Thursday 12 January 2017

துர்கா - 4

மறு நாள் மாலை ஆறுமணி.
இயக்குநர் கவுண்ட் டவுன் சொல்லி ரெடி கேமரா ஸ்டார்ட்  ஆக்ஷன் என்கிறார்பேட்டி  ஆரம்பிக்கிறது.
வணக்கம் (சிறிது தயங்கியபடியேஉங்களை லாயர் துர்கான்னு சொல்லணுமா டாக்டர் துர்கான்னு சொல்லணுமா?
(சிரித்தபடியேலாயர் கம் டாக்டர்.
நல்லது லாயர் கம் டாக்டர் எஸ்.துர்காஉங்களைப் பத்தி பார்வையாளர்களுக்குச் சுருக்கமா சொல்லுங்க.
வெல்... என் அப்பா அம்மாவுக்கு இரண்டு பெண்கள்நான் மூத்தவஅப்பா பேரு கிருஷ்ணன்.
கிருஷ்ணனா..?
ஆமாம்அம்மா பேரு சீதா.
... (புரிந்துகொண்டதுபோல்சரி சரி...
என் அப்பா என்னை ஒரு மருத்துவராக்கணும்னு விரும்பினார்ஆனாஎனக்கு லாயராகணும்ன்னு ஆசையா இருந்ததுஎங்கப்பாவோட ஆசைக்காக மருத்துவப் படிப்பை  முடிச்சிட்டு என்னோட ஆசைக்காக லா படிச்சு முடிச்சேன்.
கிரேட்காதல்லயும் ஜெயிச்சி வாழ்க்கைலயும் ஜெயிக்கறதைவிட இது பெரிய சாதனைதான்லீடிங் மல்ட்டி நேஷனல் மருத்துவ நிறுவனத்துல இந்தச் சின்ன வயசுலயே... உங்க வயசு என்ன..?
துர்கா லேசாகச் சிரிக்கிறார்.
பெண்கள் கிட்ட வயசு கேட்கக்கூடாதுன்னு சொல்வாங்க... உங்க விஷயத்துலயும் அது சரிதான் போல இருக்கு.
எனக்கு 25 வயசு ஆகுது. 1992- பிறந்தேன். 2005  அதாவது 13 வயசுல வயசுக்கு வந்தேன். 20 வயசுல என் கல்லூரித் தோழனுடன் முதலுறவு கொண்டேன்அண்ட் மெனி ஆஃப்டர் தட் வித் மெனி அதர்ஸ் அஃப்கோர்ஸ்என்னோட பிரா சைஸ்...
போதும் போதும்...
இல்லை ப்ரோ... ஒரு ஆணா நீங்க தெரிஞ்சுக்க விரும்பற எல்லாத்தையும் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இல்லையில்லைஇந்த சின்ன வயசுலயே ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனிக்கு சீஃப் போஸ்ட்டுக்கு வந்திருக்கீங்களே... அதுக்கு இரண்டு துறை நிபுணராக ஆனது ஒரு காரணம் இல்லையாஅதைத்தான் சொல்லவந்தேன்.
(கம்பீரப் புன்னகை பூத்தபடியேஆமா மருத்துவம் மட்டும் படிச்சிருந்தாலோ லா மட்டும் படிச்சிருந்தாலோ இந்த இடத்துக்கு வர இன்னும் கொஞ்ச காலம் ஆகியிருக்கும்இப்போ எங்க கம்பெனியோட லீகல் விஷயங்களையும் பாத்துக்கறேன்மருத்துவராகவும் பணிபுரிகிறேன்ஒருத்தர் தப்பான வழில போய் சம்பாதிக்க முடிஞ்சதையும்விட அதிகமா நேர் வழிலயே சம்பாதிக்கறேன்.
நல்லதுநிகழ்ச்சிக்குப் போவோம்மூன்று இளம் பெண்களையும் ஒரு சிறுமியையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ஒரு குற்றவாளிக்கு...
துர்கா (இடைமறித்து): அப்படிக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபருக்கு...
சரி.... குற்றம்சாட்டப்பட்டிருப்பவருக்கு ஆதரவாக வழக்காட முன்வந்திருக்கிறீர்கள்நீங்கள் இந்த வழக்கில் குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை பெற்றுக்கொடுத்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா..?
துர்காவிடுதலையே பெற்றுக்கொடுத்துவிட முடியும் என்று நம்புகிறேன்நம்பிக்கை என்ன செய்தே காட்டுகிறேன்.
அந்த வழக்கில் அவன் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருக்கின்றன... சாட்சியங்கள் எப்படியெல்லாம் வலுவாக இருக்கின்றன என்பதையெல்லாம் படித்து முடித்திருப்பீர்கள் அல்லவா...
துர்காஅதையெல்லாம் படித்து முடித்ததனால்தான் சொல்கிறேன்அவனுக்கு நான் விடுதலை வாங்கித் தருவேன்.
உங்கள் குடும்பத்தினர்அலுவலகத்தினர் இது பற்றி என்ன சொல்கிறர்கள்.
துர்காஅலுவலகம் இந்த விஷயத்தில் எதுவும் சொல்லவில்லைநான் இரண்டு மாத விடுமுறை எடுத்திருக்கிறேன்குடும்பத்தைப் பொறுத்தவரையில் என் அப்பாவுக்கு இதில் சம்மதம் இல்லைஅதே நேரம் அவர் என்னைத் தடுக்கவும் இல்லைஎன் அம்மா என் பக்கம் நிற்கிறார்நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு நன்கு தெரிந்தே இருக்கிறதுஎனவேநான் வேறு எது குறித்தும் கவலைப்படவில்லை.
மரண தண்டனையை ஒருவர் எதிர்ப்பதைப் புரிந்துகொள்ள முடியும்இந்த வழக்கு என்றில்லை... அஜ்மல் கசாப் போல் நூற்றுக்கணக்கான அப்பாவிகளைச் சுட்டுக் கொன்ற ஒருவனைக்கூட தூக்கில் போடக்கூடாது என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன்அதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது.  ஆனால்நீங்களோ செக்ஸ் குற்றம் என்பது குற்றமே அல்ல என்கிறீர்கள்கலாசார பாலியல் ஒடுக்குமுறைகளும் இறுக்கமான சட்டங்களும் தான் பாலியல் குற்றங்களுக்குக் காரணம் என்கிறீர்கள்குற்றம் செய்தவரின் கோணத்தில் இருந்து பார்த்தால் இது ஒருவகையில் சரிதான்ஆனால்ஒரு சமூகம் உருவாக்கிய தவறான சட்டத்தினால் ஓர் இளம் பெண் பாதிக்கப்படுவதை எப்படி நியாயப்படுத்தமுடியும்?
நீங்கள் கேட்பது சரிதான்நிச்சயமாக அந்தப் பெண் பரிதாபத்துக்குரியவர்தான்ஆனால்இங்கு வேறு சில விஷயங்களை நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.  செக்ஸ் ஆர்வமும் வேகமும் மிகுந்த ஒரு ஆணால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் அதை ஒரு விபத்தாக நினைத்து அந்தப் பெண்ணும் சமூகமும் கடந்து சென்றுவிடவேண்டும்.
சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நடந்துகொள்ளச்சொல்கிறீர்கள்.
ஆமாம்அதோடு அந்தப் பெண் அவன் பாலியல் பலத்காரம் செய்ய முற்படும்போது அதை வேறுவகையில் சமாளிக்கப் பார்க்கலாம்அவனுக்கு மாஸ்டர்பேஷன் செய்வதன் மூலமோ அவனுக்கு தன் உடல் உறுப்புகளை ஸ்பரிசிக்கவாய்வழிப் புணர்ச்சி செய்து கொள்ள அனுமதிப்பதன் மூலமோ செய்வதன் மூலமோ யோனியைப் பாதுகாத்துக்கொள்ளலாம்அதன் வாசலில்தானே கலாசாரக் காவலர்கள் பழியாய் காத்துக் கிடக்கிறார்கள்.
அல்லது மல்லாந்து படுத்து அதை என்ஜாய்கூட செய்துகொள்ளலாம் அல்லவா?
நீங்கள் கேலியாகக் கேட்கிறீர்கள்உண்மையில் அதை ஒரு தீர்வாகவேகூட நான் வைப்பேன்இன்பம் துய்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது விரும்பிக் கிடைக்கிறதா வலிந்து திணிக்கப்படுகிறதா என்று யோசிப்பானேன்விலங்குகள் உலகில் இது மிகவும் சாதாரணமாக நடக்கும்திருமணம் செய்தவன் என்பதற்காக அவனுடன் ஆர்கஸம் கிடைக்காவிட்டா லும் படுத்து எந்திரிப்பதை நாம் சரியானதென்று சொல்கிறோம்உண்மையில் அது ஒரு பெண் தன் உடலுக்கும் மனதுக்கும் செய்யும் துரோகம் அல்லவாஅந்தவகையில் வலுக்கட்டாய மாகப் புணர்பவன் மூலம் ஆர்கஸம் கிடைத்தால் அதை அனுபவிப்பதில் அல்லது கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அதை அனுமதிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
ஆயிரம் உடலுறவுகள் உங்கள் வாழ்க்கையில் மேற்கொள் வீர்கள் என்றால் அதில் ஒரு சில உங்களை மீறி நடப்பதால் உடல்ரீதியில் எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லைஅது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அப்படி ஒரு விஷயம் நடக்க வாய்ப்பு உள்ள இடங்களுக்கு அப்படியான நேரங்களில் போகாதீர்கள்அப்படித்தான் போவேன் என்று உரிமைக்குரல் எழுப்பினால்அந்த பாலியல் பலாத்காரங்களையும் அதே  மாதிரி துணிந்து கடந்துசெல்லுங்கள்நான் அல்ட்ரா மாடர்னா இருப்பேன்ஏதாவது நடந்தா கன்சர்வேட்டிவா உட்காந்து அழுவேன் என்ற இரட்டை வேடம் வேண்டாம்.
நினைத்துப் பாருங்கள்... ஆணுக்குப் பெண் சமம் என்ற நோக்கில்தானே ஆணைப்போல் எங்குவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போய்வருவேன் என்று சொல்கிறார்கள்எந்த ஆணாவது தன்னை நான்கு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்தால் அழுவானா... கோபப்படு வானா... தடுப்பானா... ஒன்ஸ் மோர் தானே கேட்பான்.
பெண் உடல் மீதான இந்த அத்துமீறலுக்கு நாம் அதிக கனம் கொடுத்துவைத்திருக்கிறோம்இது தேவையில்லைஉதாரணமாகமனரீதியாக நமக்குப் பிடிக்காத எத்தனையோ செயல்களை நாம் செய்ய நேர்வதில்லையா..? உதாரணமாக ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்று வைத்துக்கொள்வோம்அந்த நிறுவனத்துக்கு நிறுவனருக்கு ஏன் மேலதிகாரிக்குக்கூட ஒரு அரசியல் இருக்கும்அதைத்தாண்டி அந்தப் பணியாளர் எதாவது செய்துவிடமுடியுமா என்ன... மாற்றுக் கருத்துகளையும் உயரதிகாரிகள் அனுமதிக்கும் அளவுக்கு அவரிடம் அனுமதி பெற்றுத்தானே ஒருவரால் வெளிப்படுத்த முடியும்அது ஒருவகையான இண்டலெக்சுவல் மெண்டல்  ஃபக்கிங்தானேஅவருக்கு ஒருவர் நின்னு கொடுத்துத்தானே ஆகவேண்டும்.
மனதுக்குப் பிடிக்காதநம் ஈகோவைக் காயப்படுத்தும்நம் கொள்கைக்கு விரோதமான எத்தனையோ விஷயங்களைச் செய்துதான் வருகிறோம்அதையெல்லாம் சர்வைவல் அல்லது தவிர்க்க முடியாத சமரசம்பொலிட்டிகல் கரெக்ட்னஸ் எனப் பல வழிகளில் நியாயப்படுத்திக்கொண்டு வாழத்தான் செய்கிறோம்ஆனால்உடல்ரீதியான அத்துமீறலையும் ஒடுக்குதலையும் மட்டும் பெரிதாக நினைக்கிறோம்குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் உயிரையும்விட மானம் பெரிதென்று பத்தாம் பசலித்தனமாகச் சொல்கிறோம்அது தேவையில்லைபாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் ஒரு பெண் கர்ப்பத் தடை மாத்திரையைப் பாதுகாப்புக்காகச் சாப்பிட்டுவிட்டுஒரு வாளி தண்ணீரை எடுத்து தலைவழியே ஊற்றிக்கொண்டு போய் விடலாம்.
அதைவிட முக்கியத் தேவையாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்திருமண பந்தத்துக்கு வெளியிலான உடலுறவுகளை நாம் இயல்பாக ஏற்றுக்கொண்டு முழுமையாக அனுமதிக்கவேண்டும்அதை நாம் தடுப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம்.
இப்படி ஒரு சமூகம் அனுமதித்தால் அனைவருமே அந்த சுதந்தரத்தை அனுபவிக்கவே விரும்புவார்கள்.
அனுபவிக்கட்டுமே அதில் என்ன தவறுபாலியல் நோய்கள் வராமல் தடுத்துக்கொண்டால் போதும்.
இது கிட்டத்தட்ட விலங்கு நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்அங்கு கூட இப்படியான சுதந்தரம் கிடையாதுஒரு பெண் விலங்குக்குத்தான் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறதுஅதோடு மனிதன் விலங்குகளைப்போல் உடலுறவை இனப்பெருக்கத்துக்கான செயலாகமட்டுமே நிறுத்திக் கொள்வதில்லைதாய்மையின் அடையாளமான முலை களையே அவன் காமப் பொருளாக நினைத்துக் கிளர்ச்சியுறும் அளவுக்கு பித்தம் தலைக்கேறி இருக்கிறான்விலங்குகள் இனப்பெருக்கத்துக்கென்று தனி மாதத்தை வைத்திருக்கின்றனஎஞ்சிய மாதங்களில் அந்த நினைப்பு இன்றித்தான் வாழ்கின்றனமனிதன் அப்படி இல்லைஅவனுக்கு நேரம் காலமே கிடையாதுஅப்படியான நிலையில் இந்த சுதந்தரம் தவறாகவே போய்முடியும்ஒருவேளை கலாசாரம்பண்பாடுஒருத்தனுக்கு ஒருத்தி என்று இயற்கை கொண்டுவந்தது எல்லாம்கூட மனிதனின் இந்த அத்துமீறலையும் அவனுக்கு இருக்கும் சாதக அம்சத்தையும் மட்டுப்படுத்தத்தான் போலிருக்கிறது.
*

No comments:

Post a Comment