Thursday 12 January 2017

துர்கா - 1

உச்ச நீதிமன்ற நீதிபதி தன் அறையில் அமர்ந்திருக்கிறார்சுமார் ஐம்பது வயதுக்கு மேலிருக்கும்பாப் தலைமுடிவிபூதிக்கீற்றுக்கு மேலாக குங்குமப் பொட்டு,  கறுப்பு பிரேம் போட்ட கண்ணாடிகதர் புடவையில் கம்பீரமும் கனிவும் கலந்த தோற்றம்அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் படித்துக்கொண்டிருக்கும் ஃபைலில் இருந்து தலையை நிமிர்த்தாமலேயே, ‘யெஸ் கமின்’ என்கிறார்.
உதவியாளர் அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து வழக்கறிஞர் துர்காவை அழைத்து வந்திருப்பதாகச் சொல்கிறார்.  ஃபைலைப் பார்த்தபடியேவரச் சொல் என்கிறார் தலைமை நீதிபதி.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க துர்கா கறுப்புக் கோட்டைக் கையில் பிடித்தபடி உள்ளே நுழைகிறார்.
 நீதான் அந்த துர்காவா...?
ஆமாம் மேடம்.
துர்காவும் கறுப்பு பிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்த்து மெலிதாகப் புன்முறுவல் பூக்கிறார்.
எங்க தலைமுறைல கண்ணாடிங்கறது முதுமையின் அடையாளம்இப்போ அது ஃபேஷனாயூத்தின் ஸ்டைலாக ஆகியிருக்கு.
வரலாறு திரும்பும்போது நவ நாகரிகமும் திரும்பித்தானே ஆகவேண்டும் என்று சொல்லி துர்கா சிரிக்கிறார்.
அதனால்தான் பழங்குடி சமுதாயத்தை நோக்கி நாம் போகவேண்டும் என்று சொல்கிறாயா... சரி சரி உட்காரு... என்கிறார்.
தேங்யூ மேடம் என்றபடியே அமர்கிறார் துர்கா.
இப்போ நீதிபதியா உன்னை சந்திக்கக் கூப்பிடலைஉன்னோட வெல்விஷரா சில விஷயங்கள் சொல்றதுக்காகக் கூப்பிட்டேன்.
உங்கள் அக்கறைக்கு நன்றி மேம்.
உதவியாளர் இருவருக்கும் காஃபி கொண்டுவந்து தருகிறார்.
காபி அருந்தியபடியே பேச ஆரம்பிக்கிறார்கள்.
உன் கிட்ட சில விஷயங்கள் வெளிப்படையா பேசலாம் இல்லையா...
தாராளமா மேடம்... நீங்க எனக்கு அம்மா மாதிரி...
சந்தோஷம்மா... அப்படியான ஒரு மனநிலைலதான் உன் கிட்ட பேசணும்னு சொல்லிக் கூப்பிட்டிருக்கேன்நான் கொஞ்சம் பழைய காலத்து ஆளுதான்... ஏதாவது எல்லை தாண்டிப் பேசறதா நீ நினைச்சா சொல்லிடும்மா...
மேம்... நீங்க என்னை என்ன வேணும்னாலும் சொல்லலாம்நீங்க எனக்கெல்லாம் ஒரு ரோல் மாடல் மேடம்ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு இண்டர்வியூல என்னை லேடி ராம் ஜெத்மலானின்னு சொன்னாங்க... நான் அதை மறுத்துஉங்களோட வாரிசுன்னு சொன்னா ரொம்ப பெருமைப் படுவேன்னு சொன்னேன் மேம்.
டி.வி. வந்த உன்னோட இண்டர்வியூ நானும் பார்த்தேன்மா... வெரி நைஸ் இண்டர்வியூநான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன்உன்னோட வாழ்க்கை பற்றி நீ சொன்னதையெல்லாம் கேட்டப்போ ரொம்பவும் பெருமையா இருந்ததும்மாஇவ்வளவு பிரில்லியண்ஸும் ஃபோர்தாட்டும் பிரைட் ஃப்யூச்சரும் உள்ள நீ ஏன்மா இந்த கேஸை எடுத்துக்கணும்னு ஆசைப்படறநீ சொன்ன ஆர்க்யூமெண்ட்ஸ் எல்லத்தையும் கேட்டேன்அதெல்லாம் தியரிம்மாஇந்த கேஸ் நிஜம்நாலு உயிர்ம்மா...
மேம்... நீங்க தப்பா நினைக்கலைன்னா...
இல்லைம்மா... நீ இந்த கேஸை ஏன் எடுத்து நடத்தறன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியலை... கீழ் கோர்ட்ல மரண தண்டனை கொடுத்திருக்காங்க... மேல் கோர்ட்டுக்கு அப்பீலுக்குப் போனபோது ஒண்ணு பத்தாதுன்னு ரெண்டு மரண தண்டனை கொடுத்திருக்காங்கபொதுவா இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்துப் பார்த்திருப்ப... கேட்டிருப்ப... இங்க ரெண்டு மரண தண்டனை கொடுத்திருக்காங்கநானும் அதையேதான் கொடுக்கப்போறேன்.
ஒரு வாரத்துக்கு முன்னால பிரஸிடன்ண்டை ஒரு மீட்டிங்ல பார்த்தேன்ரெண்டு மரண தண்டனையையும் கட்டாயம் நிறைவேத்தணும்செத்த பொணத்தை எடுத்து ரெண்டாவது தடவை தூக்குல போடுங்க அப்படின்னு கொதிச்சார்வயசான மனுஷர்... வாழ்நாள் பூரா பணிவுநிதானம்பொறுமைன்னு வாழ்ந்தவர்... அவர் அந்த அளவுக்கு எமோஷனலா பேசி யாரும் கேட்டிருக்கவோ பாத்திருக்கவோ மாட்டாங்க.
நாம இந்த விஷயத்தை வேற கோணத்துல பாக்கணும்னு  ஆசைப்படறேன் மேடம்.
ஓநாயை எந்தக் கோணத்துல பார்த்தாலும் ஓநாய்தானம்மா...
அப்படியில்லை மேம்... உங்க மேல முழு மரியாதையோடவே உங்களோட கருத்தை மறுக்கறேன்.
இல்லைம்மா... நான் சொல்ல விரும்பினது என்னன்னா... தீர்ப்பு ஏற்கெனவே எழுதி வெச்சாச்சுகோர்ட்ல நடக்கப்போறது வெறும் கண் துடைப்புதான்நாலு பொண்ணுங்களை கற்பழிச்சுத் தன் வீட்டுக்குள்ள புதைச்சு வெச்சிருக்கான்அதுல ஒரு பொண்ணுக்கு வயசு பத்து கூட ஆகலை... அந்த குழந்தையோட பேர் என்ன...?
வடிவு.
ஆமாம்வடிவு... வடிவுக்கரசிஅர்த்தம் தெரியுமா அந்தப் பேருக்கு?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உறுப்பு அழகா இருக்கும்சிலருக்கு மட்டும்தான் எல்லாமே அழகாவடிவா இருக்கும்அப்படி எல்லா உறுப்புகளுக்கும் அரசின்னு அர்த்தம்.
அந்தக் குழந்தையும் உயிரோட இருந்திருந்தால் அப்படியானதா வந்திருக்கக்கூடும் இல்லையா... அப்படியான சிறுமியைச் சிதைச்சுக் கொன்னவனுக்கு ஆதரவா எப்படிம்மா உன்னால ஆஜராக முடியுது.கேநான் உன் கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கறேன்நீ அவன் நிரபராதின்னு நிஜமாவே நினைக்கறியா..?
இல்லை மேடம்.
(சற்று அதிர்ந்துஅப்படின்னா ஏன் அந்த கேஸ்ல வாதடற?
அவன் குற்றவாளிதான்ஆனா அவனுக்கு தண்டனை தரக்கூடாது.
என்னம்மா சொல்ற நீ... நிச்சயமா... நீ ஏன் இந்த கேஸை எடுத்திருக்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்யாராவது பிளாக் மெயில் பண்ணறாங்களான்னு எனக்கு பயமா இருக்கும்மாஅதான் உன்கிட்டப் பேசணும்னு சொன்னேன்ஏன்னா உன்னை மாதிரி சென்ஸிபிளான ஒருவர் இப்படி இன்சென்ஸிபிளான காரியத்தை ஏன் செய்யணும்னு எனக்கு புரியவே இல்லைம்மா.
மேம்... நீங்க தப்பா நினைக்கலைன்னா அதை கோர்ட்லயே சொல்றேனே.
இல்லைம்மா நான் என்ன சொல்லவர்றேன்னா....
காஃபி ரொம்ப நல்லா இருந்தது மேடம் (என்று சொல்லியபடியே துர்கா எழுந்துகொள்கிறார்).
நீதிபதி அவளை ஒரு நிமிடம் பரிதாபமாக உற்றுப் பார்க்கிறார்பிறகு பெருமூச்சுவிட்டபடியே ஓகே... நீ போகலாம் என்று சொல்லி எழுந்துகொள்கிறார்வாசல் வரை வந்து வழியனுப்புகிறார்உனக்கு ஏதாவது உதவி தேவைன்னா என்கிட்ட எப்பன்னாலும் வரலாம்ஆல்  பெஸ்ட்சேஃப்கார்ட் யுவர்செல்ஃப் ஃப்ரம் தட் சிங்கிங் ஷிப்.
 வில் ரோ இட் டு அவர் ஷோர் மேம்.
அவர் ஷோர்..?
யெஸ் மேம்.
.கேபெஸ்ட் ஆஃப் லக்.
என்று சொல்லி தோளில் தட்டி அனுப்பிவைக்கிறார்.
*

No comments:

Post a Comment