Thursday 12 January 2017

துர்கா - 3

நான்கு பேரைப் பாலியல் பலத்காரம் செய்து கொன்றவனுக்கு ஆதரவாக துர்கா வாதாடுவது பெரும் பரபரப்பைக் கிளப்புகிறதுதொலைக்காட்சி சேனலில் அவருடைய பேட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
நிலையப் பணியாளர் : ஹலோ துர்கா மேடம் இருக்காங்களா?
துர்கா : துர்காதான் பேசறேன்.
டி.வி. : மேடம்... க்யூ சேனல்ல இருந்து பேசறோம்உங்களோட ஒரு பேட்டி எடுக்க விரும்பறோம்.
துர்கா : நல்லது... என்னோட ஆபீஸ்க்கு வர்றீங்களா..?
டி.வி.: இல்லை மேடம்... ஸ்டூடியோல வெச்சு எடுக்கலாம்அதுதான் சரியா இருக்கும்கார் அனுப்பிவைக்கறோம் மேடம்.
துர்கா : என் கிட்ட கார் இருக்கு நானே வர்றேன்ஆனா ஸ்டூடியோல நீங்க ரொம்ப நேரம் காக்க வைப்பீங்களே...
டி.விஅப்படியெல்லாம் ஆகாது மேடம்லைட்டிங்மேக்கப் போடறதுபிற பார்ட்டிசிபண்ட்ஸ் வர்றது இதுக்கெல்லாம் சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம்மத்தபடி நேரம் ஆகாது மேடம்.
துர்கா:  பொதுவா செலவை மிச்சம் பிடிக்கறதுக்காக மூணு நாலு ஒரே நேரத்துல டாக் ஷோக்களை ஷூட் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்சாயந்திரம் ஆறு மணிக்கு வரச் சொல்லிட்டு நைட் ரெண்டு மணிக்கு தான் ஷூட்டிங்கை ஆரம்பிப்பீங்கன்னு சொல்லியிருக்காங்க...
டி.வி. : உங்களை மாதிரி முக்கியமானவங்களை காக்க வைக்கமாட்டோம் மேடம்.
துர்கா : நான் எனக்காக மட்டும் பேசலை... காக்க வைக்கப்படறவங்களுக்காகவும் சேர்த்துத்தான் பேசறேன்எப்படி அவங்கல்லாம் அதை ஏத்துக்கறாங்கஇத்தனைக்கும் ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க துறையில பிரபலமானவங்க... ரொம்பவே சென்ஸிட்டிவானவங்க... சுயமரியாதை மிகுந்தவங்ககுறிப்பா கம்யூனிஸ்ட்டுங்க இதை எப்படி எடுத்துக்கறாங்க... ஆதிக்க சக்திகளையும் அதிகாரத்தையும் பார்த்தா பொங்காம அவங்களால இருக்கவே முடியாதே.
டி.வி.: அதெல்லாம் டி.வி. முகம் தெரியுதுன்னா அதுக்காக என்னவேணும்னாலும் தாங்கிப்பாங்கஅப்பறம் அமெரிக்க ஏகாதிபத்தியமே... கார்ப்பரேட் முதலாளிகளே... இந்துத்துவ  வீரியன் பாம்புக் குட்டிகளேன்னு கட்சி டயோசீஸ்ல என்ன சொல்லித் தர்றாங்களோ அதை மட்டும்தான் எதிர்ப்பாங்கஒரு ஆதிக்க சக்தியை எதிர்க்க இன்னொரு ஆதிக்க சக்தியோட துணையைப் பயன்படுத்தும் புரட்சிகர தந்திரம்ன்னு சொல்லி தன்னைத்தானே சமாதானமும்படுத்திப்பாங்க.
துர்கா : இதுக்குத்தான் கொள்கைப்பிடிப்புன்னு ஒண்ணு தேவை இல்லையா..?
டி.வி. (சிரித்தபடியேஆமாம் மேடம்.
துர்கா : ஆனா எனக்கு அப்படி எந்தக் கொள்கைப் பிடிப்பும் கிடையாதுஎனக்கு என் முகம் ஊர் பூரா தெரியணும்னு ஆசையும் கிடையாதுநான் வர்றேன்லைட்டிங் எல்லாம் உங்க ஸ்டாஃப்களை வெச்சு சோதிச்சு முடிச்சிக்கோங்கமேக்கப் எனக்கு நானே போட்டுக்கறேன்அப்பறம் என்ன மாதிரியான பேட்டி அது..? ஒன் டு ஒன்னா... டிஸ்கஸனா..?
டி.வி. : ஒன் டு ஒன் தான் மேடம்.
துர்கா : நல்லதுதான்உங்களுக்குக் கேள்விகளை யார் எழுதிக் கொடுப்பாங்க?
டி.வி. : எங்க டீம் இருக்கு மேடம்.
துர்கா : அதுல யாரெல்லாம் இருப்பாங்க... ஒண்ணு செய்யுங்கஎன்னோட ஃபீல்டுல இருக்கற சில எக்ஸ்பர்ட்ஸோட போன் நம்பர் தர்றேன்நீங்க அவங்களை கன்சல்ட் பண்ணி கேள்விகளை தயார் பண்ணிக்கோங்க.
டி.வி. : நானே இதைக் கேக்கணும்னு தான் இருந்தேன் மேடம்.
துர்காநல்லது... என்னைக் காலி பண்ணனும்னு நினைக்கறவங்களோட போன் நம்பரா பார்த்துத் தர்றேன்அவங்க கிட்ட இருந்து நிறைய கேள்விகளை கேட்டு வாங்கிக்கோங்கஅப்பறம் நிகழ்ச்சியோட ஃபைனல் வெர்ஷனை ஒளிபரப்பறதுக்கு முன்னால நான் பாக்கணும்.
டி.வி. : ஓகே மேடம்நீங்க சொல்ற எல்லாத்தையும் செய்துடலாம்இந்தியா மட்டுமல்ல உலகமே கூர்ந்து கவனிக்கும் இந்த வழக்குல ஆஜராகற நீங்க எங்களுக்குன்னு எக்ஸ்க்ளூசிவ்வா நேரம் ஒதுக்கிப் பேசறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு மேடம்நாளைக்கு மாலை ஆறு மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்துடுங்க.
துர்கா : நல்லது.
*

No comments:

Post a Comment