சரி... யாருக்குமே கிடையாது
பாலியல் சுதந்தரத்தைப் பற்றி நான் பேசும்போது அதை எல்லாருக்கும் கட்டாயப்படுத்தவேண்டும் என்று சொல்ல வில்லைஏனென்றால்அது இல்லாத நிலையிலேயே பலரும் பாலியல் குற்றங்கள் செய்யாமல்தான் இருக்கிறார்கள்அவர்களைப் பார்த்துச் சொல்வதெல்லாம் ஜோவென்று கொட்டும் அருவிக்கரைக்குப் போய்விட்டு முன்னால் தேங்கிக் கிடக்கும் நீரை சொம்பால் மொண்டு குளிப்பதுபோல் ஏன் உங்கள் வாழ்க்கையை வீணாக்குகிறீர்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.
25 வயதேயான பேரழகியாக இருந்துகொண்டு நீங்கள் இப்படி செக்ஸ் பற்றிப் பேசுவதால் பிரச்னைகள் எதுவும் வந்த தில்லையா..?
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்கூட என்னுடன் இரவுகளைக் கழிக்க விரும்புவதாக போன் செய்தும் நேரிலும் சொல்வதுண்டுஎனது அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்து ஏற்றுக்கொண்டும் விலக்கியும் வந்திருக்கிறேன்ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண் குறியின் நீளத்தையும் விறைப்புத்தன்மையையும் சோதித்துப்பார்த்துத் தேர்ந்தெடுப் பேன்நான் ஒரு மருத்துவரும்கூட என்பதால் அதிக பின் விளைவுகள் இல்லாத மாத்திரைகளைக் கொடுத்து வாழ்வில் மறக்கமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியைத் தரும்படியான உடலுறவுக்கு நான் வழியேற்படுத்திக்கொள்வதுண்டு.
பொன்னிறத்தில் ஒளிரும் என் படுக்கையறை மிதமான போதையுடன் நுழைகையில் சொர்க்கம்போல்தான் இருக்கும்ஜன்னலைத் திறந்தால் தென்படும் நீச்சல் குளமும்  மேலே எனக்காகவே உதித்து மறையும் நிலவுகளும் என் வீட்டில் உண்டுஎன் மனநிலைக்கு ஏற்ப படுக்கையறையிலா நீச்சல் குளத்திலா புல்வெளியிலா மொட்டை மாடியிலா என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன்.
உங்கள் வீடு இந்த பூமியிலா இருக்கிறதுபேட்டி முடிந்ததும் புஷ்பக விமானம் வந்து உங்களை தேவலோகத்துக்குக் கொத்திக்கொண்டுபோய்விடும் என்று அல்லவா நினைத்தேன்.
ஆமாம் நான் தேவலோகத்தில் வசிப்பவள்தான்இப்போதைக்கு என் வீட்டை தேவலோகமாக்கியிருக்கிறேன்செக்ஸ் விஷயத்தில் வெளிப்படையாக மனசாட்சிக்கு விரோத மில்லாமல் நாம் எல்லாரும் நடந்துகொண்டால் இந்த பூமியே தேவலோகமாகிவிடும்.
பேட்டி முடிகிறது.
*

No comments:

Post a Comment